Posts

Showing posts from May, 2024

கனமழை எதிரொலி- உயரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்-விவசாயிகள் மகிழ்ச்சி.

Image
ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் அருகே,பவானிசாகர்அணைஉள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய மண் அணை ஆகும். மேலும், தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைகளில், இதுவும் ஒன்றாகும்.இந்தஅணையில்இருந்து, வெளியேற்றப்படும் நீர் ஈரோடு, திருப்பூர் கரூர் மாவட்ட மக்களுக்கு, குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2.07 இலட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களும் பயன்பட்டு வருகிறது. இங்கு  முறையே, அரக்கன் கோட்டை, தடபள்ளி வாய்க்கால் மற்றும் காலிங் கராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்கால் மூலம்,விவசாயநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைக்கு, பவானி ஆறு மூலம் வரும் நீர்,பில்லூர் அணையில் சேமிக்கப்பட்டு,உபரிநீர் இந்த அணைக்கு வரும். மேலும், மேயாறு மூலமும் நீர்வரத்து வருகிறது.கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணை, நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக,பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து, அதிகரித்த வண்ணம் உள்ளது.  பவானிசாகர் அணையின் மொத்த முழுகொள்ளளவான105அடிக்கு,  அணையின் நீர் மட்டம் தற்போது இன்று காலை 10 மணி நிலவரப்படி, 52.65 அடி உயரம் உள்ளது.தற்போது அணையி...

தொடர் கேடு விளைவிக்கும் திருக்காஞ்சி நித்யா பேக்கேஜ் தொழிற்சாலையை மூடவேண்டும் இல்லையேல் போராட்டம் ஆர்.எல்.வி பேரவை மாநில பொதுச்செயலாளர் மாஸ்கோ அறிக்கை

Image
மனித இனத்திற்க்கே கேடு விளைவிக்கும் திருக்காஞ்சி நித்யா பேக்கேஜ்  தொழிற்சாலையை மூடவேண்டும்  இல்லையேல் நிறுவனத்தலைவர் ஆர்.எல் வெங்கட்டாராமன் அனுமதியுடன் போராட்டம் நடத்துவோம் ஆர்.எல்.வி பேரவை மாநில பொதுச்செயலாளர் மாஸ்கோ அறிக்கை  புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஒதியம் பட்டு திருக்காஞ்சி ரோட்டில் நித்யா பேக்கேஜ் லிமிட்டெட் கம்பனி உள்ளது. இந்த கம்பனியில் இருந்து வெளியேற்றக்கூடிய நச்சுப்புகை மற்றும் நச்சுக்கழிவுகள் , சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. கம்பெனியை சுற்றி 20 கிராமங்களுக்கு மேல் உள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் கம்பெனியிலிருந்து வெளிவரக்கூடிய நச்சுப்புகையினாலும் நச்சுக்கழிவுகளாலும் சுகாதார சீர்க்கேட்டால் அவதிப்படுகின்றனர். இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் , டிபி ,ஆஸ்த்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பகல் முழுக்க கூலி வேலை செய்துவிட்டு நிம்மதியாக தூங்க வீட்டுக்கு வந்தால் , அவர்களை, இந்த தொழிற்சாலையின் நச்சு புகையினால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இந்த மூச்சு திணறல் ஏற்பட்டு நிறையபேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அதுமட...

மழை வெள்ளத்தில் பாப்பாங்குட்டை மக்கள் பாதிப்பு... பள்ளியில் தங்க வைத்து உணவு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி

Image
  நம்பியூர் அருகே எம்மாம் பூண்டி பாப்பாங் குட்டையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அவர்களை பாதுகாப்பாக குப்பி பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைத்து உணவு ஏற்பாடு சிறப்பாக செய்து கொடுத்தார் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி  வருவாய் வட்டாட்சியர் மாலதி நில வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி  கிராம நிர்வாக அலுவலர் சுமதி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் பெரியகுளம் கனமழையால் நிரம்பி வருவதை பொதுமக்களுடன் பார்வையிட்ட பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி.சண்முகம்

Image
  ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் பெரியகுளம் கனமழையால் நிரம்பி வருவதை பொதுமக்களுடன் பார்வையிட்ட பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி.சண்முகம். நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பின, அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு  இச்சிபாளையம் மற்றும் கெடாரை, சந்தன நகர் பகுதியில் பெய்த கனமழையால் குளங்கள் முழுமையாக நிரம்பி மழைநீர்  வெளியேறி நம்பியூர் அருகே உள்ளஎலத்தூர் பெரியகுளம் 25 ஆண்டுக்கு பிறகு நிரம்பி வருகிறது.இந்த பெரியகுளம் ஆனது 100 ஏக்கர் 77 சென்டில் உள்ளது.எலத்தூர்,கண்ணாங் காட்டு பாளையம், கரட்டுப்பாளையம்,செட்டிபாளையம்,பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் உள்ளது.குளம்முழுமையாக நிரம்பி நீர்வழி பாதையில் வெளியேறும் அதனால் அப்பகுதி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் ஆலோசனையின் படி எலத்தூர் பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி சண்முகம்,பொதுமக்களுடன் பார்வையிட்டு ஆக்கிரம...

சத்தியமங்கலம் அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்தேக்க பகுதியில், உயிருக்கு போராடிய ஆண் யானை சிகிச்சை பலனின்றி மரணம்.

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில், பெரும்பள்ளம் நீர் தேக்க அணை உள்ளது. இந்த பகுதியில், கடந்த பத்து நாட்களாக, 30 வயது மதிக்க மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, உடல்நலம் குன்றிய நிலையில் அந்த பகுதியிலேயே, நடமாடி வந்துள்ளது. அங்குள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து, பயிர்களை மேய்வதும், நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் அருந்தியும் நடமாடி வந்துள்ளது. மேலும் அங்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற கால்நடைகளையும் துரத்தி அடித்து வந்தது. மிகவும் உடல்நலம் குன்றி நடமாடி வந்த அந்த ஆண் யானை, இன்று காலை, திடீரென அணையின் நீர் தேக்க பகுதியில் படுத்து விட்டது. உடனடியாக, கிராம மக்கள் சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிசாமி, கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட 15-க் கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர் கள் சம்பவ இடத்திற்கு வந்து, யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள்.  ஆண் யானைக்கு குளுக்கோஸ், மருந்து மற்றும் குடிப்பதற்கு தண்ணீரை கொடுத்தும், யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கை, கால்களை அசைத்து வரும் அந்த ஆண் யானை,  எழ...

பத்திரிக்கைகள் செய்தி எதிரொலி மயிலாடுதுறையில் இடிந்து விழுந்த துலா கட்ட காவிரிக் கரை சுவர் சீரமைப்பு பணி துவக்கம்

Image
பத்திரிக்கைகள் செய்தி எதிரொலி; மயிலாடுதுறையில் இடிந்து விழுந்த துலா கட்ட காவிரிக் கரை சுவர் சீரமைப்பு பணி துவக்கம்!   மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் உள்ள தென்கரையின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரங்களில் பெய்த மழையால் திடீரென்று பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மிகவும் புனிதமான இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் உடனடியாக தடுப்பு சுவர் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துலாக் கட்ட இடிந்த பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார். அதனை அடுத்து அப்பகுதியில் ஹிட்டாச்சி ஜேசிபி இயந்திர உதவியுடன் இடிபாடுகளை அகற்றி பணிகளை பொதுப்பணித்துறையினர் துவக்கினார்கள். விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் பத்திரிக்கை, செய்தி ஊடகத்துறை யினருக்கும் பொதுப்பணித்துறையினருக்கும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உள்பட பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
*மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது! உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*   மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதி மிகவும் புனிதமானது. காசிக்கு நிகரானது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் புனிதமான கங்கை இங்கே வாசம் செய்வதாக ஐதீகம். கங்கையின் பாவத்தை போக்கிய காரணத்தால் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் புனித நீராடும் நிகழ்வு துலா கட்டத்தில் நடைபெறுவது வழக்கம். இங்கு 2017 ஆம் ஆண்டு காவேரி மகா புஷ்கரம் விழா விழா சிறப்பாக நடைபெற்றது.12 நாட்கள் நடைபெற்ற விழாவில் சுமார் 25 லட்சம் பக்தர்கள், சங்கராச்சாரியார்கள், ஆதீன மடாதிபதிகள், துறவியர்கள் மற்றும் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள். இப்படிப்பட்ட பெருமைமிக்க துலாக் கட்ட பகுதியை முழுமையாக பராமரிக்க வேண்டும், எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென்று தற்பொழுது துலா கட்டத்தின் தெற்குப்புற கிழக்குப் பகுதியில் மழையினால் அரிப்பு ஏற்பட்டு...

*பி என் பி பாய்ஸ் நடத்திய கபாடி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிய கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.. மகுடேஸ்வரன் அவர்களுக்கு பி என் பி பாய்ஸ் கமிட்டி உறுப்பினர்கள் நிஷாந்த் ரித்திஸ் செந்தூரன்பவண் கார்த்திக் நன்றி தெரிவித்தனர்*

Image
 பி என் பி பாய்ஸ் நடத்திய கபாடி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிய கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.. மகுடேஸ்வரன் அவர்களுக்கு         பி என் பி பாய்ஸ் கமிட்டி உறுப்பினர்கள் நிஷாந்த் ரித்திஸ் செந்தூரன்பவண் கார்த்திக் நன்றி தெரிவித்தனர் முதல் பரிசு:DO OR DIE - கொளப்பலூர்   இரண்டாம் பரிசு: RAVI BROTHERS -ஈஞ்சரம் மூன்றாம் பரிசு: SKSC - மலையபாளையம்  நான்காம் பரிசு: KKC - பெருந்துறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடி மின்னலுடன் மிக கனமழைக்கான "ஆரஞ்சு" எச்சரிக்கை - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

Image
 தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடி மின்னலுடன் மிக கனமழைக்கான  "ஆரஞ்சு" எச்சரிக்கை - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை மற்றும் மிக கனமழைக்கான "ஆரஞ்சு" எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு 15.05.2024 முதல் 17.05.2024 வரை 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கையும் 18ம் தேதி மிக கனமழைக்கான "ஆரஞ்சு" எச்சரிக்கையும் மற்றும் 19ம் தேதி கனமழை எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும். மேலும் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாத...

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்கநம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படிஊராட்சி மன்ற தலைவர்மகுடேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது*

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க  நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி செரங்காட்டுப்புதூர் காலனியில் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழாவிற்கு ரூ. 5000 நன்கொடையும் மற்றும் பள்ளிபாளையம் புது காலனி மற்றும் சொக்குமாரிபாளையம் காலனியில் மழை வேண்டி யாகம் செய்ய ஓம் சக்தி கோயில் பக்தர்களுக்கு 2 சிப்பம் அரிசி ஊராட்சி மன்ற தலைவர்   மகுடேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு. பொங்கியாத்தான் அவர்கள் வார்டு உறுப்பினர் திரு. செந்தில் திரு. முருகேசன்(சுமதி) மற்றும் திரு. சென்னியப்பன் (மரகதாள்) கோயில் பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா வசந்தம் நகர் முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பட்டம் பாளையம் செகரட்டரி ராமசாமி அவர்களின் புதல்வி கவுசல்யா அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர்விருது *

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா வசந்தம் நகர் முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பட்டம் பாளையம் செகரட்டரி ராமசாமி அவர்களின் புதல்வி கவுசல்யா அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கிய சிறப்பித்த தருணம் அவர்பணி சிறக்க நம்பியூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

Image
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கவுசல்யா பால்பாண்டி தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறதுள்ளனர்.  மூன்று குழந்தைகளும் தலா 1.5,1.45,1.55 கிலோ எடையுடன்,குறைமாதத்தில் பிறந்து மூச்சு திணறலுடன் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் டிரிப்ளட் 2 ம் குழந்தை செயற்கை சிகிச்சை கருவியில் ஒரு வாரமும், மற்ற டிரிப்ளட் குழந்தைகள் சீபேப் சுவாச கருவியிலும் வைத்து ,குழந்தைகள் நலதுறை மருத்துவர் உமாசங்கர் தலைமையிலான பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள்,செவிலியர்கள் சிகிச்சையை அளித்தனர் . குழந்தைகள் மூவரும் உடல் எடை கூடி தேறிய நிலையில் 25 நாட்கள் சிகிச்சை முடிவடைந்த நிலையில்  பெற்றோரிடம் வீட்டிற்க்கு  அனுப்பபட்டது. மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) முருகேசன் மருத்துவர்கள், பணியாளர்களின் சிறப்பான சிகிச்சையை பாராட்டினார்.

கேதர்நாத் கோவில் நடை திறப்பு... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Image
 இமயமலையில் இருக்கும் ஜோதிர்லிங்க கோவிலான கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட்ட திறக்கப்பட்டது. முதல்நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டனர்.  இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் கேதர்நாத் கோவில் உள்ளது. இந்த கோவில், சார்தாம் என அழைக்கப்படுகின்ற நான்கு புண்ணிய தலங்களில் முக்கியமான கோவில் ஆகும். மேலும் கேதர்நாத் கோவில் ஜோதிர்லிங்க கோவிலாகவும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் முழுமையாக பனி மூடிவிடும் என்பதால் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் மட்டுமே கேதர்நாத் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்க்ள். கேதர்நாத் கோவில் - வீடியோ  இந்த ஆண்டு அட்சய திருதியை நாளான இன்று கோவில் நடை திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி இந்த விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். மேலும் கேதர்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்களும் திரண்டு இருந்தார்கள். கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஹெலிகாப்டரில் கோவில் மீது மலர்கள்...

பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.98.44 லட்சம் பணம்...448 கிராம் தங்கம்... 625 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை...

Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில்,உலகப்பிரசித்தி பெற்ற, பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு,அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை, காணிக்கையாக உண்டியலில் செலுத்துவது வழக்கம்.  உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை சேகரிக்க, கோவில் நிர்வாகம் மூலம் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் நேற்று (9-5.24)  உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோயில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான இரா.மேனகா தலைமையில்,  பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான சு.சுவாமிநாதன், சத்தி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தே. சிவமணி, பரம்பரை அறங்காவ லர்கள்.வீ.புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், புஷ்பலதா கோதண்ட ராமன், டி.அமுதா, எம்.பூங்கொடி மற்றும் கண்காணிப்பாளர், பால சுந்தரி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.  கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த உண்டியல் காணிக்கை என்னும் ப...

6 டன் எடையுள்ள தேரை தோள்களில் 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்த பக்தர்கள்

 மனிதர்களே சக்கரமாக மாறும் தூக்கு தேர் - 6 டன் எடையுள்ள தேரை தோள்களில் 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சுற்றி வந்தனர் - பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் மேளம், தப்பாட்டம், பட்டாசு முழங்க சூரமாகாளியம்மன் கோயிலில் இன்று மாலை வெகு விமரிசையாக நடந்த வித்தியாசமான தூக்கு தேர் திருவிழா  தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு சூரமாகாளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும்  வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் மிக முக்கியமான, வித்தியாசமான திருவிழா தேர் தூக்கும் திருவிழா ஆகும். தூக்குதேர் திருவிழா இன்று மாலை வெகு விமரிசையாக நடந்தது. பொதுவாக தேர் என்பது பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். ஆனால் இங்கு தேருக்கு சக்கரம் இல்லை. மனிதர்களே சக்கரமாக மாறி சுமார் 6 டன் எடையுள்ள தேரை இந்த கிராமத்தைச் சேர்ந்த  சுமார் 300க்கும் மேற்பட்டோர் தங்களது தோள்களில் தூக்கிக் கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் கோயிலை சுற்றி வந்தனர். இந்...

சேலம் இரும்பாலையில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த வயதான தம்பதி

 சேலம் இரும்பாலையில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த வயதான தம்பதி. சேலம் மாவட்டம் இரும்பாலை அடுத்துள்ள மாரமங்கலத்துப்பட்டி ஓம் சக்தி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ஜெகதாம்பாள் (65) இவர்களுக்கு குழந்தை இல்லை. நாச்சிமுத்துவின் தம்பி வெங்கடாசலம் வயது (64) தனது அண்ணன் கடந்த ஒரு வாரமாக தனக்கு போன் செய்யாததால் சந்தேகம் அடைந்து அவரைப் பார்ப்பதற்காக இன்று காலை வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது இதை அடுத்து வெங்கடாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தனர் அப்போது நாச்சிமுத்து அவரது மனைவி ஜெகதாம்பாள் ஆகியோர் உடலில் துணி இன்றி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நாச்சிமுத்து மற்றும் அவரது மனைவி ஜெகதாம்பாள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்ற...

செக்குப்பாளையம் மாரியம்மன்,மாகாளியம்மன்கோவில்களில் அம்மாவாசை பூஜை

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் கெட்டி செவியூர் ஊராட்சியில் செக்குப்பாளையம் விநாயகர், மாரியம்மன்,மாகாளியம்மன், செல்லாண்டியம்மன்,நாட்றாயன் வகையறா கோவில்களில் அம்மாவாசை பூசை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதுசமயம் கோவில் திருபணிகள் செய்தல் சார்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.செக்குப்பாளையம், வாணிப்புத்தூர், கள்ளியங்காடு, ஓடக்காடு, குள்ளங்காடு, வரப்பனங்காடு,அம்மன் கோவில்பதி, போக்குவரத்து நகர்,செட்டியாம்பாளையம்,பாப்பாங்காடு, பள்ளிபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து  இக்கோவிலுக்கு சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக கெட்டிச்செவியூர் பஞ்சாயத்து தலைவர் மகுடேஸ்வரன்  கலந்து கொண்டு கோவில் திருப்பணிகள் சார்ந்த   ஆலோசனைகளை வழங்கினார்கள். செக்குப்பாளையம் கொத்துக்காரர் ஆசிரியர் சந்திரசேகரன், சின்னசாமி, சோமசுந்திரம், ஈஸ்வரன், ஓடக்காடு தண்டபாணி மற்றும் ஊர் மக்கள்  தலைவர் மகுடேஸ்வரனுக்கு மாலையணிவித்து பிரசாதம் வழங்கினர்.

சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
*சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க  சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்  கோரிக்கை!*                  காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் பழமொழிக்கு ஏற்ப தற்போதைய அதீத சூரிய ஒளியை பயன்படுத்தி மின் உற்பத்தியை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டு கோடை காலத்திலும் அதிகரித்து கொண்டே வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு பல வழிகளில் மின் உற்பத்தியை பெருக்க வேண்டியது மிக அவசியமாகும். அந்த வகையில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 2024ல் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வெப்ப அலை வீசுவதுடன் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து நீடித்துள்ளதால், இப்படிப்பட்ட நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்ற வானிலை ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிப்பதால் உடனடியாக சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில்  அரசு இறங்க வேண்டும். குறிப்பாக அரசின் சார்பில் சில வட மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது போல மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பேனல்களை அமைத்து அதிலிருந்த...

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்...திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்

Image
திருப்பூரில் பாரம்பரியமிக்க பள்ளியான நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 94.4 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவன் ஹபிபுர் ரகுமான் 600க்கு 571 மார்க் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். ராகுல் 558 மார்க் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். 557 மார்க் பெற்ற தர்ஷன் மூன்றாம் இடத்தையும், 555 மார்க் பெற்ற தினேஷ் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.  மேலும் 14 பேர் 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில்நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.  கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவர்  நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4 பேர், பொருளியல்  பாடத்தில் 3 பேர், கணினி அறிவியல் பாடத்தில் ஒருவர்,  வணிகவியல்  பாடத்தில் ஒருவர் 100க்கு 99 மார்க் பெற்றுள்ளனர்.  வணிகவியல் பாடத்தில் 19 பேர் கணக்குப்பதிவியலில் 18 பேர், ம் தமிழில் 15 பேர்,  கணினி பயன்பாடுகள் பாடத்தில் 15 பேர், கணினி அறிவியல்பாடத்தில் 8 பேர் பொருளியல் பாடத்தில் 6 பேர், ...

சேலம் மாவட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம்

Image
 சேலம் மாவட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ஊட்டி சென்றுள்ளனர். திரும்பி வரும் போது கோபி சத்தி மெயின் ரோடு காசிபாளையம் அருகே ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் அவர்கள் வந்த பஸ்  மோதி 13 பேர் காயம் அடைந்தனர். கோபி உட்கோட்ட கடத்தூர் காவல்துறையினர் மற்றும் கவுந்தப்பாடி நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விபத்தில் காயமுற்ற மாணவர்கள் அரசு மருத்துவமனையில் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர்.  இந்த சம்பவம் அங்கிருந்த பொது மக்கள், நோயாளிகள் மனதை நெகிழச் செய்தது.

மாநில அளவிலான யுவா கபடிப்போட்டியில் திருப்பூர் ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அணி பங்கேற்பு

Image
 மாநில அளவிலான யுவா கபடிப்போட்டியில் திருப்பூர் மாவட்ட ஆண்கள் அணி பங்கேற்பு... கபடிக்கழகம் சார்பில் சீருடைகள், உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க திருப்பூர் மாவட்ட ஆண்கள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வழியனுப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. சென்னை, பொன்னேரியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் வளாகத்தில்,  25 வயதுக்கு உட்பட்ட சீனியர் பிரிவு ஆண்களுக்கான மாநில அளவிலான யுவா கபாடிப்போட்டிகள்  நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்கின்றனர். ஏ பிரிவு மற்றும் பிபிரிவு என இரு பிரிவுகளில் தலா எட்டு அணிகள் வீதம் கலந்து கொள்கின்றன. லீக் முறைப்படி நடைபெறும் போட்டிகள் யாவும் செயற்கை தளத்தில் நடைபெறுகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 20 லட்சம் உள்பட பரிசுக்கோப்பைகள், சான்றிதழகள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.  தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் பொருள...

மயிலாடுதுறையில் மே தின விழாவில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்று கொடியேற்றினார்

Image
*மயிலாடுதுறையில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பொது தொழிலாளர் சங்க மே தின விழாவில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்று கொடியேற்றினார்!*                  மயிலாடுதுறையில் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் 39வது ஆண்டு மே தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சங்கத் தலைவருமான ஜெகவீரபாண்டியன் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வரவேற்புரையாற்றினார். விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா.எம். முருகன் பங்கேற்று மே தின கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தியசீலன், தலைமை செயற்குழு உறுப்பினர் பெருமங்கலம் இராம.இளங்கோவன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஞான.இமய நாதன்,முருக மணி, மூவலூர் மூர்த்தி, நகர் மன்ற தலைவர் குண்டாமணி என்கின்ற என். செல்வராஜ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திருமணஞ்சேரி இரா. மனோகரன், சுரேஷ் பொ...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரேகுடும்பத்தை சேர்ந்த (இரு குழந்தைகள் உள்ளிட்ட ) 4 பேர் பலி.

Image
ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலம் அரு கே ஏரங்காட்டூர் சாலையில், நெசவா ளர் காலனி என்ற இடத்தில், கரூரில் இருந்து சிறுமுகை, ஜடையம்பாளை யம் நோக்கி சென்ற காரும், பவானி சாகர் தனியார் உணவகத்தில் இரு ந்து, சத்தியமங்கலம்  நோக்கி வந்த காரும், எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சிறு முகை நோக்கி சென்ற காரில்பயணம் செய்த, சிறுமுகை ஜடையம்பாளை யத்தை சேர்ந்த விவசாயியும், கொசு வலை மற்றும் ஜன்னல் திரைச்சீலை கள்விற்பனைசெய்துவருபவருமான,  முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் 8 வயது அபிஷேக், மகள் 7 வயது நித்திஷா உள்ளிட்ட ஒரே குடும் பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள் பவானிசாகர் தனியார் உணவகத்தில் இருந்து,இரவு உணவுசாப்பிட்டுவிட்டு, சத்தி நோக்கி வந்த சொகுசு காரில்  வந்த கல்லூரி மாணவர்கள் மோகன், சுஜித், விஷால் பத்ரி உள்ளிட்ட மூவரு க்குலேசானகாயங்கள்ஏற்பட்டுள்ளது. சொகுசுகாரைஅக்சராஎன்ற கல்லூரி மாணவி ஓட்டி வந்துள்ளார். இறந்து போன 4 பேரின் உடல்கள், உட ற் கூறு ஆய்விற்காக, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து பவானிசாகர் காவல் துறை யினர் வழக்கு பதிவ...