சத்தியமங்கலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.!


திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான,  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44-வது பிறந்தநாளையொட்டி சத்தி நகர திமுக சார்பில் சத்தியமங்கலம் குமரன் மஹாலில் இரத்ததானம் நடைபெற்றது.

சத்தி நகர திமுக பொறுப்பாளர்  ஜானகி ராமசாமி  இம்முகாமிற்கு தலைமையேற்று முகாமை தொடங்கி வைத்தார், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கி மருத்துவ அலுவலர் சிவசங்கர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் இம்முகாமில் கலந்துகொண்டு 55 யூனிட்டுகள் இரத்தத்தை சேகரித்தனர்.

இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டுசான்றிதழும், மரக்கன்றும் வழங்கப்பட்டது.   

தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக,        K.நாராயணசாமி, செய்தியாளர்.சத்தியமங்கலம் தாலுக்கா. ஈரோடு மாவட்டம்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி