வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டில் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் சூறாவளி தேர்தல் பரப்புரை.

 

தமிழக சட்டசபை தேர்தல் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  ஆங்காங்கே வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் சட்டமன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் சூறாவளியாக குடியாத்தம் தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களது இல்லத்துக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பை நடத்தி வருகிறார்.

அதன்படி 4ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான கடாம்பூர் ,உமராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தே சென்று வீதி வீதியாக வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பரிதா. பரிதாவுடன் ஒன்றிய செயலாளர் பொகளூர் பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் திரளாக புடைசூழச் சென்றனர். ஆங்காங்கே இருந்த தொழிலதிபர்களையும் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அப்பொழுது அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமனை அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பெண்கள் ஆர்வமாக ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் வரவேற்றனர். இதனை பார்த்த அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன், எனக்கு சால்வை அணிவிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கூறியதோடு ஏழை, எளிய மக்கள், முதியோர் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு சால்வை அணிவித்து அதை எனக்கு வாக்காக பெற்றுத் தாருங்கள் என்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அன்புடன் வேண்டுகோள் (அன்பு கட்டளை)  விடுத்தார். 

இதைக் கேட்டதும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இது சரியான கருத்தாக உள்ளது. இதையே இன்று முதல் இக்கணம் முதற்கொண்டு நாங்கள் பின்பற்றி நடந்து கொள்கிறோம் என்று அந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்தது அங்கிருந்த வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை வாக்காளர்களுக்கு தோலுரித்து தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை அச்சடித்து அதை வீடு வீடாக விநியோகம் செய்வதிலும் இடைவிடாது ஈடுபட்டார் பரிதா புருஷோத்தமன். புரட்சித் தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிமுக அவரது மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களால் தொடர்ந்து வளர்க்கப்பட்டு ஒரு பேரியக்கமாக உருவெடுத்தது. மறைந்த அந்த இரண்டு தலைவர்களின் நினைவாக இம்முறை அதிமுக அரியணை ஏற வேண்டும் என்ற எண்ணத்திலும், அதை மனதில் கொண்டும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் வாக்காளர்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்.

அத்துடன் வயது முதிர்ந்த அவர்களின் கால்களை தொட்டு பாதம் பணிந்து தனது வேண்டுகோளை தெரிவித்து வாக்குகளை சேகரித்த வண்ணம் உள்ளார் பரிதா புருஷோத்தமன். பரிதாவின் அன்பு, அரவணைப்பு, அவரது வேண்டுகோள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த முறை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் இம்முறை அனைத்து தரப்பிலும் தனக்கு அமோக வாய்ப்பு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் பரிதா புருஷோத்தமன். பொதுமக்களும் பரிதாவின் நடவடிக்கையால் வெகுவாக ஈர்க்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி