மொடக்குறிச்சி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மொடக்குறிச்சி எம் எல் ஏ..

 ஈரோடு மாவட்டம் முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி  வழங்கும் நிகழ்ச்சியில்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  சி  சரஸ்வதி கலந்து கொண்டு 94 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து பேசினார்.



 மொடக்குறிச்சி பேரூராட்சி ஓலப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் அமைந்துள்ள முன்பகுதியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்களால் பூங்கா அமைத்து தரப்பட்டுள்ளது.




 மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி 115 மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்து பேசினார்.





 கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின்விலையில்லா மிதிவண்டி 175 மாணவ மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்து பேசினார்.


 






அவல்பூந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி கா பழனியம்மாள் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (2022-2023)  பெற்ற இவரை நேரில் சந்தித்து  கௌரவித்தார்.



 மொடக்குறிச்சி பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்களின் தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து கலையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நேரில் சென்று பார்வையிட்டர்.



 மேலும் இந்நிகழ்வில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, முகாசி அனுமன்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஏ பி பெரியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர், பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ், ஒளிரும் காளமங்கலம் பவுண்டேஷன் செயலாளர், உங்க தலைவர், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளூர் பிரமுகர்கள்,   கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்