Posts

Showing posts from December, 2024

போலீஸ் கமிஷனரிடம், அ.தி.மு.க. வக்கீல் அணியினர் மனு

Image
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வெள்ளியங்கிரி தலைமையில் வக்கீல்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூரில் பிரகாஷ் என்பவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடன் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் வரவு- செலவு வைத்திருந்தார். இந்தநிலையில் பிரகாசின் நண்பரான ரமேஷ் கந்துவட் டிக்கு பணம் வாங்கி ஏமாற்றமடைந்தார். ரமேசின் சொத்துகளை சட்டவிரோதமாக பதிவு செய்து தனது பெயரில் பிர காஷ் தரப்பினர் மாற்றம் செய்தனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரகாசின் மேலாளரான சங்கீதராஜன் கொடுத்த புகாரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில் சம்பவத்துக்கு தொடர்பில்லாத முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் பெயரையும் இணைத்து கொடுத்துள்ளார். பொய்யாக புகார் கொடுக்கப்பட்ட குணசேகரன் மற்றும் மற்ற நபர்களின் பெயரை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ 3200க்கு விற்பனை!!

Image
தொடரும் பனிப்பொழிவு காரணமாகவும்,ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில்  மல்லிகை பூ கிலோ 3200க்கு விற்பனை!! திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்  செய்யப்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டுக்கு நாமக்கல், சேலம், சத்தியமங்கலம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.இந்நிலையில் தொடர் பனிப்பொழிவு காரணமாகவும் ஆங்கில புத்தாண்டு வருவதை ஒட்டி மல்லிகை,முல்லை பூ விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. பனிப்பொழிலிவு காரணமாக பூ விளைச்சல் குறைந்துள்ளது இதனால் மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைவாகவே உள்ளது  மேலும் தொடர் முகூர்த்தம்  என்பதால் மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் 2000க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.3200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் முல்லை ரூ. 1400க்கும்,பச்சை முல்லை 1400ககும், ஜாதிமல்லி 1000க்கும்,மைசூர் காக்கடா 600,உள்ளூர் காக்கடா 100...

சீமான் கைதை கண்டித்து திருப்பூரில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது

Image
 சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது  சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சி தலைவர் சீமான் தலைமையில், தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் சீமான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னா மனோகர் தலைமையில் அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு போராட்டம் நடத்தினர். ஆவேசமாக  போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

தீர்த்தக்குடம் எடுத்து ஆடிய திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்!

Image
கோவில் விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பொதுமக்களோடு பொது மக்களாக தீர்த்த குடம் எடுத்து நடனம் ஆடினார். திருப்பூர் அங்கேரி பாளையத்தில் உள்ள மகாகாளியம்மன் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆகும், இந்த கோவிலில் மார்கழி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம், பொங்கல் விழாவை முன்னிட்டு அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிருந்து தீர்த்தம் எடுத்து மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர் . ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்றத் உறுப்பினர் திரு.கே.என்.விஜயகுமார் அவர்கள் பக்தர்களுடன் சேர்ந்து தாளத்திற்கு ஏற்றார்போல் கையில் வேப்பிலையுடன் நடனமாடி கோவில் வரை தீர்த்தக்குடம் எடுத்து வந்தார். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவருடன் சேர்ந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்பு தீர்த்தங்கள் அனைத்தும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது, ஆண்டுதோறும் ஊர்வலத்தில் விஜயகுமார் எம்எல்ஏ கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆருக்கு மரியாதை

Image
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி திருப்பூர் ஒன்றிய அதிமுக கழகம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 37 ஆண்டு நினைவு தினத்தையோட்டி திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என் விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஒன்றிய பேரவை தலைவர் எஸ்.எம் பழனிச்சாமி,ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர்,வர்த்தக அணி தலைவர் சி.எஸ் சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமணி சிவசாமி சரவணன்,சுகன்யா வடிவேல்,துணைதலைவர் ஜெயக்குமார்,முன்னாள் சொசைட்டி தலைவர்கள் பொண்ணுலிங்கம்,மேக்னம் பழனிச்சாமி,மாவட்ட மீனவர் அணி செயலாளர் சாமி கணேஷ்,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள் குமாரசாமி,வடிவேல், செல்வராஜ்,முன்னாள் ஊராட்சி தலைவர் மூர்த்தி நிர்வாகிகள் சௌந்தர்ராஜன், காளிமுத்து, கேபிள் ரவி,பொன்னுச்சாமி, உள்ளிட்ட கழ...

பிரியாணி விருந்துடன் பரிசுகள்... கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாரி வழங்கிய இந்திராசுந்தரம்

Image
திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் திருப்பூரில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.  அதன் நிறுவனர் இந்திரா சுந்தரம் தன்னலம் பாராமல், எந்த வித நிதி திரட்டலும் இல்லாமல் சொந்த பணத்தில் பொதுமக்களுக்கு உதவுவதை வாழ்நாள் லடசியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.  அந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ் விழாவினை ஏழைகளுக்கு உதவும் விதமாகவும், கோலாகலமாகவும் கொண்டாட முடிவு செய்தார்.  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிஸ்ஸோ ஹோம் மற்றும் அன்னால் சிறப்பு பள்ளி இருந்து 80 குழந்தைகள் மற்றும் 50 பெரியவர்களுடான் இந்த பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகள் செய்தார்.  இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் அமைத்து, கிறிஸ்துமஸ் உடையில் இந்திரா சுந்தரம் பரிசுகள் வழங்கினார்.  காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை பாட்டு நடனம் என குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் இனிப்புகளுடன் பிரியாணி வழங்கப்பட்டது.   இந்நிகழ்கிகளை நிறுவனர் இந்திராசுந்தரம் ஆலோசனையின்படி செயலாளர் கே.ஜி.ராஜாமுகம்மது சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சதீஷ்குமார், யாசின், திவ்யா, விஜி, சித்ரா ஆ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு அந்தியூர் எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தலைமையில் உற்சாக வரவேற்பு

Image
 ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக அந்தியூர் சட்டமன்ற தொகுதி,அந்தியூர் ஒன்றியம் சார்பில் எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு காளிங்கராயன் இல்லம் முன்பு 20 பேருந்துகளில் 1000 மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வரவேற்றனர்

தமிழ்நாடு இந்து சேவா சங் அமைப்பின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் கண்டன அறிக்கை

Image
தமிழ் நாடு இந்து சேவா சங் அமைப்பின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் கண்டன அறிக்கை தமிழகத்தில் கடந்த 1998-ம் வருடம் கோயம்புத்தூரில் 58 அப்பாவி மக்களை குண்டு வைத்து கொலை செய்த அல்- உம்மா தீவிரவாத அமைப்பின் தலைவர் பாட்ஷா சிறையில் இருந்து தற்போது பரோலில் வெளியே வந்து இருந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் உயிர் இழந்தார் அவருக்கு இறுதி ஊர்வலம் நடத்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது இறுதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு மற்றும் பலர் கலந்து கொண்டு அவரை தியாகி போல சித்தரிக்கின்றனர். அப்பாவி தமிழர்களைக் கொண்ற தேச துரோகிக்கு இறுதி ஊர்வலம் தேவையா? இது போல் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் இறுதி ஊர்வலம் நடத்துவதால் வருங்கால இளைஞர்களின் எண்ணங்கள் மாறும், அவர்களின் நடவடிக்கை மாறும், இதே போன்ற தேச துரோக வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தியாகியை போல் இளைஞர்கள் உணர்வார்கள், வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக செயல்படக்கூடிய அரசு இது போன்ற தேச துரோகிகளுக்கு உறுதுணையாகவும் , அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் மீது என்ஐஏ விசாரணை நடத்தி இவர்களின் நோக்க...

தமிழகத்தில் டாட்டூ சென்டர் என்ற பெயரில் ஊசி மூலம் பச்சை குத்தும் கடைகளுக்கு தடை விதிக்க கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு தமிழக அரசு கோரிக்கை

Image
தமிழகத்தில் டாட்டூ சென்டர் என்ற பெயரில் ஊசி மூலம் பச்சை குத்தும் கடைகளுக்கு தடை விதிக்க கோவை கன்ஸ்யூமர் வைஸ் அமைப்பு செயலாளர் லோகு தமிழக அரசு கோரிக்கை தமிழகத்தில் கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும்கோவையி சில ஆண்டுகளாக டாட்டூ என்ற பெயரில் உடலில் அனைத்து பாகங்களிலும் ஊசி மூலம் ரசாயன கலவை மூலம் பச்சை குத்து மையம் அதிகரித்து வருகிறது இதில் தற்போதைய இளைய தலைமுறை முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை தனது உடலில் அனைத்து பாகங்களிலும் மின் ஊசி மூலம் பச்சை குத்துதல் என்ற பெயரில் பல வண்ணங்களில் தனக்கு பிடித்தமான பெயர்கள் மற்றும் பூக்களை ஊசி மூலம் வரைந்து கொள்வது அதிகரித்து வருகிறது‌ இது போன்ற மேற்கத்திய கலாச்சாரம் நமது தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக டாட்டூ சென்டர் என்ற பெயரில் கடைகள் திறக்கப்பட்டு அதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் விளையாட்டு வீரர்கள் நடுத்தர குடும்ப வர்க்கத்தினர் மற்றும் தங்களது குழந்தைகள் உள்ளிட்டூர் டாட்டூ என்ற பெயரில் ஊசி மூலம் தனது கைகளிலும் தோள்களிலும் மார்புகளிலும் கால்களிலும் ஊசி மூலம் பசசை குத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது இவை முற்றிலும் த...

புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமனுடன் முன்னாள் எம்.எல்.ஏ சாமிநாதன் நேரில் சந்திப்பு புதுவையில் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை

Image
மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர். எல்  வெங்கட்டராமன் அவர்களுடன்  முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் நேரில் சந்திப்பு  புதுவையில் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை. புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் R.L வெங்கட்டராமன் அவர்களை முன்னாள் எம்எல்ஏ வும் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி முன்னாள் மாநில தலைவருமாகிய சாமிநாதன் அவர்கள் RLV அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்தும் , எதிர்காலத்தில் புதுச்சேரி மக்களை காப்பாற்றவும் புதுச்சேரியின் தனித்தன்மையை பாதுகாக்கவும் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் விரிவாக கலந்து பேசினோம்.  புதுவையில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அதனால் புதுவை சீரழிக்கப்படுவது குறித்தும் விரிவாக கலந்து பேசினோம்.  ஆகவே புதுவையில் NR-BJP , காங்கிரஸ் - திமுக , அதிமுக கூட்டணி கட்சிகளை தவிர்த்து வருகிற 26 ஆம் ஆண்டு அமையும் ஆட்சி புதிய உத்வேகத்துடன் செயல்படக்கூடிய ஆட்சியாக அமைய வேண்டும் என்...

மயிலாடுதுறை தேரழந்தூர் ஆமருவி பெருமாள் கோவில் தூய்மைப் பணி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் முயற்சியில் இந்து சமய அறநிலைத்துறையால் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தொடக்கம் மக்கள் மகிழ்ச்சி

Image
*தேரழந்தூர் ஆமருவி பெருமாள் கோவில் தூய்மைப் பணி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் முயற்சியில் இந்து சமய அறநிலைத்துறையால் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தொடக்கம்! மக்கள் மகிழ்ச்சி!!*  குத்தாலத்தை அடுத்த தேரழந்தூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புகழ்பெற்ற ஆமருவி பெருமாள் கோவிலின் மேல மடவிளாகம் பகுதியில் உள்ள சாலைக்கு அருகில் மிகப்பெரிய பாம்பு பார்த்து அப்பகுதி மக்கள், பெண்கள் பயந்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்ததரம் அதனைப் பார்த்து அச்சமடைந்த மக்களிடம் பயப்பட வேண்டாம் என்று கூறி உடனடியாக குத்தாலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து, தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் உடனடியாக வருகை தந்து சுமார் 10 அடி நீளம் உள்ள பாம்பினை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டார்கள். பொதுமக்களின் பயத்தை போக்கியதுடன் தேரிழந்தூர் பகுதியில் பல ஆண்டுகளாக காடுகள் வளர்ந்து புதர்கள் மண்டி கேட்பாரற்று கிடப்பதாகவும், சமூக ஆர்வலரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துற...

ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு இஸ்லாமிய பக்தர் ஜாகிர் உசேன் அர்பணித்த அற்புத கிரீடம் இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிப்பதாக சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெகிழ்ச்சி

Image
*ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு இஸ்லாமிய பக்தர் ஜாகிர் உசேன் அர்பணித்த அற்புத கிரீடம்!* *இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிப்பதாக சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெகிழ்ச்சி!*  இறைவன் முன் அனைவரும் சமம், இறைவனுக்கு எந்த மதமும் ஜாதியும் பாகுபாடும் எப்போதும் எங்கும் கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் சாட்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும் இஸ்லாமியர்களுக்கும் நல்லுறவு உள்ளது என்பதை கோவிலில் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் ஈசான மூலையில் நாச்சியாருக்கு தனி சந்நிதியே உள்ளது. முகலாய மன்னர் டில்லி பாதுசா படையெடுத்து ஸ்ரீரங்கம் வந்தபோது, டில்லிக்கு அரங்கநாதர் விக்ரகத்தினையும் எடுத்துக்கொண்டு சென்றார். மன்னர் பாதுசாவின் மகளான சுரதானி என்பவர் அந்த ரங்கநாதர் விக்ரகத்தினை கண்டு மகிழ்ந்து தனது மனதை பறிகொடுத்தார். அரங்கநாதரை மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தபோது, இளவரசியான சுரதானி அரங்கநாதரை பிரிய மனமின்றி திருவரங்கத்தினை அடைந்தார். அதனால் இசுலாமிய வழக்கப்படி அகிலும், சந்தனமும் கலந்த தூப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. மேலும் அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையில் காட்சியளிக்...

தீ தடுப்பு பயிற்சி அனைவருக்கும் அளித்திட சமூக ஆர்வலர் அ. அப்பர் சுந்தரம் கோரிக்கை

Image
தீ தடுப்பு பயிற்சி அனைவருக்கும் அளித்திட சமூக ஆர்வலர் அ. அப்பர் சுந்தரம் கோரிக்கை   புயல் மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களைப் போல தீவிபத்து ஏற்படும் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தீ தடுப்பு பயிற்சி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் மன வேதனையை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. இந்நிலையில் இனியாவது தீ தடுப்பு விழிப்புணர்வு மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் அனைத்து பொது இடங்களிலும் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரசு தனியார் அலுவலகங்கள், திருமண கூடங்கள், கல்வி நிறுவனங்களில் தேவைப்படுகிறது என்பது உண்மை. திண்டுக்கல்லில் தீ விபத்து ஏற்பட்ட தனியார் மருத்துவமனையில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை கருவிகளான ஸ்மோக் டிடெக்டர், தீத்தடுப்பு புகை தெளிக்கும் எந்திரங்கள் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் கூட தீ ஏற்பட்டவுடன் உடனடி...

கேரளாவின் வைக்கத்தில் பெரியார் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Image
 கேரளாவின் வைக்கத்தில் பெரியார் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெரியார் நினைவகத்தையும், புகைப்படங்களையும் .தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். தொடர்ந்து இருமாநில முதல்வர்களும் பார்வையிட்டனர். முன்னதாக வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்ருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில்  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அத்தாணி கே.எஸ். பிரகாஷ், செ.கார்த்திகேயன், பி.ஜி.சன் சுரேஸ்,மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்றனர்.

தூத்துக்குடியில் பிரபல கல்லூரி வளாகத்தில் காலாவதியான குளிர்பான விற்பனை

Image
 *தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று மாவட்ட இளைஞர் திருவிழா என்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர் . அதில் சிறப்பான பங்களிப்பு அளித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது . மேலும் காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு வரும் கேண்டினில் PRS dairy product என்று அச்சிடப்பட்டிருந்த பாதாம் பால் பாட்டிலில் காலாவதியான குளிர்பானம் அடைத்து விற்கப்பட்டது . இதில் இன்று அதை எத்தனை மாணவர்கள் வாங்கி பருகினார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கல்லூரி  வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் உணவுப் பொருள்கள் தரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் இருக்கிறது .. கல்லூரி நிர்வாகம் இதை பரிசோதனை செய்வார்களா? என்று தெரியவில்லை மேலும் இதுபோன்ற கல்லூரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறைப்படி சோதனை நடத்துகிறார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. என்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்

Image
  ஈரோடு மாவட்டம்,கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள் கோபி பொலவக்காளிபாளையம் to புதுக்கரைப்புதூர் சாலையில்,எல்லமடை - கூகலூர் கிளை வாய்க்காலில் சைபன் பாலம் அருகில் சுமார் 45 - 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் மிகவும் அழுகிய நிலையில் அடையாளம் மற்றும் பெயர் விலாசம் தெரியாத நிலையில் எடுக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோபி போலீசார் இறந்து போனவர் குறித்து விசாரித்து வருகின்றனர். பொம்ம நாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடை அருகில் உள்ள குட்டையில் சுமார் 30- 35 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் பிரேதம் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஆய்வாளர்  செந்தில்குமார் கடத்தூர் காவல் நிலையம் (பொறுப்பு) மற்றும் உதவி ஆய்வாளர்  சத்யன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் பொம்மநாயக்கன்பாளையம் டாஸ்மார்க் கடை அருகில் உள்ள குட்டையில் இறந்து கிடந்த ஆண் பிரேதம் கோபி மேட்டுவளவு, சண்முகத்தின் மகன் கார்த்திக் (32) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு தமிழ்வாணி என்ற மனைவியும் உள்ளார். இருவருக்கும் திருமணமாக...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில், நாளை மின்தடை .

Image
தமிழ்நாடு மின்சார வாரியம், சத்தி கோட்டத்தை சேர்ந்த பெரிய கொடி வேரி,பெரும்பள்ளம், வரதம்பாளை யம் மற்றும் மாக்கினாம்கோம்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை மின் பரா மரிப்பு பணிகள் நடைபெறுவதால்,  காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்வாரிய கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரராஜ் தெரிவித்து உள்ளார். மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள், பெரிய கொடிவேரி துணை மின் நிலையம் -கொடிவேரி, சின்னட்டி பாளையம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, , டி.ஜி.புதூர், ஏழுர், கொண்டப்ப நாயக்கன்பாளையம், பெரும்பள்ளம் துணை மின் நிலையம், -கெம்ப நாயக்கன் பாளையம், ஏ.ஜி.புதூர், சின்னக் குளம்,, கொண்டப்ப நாயக்கன் பாளையம், தாசரி பாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடகநல்லி, அத்தியூர். வரதம்பாளையம் துணை மின் நிலையம்.- வடக்குபேட்டை, புளியங்கோம்பை, சந்தைகடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரிய குளம்,பாசக்குட்டை,வரதம்பாளையம்,  J.J.நகர், கோம்பு பள்ளம், கோட்டுவீரம் பாளையம், கொங்கு நகர். மாக்கினாங்கோம்பை துணை மின் நி...

புதுவை முன்னாள் முதலமைச்சர் டி. ராமச்சந்திரன் மறைவுக்கு புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் இரங்கல் அறிக்கை

Image
முன்னாள் முதலமைச்சர் டி. ராமச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்ராமன் வெளியிடும் இரங்கல் செய்தி      புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சரும் , புதுவை மக்களால் D R என்று அன்போடு அழைக்கப்பட்ட D. ராமச்சந்திரன் அவர்கள் மறைவு புதுவை மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவர் முதல்வராக இருந்த போதும் கூட தனது குடும்பத்தாருடன் அன்போடும் பாசத்தோடும் அதேநேரத்தில் கடுமையாகவும் இருந்தவர். முதன் முதலில் 1969 ஆம் ஆண்டு நெட்டப்பாக்கம் தொகுதியில் வெங்கடசுப்பையா ரெட்டியார் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்று முதன் முதலில் புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைந்தவர். இரண்டு முறை புதுவை முதல் அமைச்சராகவும் , இரண்டு முறை அமைச்சராகவும் , சபாநாயகராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். நான் D R அவர்களுடன் நெருங்கி பழகி அவருடன் இணைந்து அரசியல் செய்த நாட்கள் சிறப்பு வாய்ந்த நாட்கள் ஆகும். புதுச்சேரி இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது நான் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு போலிசாரால் D R அவர்கள...

திருப்பூரில் டிச. 18 கடையடைப்பு போராட்டம்...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

 திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, மாநில அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு ஒன்றிய அரசு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது ஆகியவற்றைக் கண்டித்து திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை, தொழில் அமைப்புகள் டிசம்பர் 18ஆம் தேதி நடத்தும் கடையடைப்புப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு பின்பற்றும் கண்மூடித்தனமான கார்ப்பரேட் ஆதரவு தாராளமயக் கொள்கைகளால் ஏற்கெனவே சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கொரோனா பொது முடக்கம், மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளால் ஏராளமான சிறு, குறு, நடுத்தரத் தொழில் உற்பத்தியாளர்கள் நிலைகுலைந்து போய், பலர் இத்தொழிலை விட்டே வெளியேற்றப்பட்டு விட்டனர். ஒன்றிய அரசு நேரடியாக நடைமுறைப்படுத்தும் கொள்கைகள் போதாதென்...

புஞ்சை புளியம்பட்டி பகுதியில், நாளை மின் தடை

Image
தமிழ் நாடு மின்சார வாரியம், சத்தி கோட்டத்தை  சேர்ந்த, புளியம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை 10.12.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தி மின் கோட்டப் பொறியாளர் சண்முக சுந்தர ராஜ் தெரிவித்து உள்ளார். புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், வெங்கநாயக்கன் பாளையம். கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளை யம்,

பல்லடம் 3 பேர் கொலை வழக்கு விசாரணை... ’பிரம்மாஸ்திரத்துக்கு’ காத்திருக்கும் போலீசார்!

Image
பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம கும்பல் கடந்த 28-ம் தேதி இரவு கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்ற கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில்   14 தனிப்படையினர் இந்த சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்த போலீசார் விசாரணையில், குடும்ப பிரச்சினையோ, முன்விரோதமோ கொலைக்கான காரணம் இல்லை என உறுதி செய்துள்ள போலீசார், எதனால் இந்த கொலை நடந்தது? விசாரணையை எங்கிருந்து தொடங்குவது எனத்தெரியாமல் திக்கித்திணறுகிறார்கள்.  சம்பவ இடத்தில் எந்த தடயமும் கிடைக்காதது போலீசாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  கொலையாளிகள் எந்த சிசிடிவி கேமராவிலாவது பதிவாகி இருக்கலாம் என்பதால் காங்கயம் வரை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், நகைக்கடைகள் மற்றும...

மாற்றுத்திறனாளர்களுக்கான இலவச செயற்கை கால்கள்!

Image
 திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பின் சார்பில் மாதாந்திர தொடர் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டுவரும் மாற்றுத் திறனாளர்களுக்கான இலவச செயற்கை கால் கள்  வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அளவீடு செய்து கொண்ட 13 மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை கால்கள்  வழங்கும் நிகழ்ச்சி மங்களம் சாலை ஸ்ரீ ரத்தின விநாயகர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.  அத்துடன் புதிதாக செயற்கை கால்கள் கேட்டு விண்ணப்பிடிருந்த 14 நபர்களுக்கு அளவீடுகள் செய்யபட்டன.பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து  இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் மங்களம் சாலை,  ஸ்ரீ செல்வ வினாயகர் கோவில் மண்டபத்தில்  நடைபெற்றது.  இந் நிகழ்சிகளுக்கு சக்ஷம் அமைப்பின், மாவட்ட தலைவர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உபகரண ங்களுக்கான நிதியை வழங்கிய ஸ்ரீதரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பிரேம் பிரகாஷ் சிக்கா பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். செயலாளர் தமிழ்செல்வன், தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி வெங்கடாசலம்...

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

Image
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் இன்று உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் காலை முதலே,போராட்டத்திற்கு ஆதரவாக, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் களை போலீசார் கைது செய்தனர்.  புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் ,மழை நீர் ஓடையின் குறுக்கே,, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், மந்தை நிலத்தை ஆக்கிரமித்து. வணிக வளாகமும் கட்டுவதை கண்டித்தும், நகராட்சி பகுதி 16 வது வார்டில், சந்தை வளாகத்தில், கொட்டப்பட்டுள்ள, குப்பை மேட்டை அகற்ற, நகர மன்ற உறுப்பினரும் , பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மனு அளித்து போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், புளியம்பட்டி கோயில் புதூர் வண்டிப் பாதையை, சீரமைத்ததாக பொய் சொல்லும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சொத்து வரி,,தொழில் வரி,குப்பை வரி ஆகியவற்றை பலமடங்கு உயர்த்தியதை கண்டித்தும்,. வாரச்சந்தை தினசரி மார்க்கெட் கடைகளை தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதை கண்டிப்ப...

டிசம்பர் 7 கொடிநாள் தியாக சீலர்கள் முன்னாள் ராணுவத்தினரை எப்போதும் எங்கும் மதித்து போற்றுவோம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்

Image
டிசம்பர் 7 கொடிநாள்  தியாக சீலர்கள் முன்னாள் ராணுவத்தினரை எப்போதும் எங்கும் மதித்து போற்றுவோம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உலகம் எங்கும் பல்வேறு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்து தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதை கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்து வருகின்றோம். எந்த அளவிற்கு நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவ பலம் அவசியம் என்பதை இதன் மூலம் நாம் உணர முடிகின்றது. அந்த வகையில் ஒரு நாட்டின் ராணுவத்தை வைத்துதான் அதன் வலிமை நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுவதால் தொடர்ந்து ராணுவத்தை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றோம். அப்படிப்பட்ட பலமிக்க ராணுவத்தில் பணியாற்றுகின்ற நமது சகோதர சகோதரிகள், எல்லையை பாதுகாக்க அன்றாடம் படுகின்ற துன்பத்தின் அளவிற்கு எல்லையே இல்லை. சாதாரண மழை வெள்ளத்தைக் கூட தாங்க முடியாமல் தவிக்கின்ற நாம் கடும் குளிரில் உயர்ந்த மலைகளில் கொட்டுகின்ற உறை பனியில், குடிக்கக்கூட நீரின்றி உறக்கமின்றி உயிரை துச்சமென நினைத்து ஓயாது உழைக்கின்ற ராணுவ வீரர்களின் ஒப்பற்ற சேவையை அனைவரும் போற்றிட வேண...

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Image
அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத்தின் தலைவர் மு. ராமதாஸ் தலைமையில் கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  6. 12. 24 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.  அதன் படி உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு கழகத்தின் தலைவர் மு.ராமதாஸ் தலைமையில், சேர்மன் R L வெங்கட்டராமன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் எ. மு. ராஜன் , மாநில செயலாளர்கள் சிவகுமாரன், மோகனசுந்தரம், ரவிகுமார், துணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கலியபெருமாள், உதவி செயலாளர் ஆண்டாள் , ரகு , முன்னாள் வார்டு உறுப்பினர் தனஞ்செயன், கோமதி சங்கர், கௌரி, கோமதி, சுலோச்சனா, குமார், ரகோத்தமன், பீட்டர், தமிழ், ஏழுமலை மற்றும்  கழகத்தின் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள...

பவானிசாகர் பகுதியில், நாளை மின்தடை .

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர் துணை மின் நிலையத்தில், நாளை 7ம் தேதி சனிக்கிழமை மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில்,  காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம்   தடைபடும் என சத்தியமங்கலம் மின் கோட்ட, கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். பவானிசாகர், கொத்தமங்கலம், வெங்கநாயக்கன்பாளையம், கணபதி நகர், சாத்திரக்கோம்பை,ராமபயலூர், புது பீர் கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்ட மாளம், ரெட்டரூர், பகுத்தம்பாளையம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நாளை மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம்.

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து,மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம். மழை நீர் ஓடையின் குறுக்கே,, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், மந்தை நிலத்தை ஆக்கிரமித்து. வணிக வளாகமும் கட்டுவதை கண்டித்தும், நகராட்சி பகுதி 16 வது வார்டில், சந்தை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள, குப்பைமேட்டை அகற்ற, நகர மன்ற உறுப்பினரும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மனு அளித்து போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், புளியம்பட்டி கோயில் புதூர் வண்டிப் பாதையை சீரமைத் ததாக பொய் சொல்லும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சொத்து வர,தொழில் வரி,குப்பை வரிஆகிய வற்றை பலமடங்கு உயர்த்தியதை கண்டித்தும்,.வாரச்சந்தை தினசரி மார்க்கெட் கடைகளை தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை 07-12-2024 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் புளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.உண்ணாவிரத போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருக சாமி தலைமையில் நடைபெற உள்ளது.  உண்ண...

திருப்பூர் மாநகராட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வளர்ச்சிப் பணிகள்...முன்னாள் மேயர் அ.விசாலாட்சி கோரிக்கை

Image
அமமுக திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமாரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்15 வேலம்பாளையம், நல்லூர், ஆகிய மூன்றாம் நிலை நகராட்சியும், செட்டிப்பாளையம், தொட்டிபாளையம் நெருப்பெரிச்சல், மண்ணரை. முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் மற்றும் ஆண்டிபாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து 60 வார்டுகளையும் நான்கு மண்டலங்களாக்கி ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 159.35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநகராட்சி ஒருங்கிணைக்கப்பட்டுப் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் பழைய மாநகராட்சிப் பகுதிகளைப் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை. இதற்கிடையே மேலும் சில பகுதிகளை உள்ளடக்கி திருப்பூர் மாநகராட்சிப் பகுதி விரிவு செய்யப்படும் என்கிற அறிவிப்பு வளர்ச்சிக்குப் பதில் வீக்கத்தையே உண்டாக்கும். ஆகவே   ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகள...

திருப்பூர் மாநகராட்சியில்சொத்துவரி பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு முகாம்... மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்

Image
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு முகாம் மாநகராட்சி நடைபெறும் என மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய சிறப்பு முகாமினை மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டரிந்தார். இதில் கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேயர் தினேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் தங்களது சொத்து வரி பிரச்சனைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் அந்த மனுக்கள் மீது  மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்த பின்னர் தான் தமிழக முழுவதும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் திருப...

வங்கதேச இந்துக்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருப்பூரில் 400 பேர் கைது

Image
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து மக்களை மீதான காவல்துறை அடக்குமுறைகளை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு  அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 400 பேர் கைது‌ செய்யப்பட்டனர். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள இந்து மக்களை அங்குள்ள காவல் துறையினர் தாக்கி கைது செய்து ஆலயங்களை சேதப்படுத்துவதை கண்டித்தும் இந்து மக்கள் உரிமைகள்  மீட்கப்பட வேண்டும்  என  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாஜக, இந்து முன்னணி ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆர் எஸ் எஸ் மாவட்ட தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி உள்ளிட்டர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அரசு பேருந்தில் ஏற்ற முயன்றனர்.ஆனால் காவல்துறை வாகனத்தில் தான் கைதாவோம் என இந்து அமைப்பினர் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்....

திமுக ஆட்சியில் திருப்பூருக்கு எந்த திட்டமும் தரவில்லை... முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி .வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ,  திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் மற்றும் கழிவு வரி உயர்வு, ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வு, தொழில் வரி உயர்வு, வணிக நிறுவனங்களிடம் வசூலிக்கும் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு, வரிகளுக்கு அபராதம் போன்றவற்றை திரும்ப பெறுவதற்கும், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமை தாங்கினார்.  மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் வரவேற்புரையாற்றினார்.திருப்பூ ர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு  சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.விஜயகுமார் கழக அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கிய காலை ...

தமிழகம் முழுவதும் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம்... ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் பேட்டி

மறைந்த தேசிய தலைவர்கள் ஆன நேதாஜி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை தவறாக சித்தரித்து பொதுவெளியில் பேசிய நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நான்காம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் பேட்டி அளித்தார். திருப்பூரில் பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திரப் போராட்ட தியாகி தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோரை இழிவாகப் பேசி வன்முறையை தூண்டி சாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய செந்தில் ராஜன் என்பவர் மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்பு வழங்கிய காவலர்கள் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழக முழுவதும் தேவர் கூட்டமைப்பினரை ஒன்றிணைத்த...