தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தவறவிட்ட 35 பவுன் நகை- காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்.!
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 35 பவுன் நகையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை போலீசார் பாராட்டினர்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் தூய்மை பணியாளர் மீனாட்சி என்பவர் நடைமேடை உள்ள டஸ்ட்பின் பாக்ஸை சுத்தம் செய்த போது அதில் கிடந்த மணிப்பர்சை எடுத்துப் பார்த்தபோது தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பர்சை சுகாதார இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒப்படைத்தார்.
பின்னர் ஆர்பிஎப் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமாரிடம் ஒப்படைத்தனர். அந்த மணி பர்சில் 35 பவுன் நகை இருந்தது. விசாரணையில் அந்த நகைகளுக்கு உரிமையாளரான கண்ணன் (56) வடசென்னை அனல் மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார் என தெரியவந்து.
பின்னர் செல்போன் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தனர் இதனால் மகிழ்ச்சி அடைந்த கண்ணன் இன்று மாலை தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்து நகைகளுக்கு உரிய ஆதாரங்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்கான ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு 35 பவுன் நகைகளை இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஒப்படைத்தனர்.
மேலும் தூய்மைப் பணியாளர் மீனாட்சி நேர்மையை பாராட்டி இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் அதிகாரிகள் பரிசுகள் வழங்கினர். மேலும் நகையை பறிகொடுத்த கண்ணனும் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
