தீரன் சின்னமலை கல்லூரியில்கோவை சதாசிவத்தின் 50 ஆண்டுகால எழுத்துலக சாதனை நிகழ்ச்சி
திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கிய மன்றம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவத்தின் 50 ஆண்டுகால எழுத்துலக சாதனை நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மை அதிகாரி முனைவர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் மோகன சவுந்தரி முன்னிலை வகித்தார். தமுஎகச சங்கத்தின் செயலாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கோவை வழக்கறிஞரும் எழுத்தாளருமான அ. கரீம், தமுஎகச வின் எழுத்தாளரான சம்சுதீன் ஹீரா, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ராமமூர்த்தி, பழங்குடி மக்கள் செயற்பாட்டாளர் அன்புராஜ், கே பி ஆர் கலை அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் அ. பரிமளா, தமுஎக சங்கத்தின் தலைவரும், கவிஞருமான சம்பத் குமார், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி மு சாதனா ஆகியோர் கோவை சதாசிவம் எழுதிய நூல்கள் குறித்து விமர்சனம் செய்து விளக்கி பேசினர்.
முடிவில் தமிழ்த்துறைப் பேராசிரியை முனைவர் செ.தேன்மொழி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமுஎகச சங்கத்தின் உறுப்பினர்கள், சதாசிவம் புத்தகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவிகள், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
