Posts

Showing posts from July, 2025

தாமதமாக பதிவு செய்தாலும் அபராதம் இல்லை...திருப்பூர் தொழில்துறையினருக்கு கோவை மண்டல இ.எஸ்.ஐ. அலுவலகம் அழைப்பு

Image
இ.எஸ்.ஐ புதிய திட்டம் திருப்பூர் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம். தொழில்துறையினர் தொழிலாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற இ எஸ் ஐ புதிய திட்ட அறிமுக கூட்டத்தில் கோவை மண்டல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ திட்டம் குறித்த விளக்கம் மற்றும் அறிமுக விழா திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன்,  தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங்  ஈஸ்வரன்ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இ எஸ் ஐ கோவை மண்டல அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 என்ற புதிய திட்டத்தை திருப்பூர் தொழில் துறையினருக்கு  அறிமுகம் செய்ய சைமா அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தக...

மக்கள் மகிழ்ச்சியாக வாழ எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும்...முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, தென்னம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான  பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.    திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும்,மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி வரவேற்புரையாற்றினார்.  கூட்டத்தில்  எடப்பாடியார் அவர்களின் திருப்பூர் சுற்றுப்பயணம் வருகை குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்தும்  முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் ஆலோசனை  வழங்கி சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது: 2006ல் இடமில்லாதவர்களுக்கு  2 ஏக்கர் நிலம் தருவதாக சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக. 2016ல் எண்ணற்ற பொய்களை சொன்னார்கள் ஆட்சியை பிடித்தார்கள். ஆட்சிக்கு வந்தால் பாலாறு...

குப்பையை கொட்டி திருப்பூர் மாநகராட்சி பார்த்த வேலை... விமானப்படை அதிகாரிகள் அதிர்ச்சி

 மாநகராட்சி குப்பைகளை சாமலாபுரம் அடுத்த இச்சிப்பட்டியில் உள்ள பாறைக் குழியில் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் குண்டு கட்டாக கைது செய்த போலீசார். பெண் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு மற்றொரு பெண் மயக்கமடைந்தார். சூலூர் விமான படை தளத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என ராணுவ அதிகாரிகள் ஆய்வு  திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை பாறை குழியில் மாநகராட்சி கொட்டி வருகிறது. திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறை குழியில் கொட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பாறைக் குழியில் குப்பைகளை கொட்ட மாநகராட்சி திட்டமிட்டு இரண்டு நாட்களாக குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தங்கள் பகுதியில் குப்பைகளை கொட்ட கூடாது என அப்பகுதி பொதுமக்கள் திருப்பூரில் இருந்து சாமளாபுரம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடத்...

இங்கிலாந்து - இந்தியா வர்த்தக ஒப்பந்தம்... மத்திய அமைச்சருக்கு ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் நன்றி!

Image
  ஏ.இ.பி.சி., துணைத் தலைவர், டாக்டர். ஆ. சக்திவேல்,  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து இந்தியா – இங்க்லாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்காக  நன்றியை தெரிவித்தார். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏஇபிசி) துணைத் தலைவர் டாக்டர். ஆ. சக்திவேல், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயலை  புதுதில்லியில் இன்று(29/7/20225) சந்தித்தார். இந்தியா–இங்கிலாந்து நாடுகளுக்கிடையே  வரலாற்று சிறப்புமிக்க முழுமையான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்காக தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும்  தெரிவித்துள்ளார்.   வர்த்தக ஒப்பந்தம் மூலம், அமைச்சரின் தொலைநோக்கு தலைமையையும், இந்த முக்கிய ஒப்பந்தத்தைப் ஏற்படுத்துவதில் அவரது அயராத முயற்சிகளையும் முழு மனதுடன் பாராட்டினார், இனி, இங்கிலாந்து உடனான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் என்றும் கூறினார்.  இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் முன்னணி பின்னலாடை ஏற்றுமதி மையமான திருப்பூருக்கு வருகை தருமாறு  அமைச்சருக்கு டாக்டர் சக்திவேல் அழைப்பு...

பொங்கலூரில் வீட்டுமனைப் பட்டா கோரி சிபிஎம் தலைமையில் திரண்ட மக்கள்

Image
  பொங்கலூர் ஒன்றியத்தில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில்  திரண்டு மனுக் கொடுத்தனர். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கோரி பல முறை விண்ணப்பித்தும் வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்படாத நிலை தொடர்கிறது. பட்டா கொடுப்பதாகச் சொல்லும் அரசு அறிவிப்பும், நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே வீட்டுமனைப் பட்டா கோரி பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மனுக் கொடுத்துக் காத்திருக்கும் போராட்டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. இதன் அடிப்படையில் பொங்கலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் செவ்வாயன்று பொங்கலூரில் திரண்டனர். இந்த இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி, மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சம்பத் ஆகியோர் உரையாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சிவசாமி, ஏ.அர்ஜூனன், எல்.துரைமுருகன், கே.சிவக்கு...

வக்கீல் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தர்ணா!

Image
 திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி உறவினர்கள் வழக்கறிஞர்கள் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம்.  அதுவரை  உடலை வாங்க மாட்டோம் என அவரது தாயார் பேட்டி. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் நேற்று பட்டப்பகலில்  வழக்கறிஞர் உடையுடன் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலையான வழக்கறிஞர் முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. வழக்கறிஞர் முருகானந்தத்தின் உடலை காண வந்த அவரது தாயார் சுமித்ரா தேவி மற்றும் உறவினர்கள் வழக்கறிஞர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தாயார் சுமித்ராதேவி கூறுகையில்,  சொத்து காரணமாக ஏற்பட்ட தகராறால் உறவினரே எனது மகனை கொலை செய...