சத்தியமங்கலம் நகராட்சி தினசரி சந்தை வளாகத்தில் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் - நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை.,

சத்தியமங்கலம் நகராட்சி, நகர் மன்ற கூட்டம், நகர் மன்ற தலைவர் ஆர்.ஜானகிராமசாமிதலைமையில் நகராட்சி ஆணையாளர் செல்வம், துணைத் தலைவர் நடராஜ் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற் றது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப் பினர்கள் தங்களது வார்டுக்குட்பட்ட பொது மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் கீழ்கண்ட விவாதங்கள் நடை பெற் றது.வேலுசாமி(தி.மு.க.):- புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்றும், தினசரி மார்க்கெட்டில் விவசாயிக ளும், காய்கறிகளை விற்பனைக் காக கொண்டு வருகின்றனர். அவர் களுக்கும் இடம் ஒதுக்கி தர வேண் டும். அங்கு கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால்அமைக்கப்படவேண்டும் மேலும் மார்க்கெட் வளாக சுற்று சுவரை பராமரிக்க வேண்டும். தலைவர் ஜானகி ராமசாமி - பணி கள் தற்போது நடைபெற்று கொண் டிருக்கிறது. விரைவில் மார்க்கெட் திறக்கப்படும். விவசாயிகளுக்கும் உரிய இடவசதி செய்து தரப்படும். முறையான வடிகால் வசதி அமைக் கப்படவுள்ளது.சுற்றுச்சுவர்அமைக்க ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடு க்கப்படும். நாகராஜன்- (கொ.ம.க). டெண்டர் டேவணித் தொகையை ...