உயிரிழப்பு 40 ஆக உயர்வு - சம்பவம் குறித்து பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் விளக்கம்

 

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் 39 ஆக இருந்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் கரூர் 39பேர் பலி குறித்து பொறுப்பு டி.ஜி.பி., விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் விளக்கம் அளித்தார்.

டி.ஜி.பி., கூறியதாவது:

த.வெ.க.,வினார் கரூர் பரப்புரைக்கு முதலில் அனுமதி கேட்ட இரு இடங்களும் மிகவும் குறுகலானது. அதனால் அதைவிட பெரிய இடத்தில் காவல்துறை அனுமதி கொடுத்தது.

பரப்புரைக்கு விஜய் வர தாமதமானதால் அதிகமானோர் கூடிவிட்டனர்.

தொண்டர்கள் 10,000பேர் கூடுவார்கள் என த.வெ.க.,வினர் அனுமதி கேட்டனர். ஆனால் 27,000பேர் கூடிவிட்டனர். விஜய் பரப்புரையில் காவல்துறையினர் 500பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கலிலும் இதே அளவு கூட்டம் கூடியது. போலீஸ் பாதுகாப்பு கொடுத்தோம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஒருநபர் விசாரணை கமிஷனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவி்த்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி