தூத்துக்குடியில் வீட்டில் வைத்து விபச்சாரம் : 2 பெண்களை கைது செய்த போலீசார் : 2 பெண்கள் மீட்பு.!
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) முத்துராஜா, சிறப்புச் சார்பு ஆய்வாளர் மல்லிகா மற்றும் பெண் போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் நான்கு பெண்கள் இருந்தனர். விசாரணையில், முனீசுவரி (29) மற்றும் அந்தோணியம்மாள் (39) ஆகிய இருவர் இணைந்து, மற்ற இரண்டு பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சாரம் நடத்திய முனீசுவரி மற்றும் அந்தோணியம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் 2,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன
