தூத்துக்குடி மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்களை தென்மண்டல காவல்துறை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்களை தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள 8 காவல் வாகனங்கள் மற்றும் ஒரு நெடுஞ்சாலை ரோந்து வாகனம் என 9 காவல்துறை வாகனங்களுக்கு புதிதாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆயுதப்படையில் கைதி வழிக்காவல், நீதிமன்ற பணி மற்றும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படும் 8 காவல்துறை வாகனங்களில் மெமரி வசதி(Inbuild memery) மற்றும் இரவு நேரங்களிலும் துல்லியமாக வீடியோ பதிவு செய்யும் வசதியுடைய சிசிடிவி கேமராவும், அதேபோன்று தூத்துக்குடி நகர நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ANPR (Automatic Number Plate Recognition) வசதியுடைய சிசிடிவி கேமரா மற்றும் Verifocal Lense கேமரா எனப்படும் துல்லியமாக Zoom செய்யும் கேமரா உட்பட 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை நேரடியாக ரோந்து காவல் வாகனத்தில் இருந்து கண்காணிக்கும் கண்காணிப்பு திரையும் (Moniter) அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆயுதப்படை வாகனங்களில் கைதி வழிக்காவல் மற்றும் இதர பணிகளின் போது வீடியோ பதிவு செய்யவும், அதே போன்று நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் முக்கிய திருவிழாக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கவும், சந்தேகப்படும்படியான நபர்களை நேரடியாக கண்காணிக்கவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்களை தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் இன்று (22.12.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது தூத்துகுடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் உட்பட காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி SPIC உதவி பொது மேலாளர் ஜெயபிரகாஷ், SPIC மக்கள் தொடர்பு அதிகாரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி