திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கவுசல்யா பால்பாண்டி தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறதுள்ளனர். 

மூன்று குழந்தைகளும் தலா 1.5,1.45,1.55 கிலோ எடையுடன்,குறைமாதத்தில் பிறந்து மூச்சு திணறலுடன் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் டிரிப்ளட் 2 ம் குழந்தை செயற்கை சிகிச்சை கருவியில் ஒரு வாரமும், மற்ற டிரிப்ளட் குழந்தைகள் சீபேப் சுவாச கருவியிலும் வைத்து ,குழந்தைகள் நலதுறை மருத்துவர் உமாசங்கர் தலைமையிலான பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள்,செவிலியர்கள் சிகிச்சையை அளித்தனர் .

குழந்தைகள் மூவரும் உடல் எடை கூடி தேறிய நிலையில் 25 நாட்கள் சிகிச்சை முடிவடைந்த நிலையில்  பெற்றோரிடம் வீட்டிற்க்கு  அனுப்பபட்டது. மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) முருகேசன் மருத்துவர்கள், பணியாளர்களின் சிறப்பான சிகிச்சையை பாராட்டினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி