முதலாவது இன்டராக்ட் மாநாட்டில் நடந்த போட்டியில் அம்மாபாளையம் நடுநிலை பள்ளிக்கு 3 கோப்பைகள்

  அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சங்கம்  மற்றும்  ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் ரோட்டரி சங்கம், அவிநாசி ரோட்டரி சங்கம், காரமடை ரோட்டரி சங்கம், பவானி கார்பெட் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து  நன்மைக்காக ஒன்றிணைவோம் என்ற கொள்கையை அடிப்படையில் ரோட்டரி  மாவட்டம் 3203 ன்  முதலாவது இன்டராக்ட்  மாநாடு 2026 அவினாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி ஸ்கூல் வளாகத்தில் நடந்தது. மாநாட்டிற்கு அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சங்க தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். 

 ரோட்டரி மாவட்ட பயிற்சியாளர் இளங்குமரன், ரோட்டரி மாவட்ட ஆலோசகர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர்  தனசேகர் மாநாட்டை தொடங்கி வைத்து,  அனைத்து பள்ளிகளின்  இன்டராக்ட்  மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாநாட்டில் அவிநாசி சாந்தி பள்ளி, கேம்பிரிட்ஜ், திருப்பூர் சுப்பையா, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் உயர்நிலைப்பள்ளி உள்பட 35 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 750 இன்டராக்ட்  மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். எஸ் பி ஆர் சாரிட்டபிள் டிரஸ்ட் சேர்மன் ராஜ்குமார், மாவட்ட ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மாவட்ட இன்ட்ராக்ட் தலைவர் எழில்வண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி இன்டர்நேஷனல் உதவித் தலைவர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் கலந்து கொண்டு  பேசினார்.மாநாட்டில் மாணவ மாணவிகளுக்கு மைம், விவாத மேடை, ஓவியம், கட்டுரை மற்றும்  நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 
              போட்டியின் முடிவில் விவாத மேடை போட்டியில் ஊட்டி யுனிக் பப்ளிக் பள்ளி முதலிடம், அருணகிரி அம்மன் பள்ளி 2ஆம் இடம், சுப்பையா சென்ட்ரல் பள்ளி 3 ஆம் இடமும், மைம் போட்டியில் திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி முதலிடம், சுப்பையா சென்ட்ரல் பள்ளி 2 ஆம் இடம், ஹில் ஃபோர்ட் பள்ளி 3 ஆம் இடமும், நடன போட்டியில் ஊட்டி யுனிக் பப்ளிக் பள்ளி முதலிடம்,  
ஈரோடு பாரதி மெட்ரிக் பள்ளி மற்றும் கிட்ஸ் கிளப் பள்ளி 2 ஆம் இடம், அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளி மற்றும் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி 3 ஆம் இடமும், ஓவிய போட்டியில் பிரான்டலைன் பள்ளி முதலிடம், பழனியப்பா பள்ளி 2 ஆம் இடம், பாரதி பள்ளி 3 ஆம் இடமும், கட்டுரை எழுதும் போட்டியில் அமிர்தம் வித்யாலயா பள்ளி முதலிடம், கிட்ஸ் கிளப் பள்ளி 2 ஆம் இடம், பாரதி மெட்ரிக் பள்ளி 3 ஆம் இடமும் பெற்றனர்.  
தொடர்ந்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  ஊட்டி யுனிக் பப்ளிக் பள்ளி முதலிடம்,  அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளி இரண்டாம் இடமும், பாரதி மெட்ரிக் பள்ளி 3 ஆம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் முதலிடம் பெற்ற அணிகளுக்கு  ரூ 25 ஆயிரம், 2 ஆம் இடம் பெற்ற அணிகளுக்கு ரூ 15 ஆயிரம், 3 ஆம் இடம் பெற்ற அணிகளுக்கு ரூ 10 ஆயிரம் என ரொக்க பரிசு வழங்கப்பட்டது. முடிவில் செயலாளர் கௌசிக் நன்றி கூறினார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை திருப்பூர் செலிப்ரேஷன் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.சதீஷ்குமார், பவானி கார்பன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பி.சதீஷ்குமார் காரமடை ரோட்டரி சங்க தலைவர் குமணன் நடராஜன்,  அவினாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சங்கம் மற்றும் அதன் நிர்வாக குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
              மாநாட்டில் இன்ட்ராக்ட் பள்ளி மாணவ மாணவிகள் 750 கிலோ அரிசியை கொண்டு வந்து கொடுத்தனர் இது அவிநாசியில் உள்ள தர்ம சாலைகளுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது அதேபோல் ஆயிரம் மாணவிகள் மாணவ மாணவிகள் ராணுவ அதிகாரிகளை பாராட்டி கடிதம் கொடுத்துள்ளனர் மாநாட்டில் எட்டு பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நாங்கள் சொந்தமாக தயாரித்த உணவு பதார்த்தங்களை விற்பனைக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், போலியோ நிதியாக ரூ 32 ஆயிரம் மாணவ மாணவிகள் வழங்கினர். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு 3 கோப்பைகள் பரிசாக எடுத்த  அம்மாபாளையம் நகராட்சி  நடுநிலைப்பள்ளி இன்டராக்ட் தலைவர் ஃபஹீமா பர்வீன், தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், இன்டராக்ட் ஆசிரியை லலிதா, இன்டராக்ட் சேர்மன் சக்கரபாணி ஆகியோருக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி