Posts

திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி நகர திமுக சார்பில் கேக் வெட்டி இனிப்பு வழங்கல்.!

Image
திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர திமுக சார்பில் கேக் வெட்டி இனிப்புகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கோவில்பட்டி மார்க்கெட் ரோடு சந்திப்பு திமுக படிப்பகத்தில் நகர செயலாளர் கா.கருணாநிதி தலைமையில் ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலையில்  நடைபெற்ற விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதுபோன்று கோவில்பட்டி அருகே புதுகிராமம் மெயின் ரோட்டில் இளைஞரணி துணை அமைப்பாளர் அன்புநிதி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் ‌ நிகழ்ச்சியில் திமுக மதுரை ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் முனியசாமி, சேதுரத்தினம்,புஷ்பராஜ்,பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன்,   சிறுபான்மையினர் அணி அமலி பிரகாஷ்,, வார்டு செயலாளர் சசிகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார் தகவல் தொழில் நுட்ப அணி முகேஷ் என்ற ராசுக்குட்டி தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஹரிஹரன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.!

Image
திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான,  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44-வது பிறந்தநாளையொட்டி சத்தி நகர திமுக சார்பில் சத்தியமங்கலம் குமரன் மஹாலில் இரத்ததானம் நடைபெற்றது. சத்தி நகர திமுக பொறுப்பாளர்  ஜானகி ராமசாமி  இம்முகாமிற்கு தலைமையேற்று முகாமை தொடங்கி வைத்தார், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கி மருத்துவ அலுவலர் சிவசங்கர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் இம்முகாமில் கலந்துகொண்டு 55 யூனிட்டுகள் இரத்தத்தை சேகரித்தனர். இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டுசான்றிதழும், மரக்கன்றும் வழங்கப்பட்டது.    தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக,        K.நாராயணசாமி, செய்தியாளர்.சத்தியமங்கலம் தாலுக்கா. ஈரோடு மாவட்டம்.

பழனியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது.!

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான ஆசிரியர் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆங்கில ஆசிரியர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கூறி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டனர்.  "பாலியல் தொல்லையால் உயிரிழப்பது நானே கடைசியாக இருக்க வேண்டும்" என கடிதம் எழுதி வைத்து விட்டு இன்னொரு மாணவி கரூரில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில்  திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது அமரபூண்டி கிராமம். இங்கே அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்  நந்தவனப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாட்ராயனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு வயது 30. இந்நிலை...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்த அதிமுகவினருக்கு திருப்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Image
சர்வதேச உடல் உறுப்பு தானம் வழங்கும் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கண் தானம், உடல் உறுப்புகள் தானம் செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் மிருதுளா நடராஜன் தலைமையில்   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு  17 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தங்கள் உடல்களை தானமாக வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் இன்று திருப்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இதே போல கண் தானம், போன்றவற்றை செய்ய மக்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

உள்ளாட்சி தேர்தல் வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட அதிமுக வினருக்கான விருப்ப மனு.!

Image
சேலத்தில் மாநகர வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் தலைமையில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு போட்டியிட விருப்புவோருக்கு  விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டது இந்த மனுக்கள் 29ந்தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள்.  நிகழ்ச்சியில் சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியன் சேலம் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர் செல்வம் முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜு மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 நாகை மீனவர்கள் விடுதலை

Image
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்திலிருந்து கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இரண்டு மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை பாயிண்ட் பெட்ரோ நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்று வந்த வழக்கில் அந்த 23 மீனவர்களை சிறையிலிருந்து விடுவித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேரையும் இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது, அவர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

"சூரப்பா முறைகேடு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது" - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Image
"அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கரப்பா முறைகேடு செய்ததாக அமைக்கப்பட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது, இனி நடவடிக்கை எடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி" என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்