குடியாத்தத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம்.
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாரத் ரத்னா பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 38ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எல்.எஸ் வனராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி, மாயா பாஸ்கர், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து அலங்கரித்து வைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்துடன் ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஆர் கே அன்பு ரவிச்சந்திரன் அமுதா கருணா தனஞ்செயன் அன்வர் பாஷா சலீம் அட்சய வினோத்குமார் ஆர் கே மகாலிங்கம் எஸ் டி மோகன்ராஜ் சேவல் நித்தியானந்தம் வழக்கறிஞர் கோவிந்தசாமி மனோகரன் அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் ரேவதி மோகன் சிட்டிபாபு தண்டபாணி உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
