Posts

நிதி நிறுவனத்தில் கடன் மோசடி: குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் ரூ.60 லட்சம் திரும்ப ஒப்படைப்பு - எஸ்பி பாராட்டு!!

Image
தூத்துக்குடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் ரூ. 60 லட்சம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.  இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை : சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவசங்கர் (56) என்பவரும், அவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தங்களது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன அபிவிருத்திக்காக தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 30.05.2018 தேதியிட்ட மேற்படி காசோலை மூலம் ரூ. 40 லட்சமும், 21.07.2018ம் தேதியிட்ட காசோலை மூலம் ரூ. 20 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 60 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக உறுதிமொழிப் பத்திரம் மற்றும் சென்னையில் தங்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டுப்பத்திரம் அசல் ஆகியவற்றை அடமானமாக கொடுத்துள்ளனர்.  இதற்கிடையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த காலதாமதமானதால் மேற்படி சிவசங்கர் தனது கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தையும், 10.01....

தூத்துக்குடி : அமைச்சரின் வீட்டருகே சுகாதார சீர்கேட்டில் அங்கன்வாடி மையம்.! - குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டும் பெற்றோர்கள்.!

Image
  தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் வீட்டருகேயுள்ள அங்கன்வாடி மையம்  துர்நாற்றம் வீசும் நிலையில் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதால்  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 19ம் வார்டு கேவிகே நகர் பகுதியில், பக்கிள் ஓடை அருகே கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 88ம் என் அங்கன்வாடி மையத்தை சுற்றி பெரும் சுகாதார சீர்கேடு நிலவுவதாக அங்கு வரும் குழந்தைகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில்:- அங்கன்வாடி மையத்தை சுற்றி மாடுகள் இடும் சாணம் மற்றும் கோமியத்தால் தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன், பக்கிள் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவுநீராலும்  தொடர்ந்து துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் ஒவ்வாமை, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் அங்கன்வாடி மையத்தில் தரைத்தளம் ஆங்காங்கே உடைந்து குழந்தைகளின் கால்களை பதம் பார்க்கும் ஆபத்தான நிலையில் உள்ளது.  ...

திருப்பூர் மங்கலம் போலீஸ்காரர் தற்கொலை

Image
மங்கலம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு போலீஸ்காரர் குடும்ப பிரச்சினை காரணமாக தென்னை மர மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோட்டம் மங்கலம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராகவும், பல்லடம் உட்கோட்டம் குற்றப்பிரிவிலும் பணிபுரிந்து வருபவர் ஜெகன். இடுவாயில் அண்ணாமலை கார்டனில் தனது மனைவி அனிதா, மகன், மகளுடன் குடியிருந்து வருகிறார்.நேற்று மாலை 7 மணியளவில் தனது மனைவி அனிதாவுடன் குடும்ப பிரச்சனை காரணமாக சண்டையிட்டு உள்ளதாக தெரிகிறது.அதன் பின்பு இடுவாய் அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி கையில் வைத்திருந்த சல்ஃபாஸ் தென்னை மர மாத்திரையை மதுவில் கலந்து குடித்துள்ளார். பின்னர் மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் மதியழகன் என்பவரிடம் போனில் தகவல் சொன்னதின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் அவரை  திருப்பூர் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஜெகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக மங்கலம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவிநாசிபாளையம...

கோவை, திருப்பூர், ஈரோடு ரயில் பயணிகளை பாடாய் படுத்தும் ரயில்வே நிர்வாகம்... ரெகுலர் பயணிகளின் தீராத அவதி தீர்க்கப்படுமா?

Image
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாநகரங்கள் பெரும் தொழில் நகரங்களாக இருக்கின்றன. மாவட்ட தலைநகரங்களாக உள்ள இந்த மாநகரங்களில் இருந்தும், அதனுள் இருக்கிற ஊர்களில் இருந்தும் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஊருக்கும் மாறி மாறி பல்வேறு வேலைகளுக்கு செல்கிறார்கள். அதாவது, சேலத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், கோவை நகரங்களுக்கும், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலத்துக்கும் தினசரி அலுவலக வேலைக்காகவும், கூலி தொழிலுக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் ரயில் பயணம் விரைவாக இருப்பதாலும், சீசன் டிக்கெட் உள்ளிட்ட கட்டணச் சலுகைகள் காரணமாகவும் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணம் செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக கோவையிலிருந்து சேலம் வரை பெரிய ரயில் நிலையங்களுக்கு இடையில் பாசஞ்சர் ரயில்கள் நிற்கக் கூடிய சிறு ரயில் நிலையங்களாக இருக்கும் கிராம மக்களுக்கு ரயில் பயணம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.  இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, ரயில்வேயின் திட்டமிடல், பராமரிப்பு மற்றும் தாமதம் காரணமாக ரயில் பயணிகளின் அன்றாட வாழ்க்கையும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறத...

MSA TRAVELS & TOURS (PVT) LTD WANTED: Experienced Executives Throughout INDIA

Image
Looking for a Experienced Inbound/Outbound Ticket Booking/Marketing Executive We are looking for committed independent consultants to work with us to promote and expand our services beyond borders. The position will require a minimum experience of 1 to 2 years in the travel industry and past performance in acquiring clientele. If you feel that you can take up this challenge, please send in your CV and contact details. Wanted in Branches • MUMBAI • COCHIN • KRISHNAPATNAM • DELHI • CHENNAI • VISAKHAPATNAM • TIRUPUR • TRIVANDRUM • COIMBATORE SEND IN YOUR CVS to saravanan@msatravels.com/mustafa@msatravels.com +91 90477 09827 HEAD OFFICE 118-H & I, First Floor, South Raja Street, VBMS Tower, Tuticorin 628 001. India www.msatravels.in

துபாய் : குப்பை தொட்டியில் கிடந்த 1.80 கோடி திருட்டு - இருவருக்கு சிறைத் தண்டனை.!

Image
  ஏர்கண்டிசன் பராமரிப்பு தொழிலாளர்கள் இருவருக்கு குப்பை தொட்டியில் இருந்து 815,000 திர்ஹம்களை (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி என்பது லட்சம்) திருடிய காரணத்திற்க்காக இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ஒரு வில்லாவில் குப்பைத் தொட்டியில் இருந்து 815,000 திர்ஹம்களை திருடியதற்காக இரண்டு பராமரிப்புப் பணியாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரேபிய பெண் ஒருவர், விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்தபோது, ​​தனது வில்லாவின் மொட்டை மாடியில் சிறிய குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்திருந்த தனது பணம் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளார். புலனாய்வு குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர். அவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர், மேலும் வில்லா வளாக பராமரிப்பு நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில், ஏசி பராமரிப்பிற்காக வில்லா வளாகத்தில்  நுழைந்த இரண்டு பராமரிப்பு பணியாளர்களால் திருட்டு நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்துஇரு தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, ​​​​அவரும் அவரது சக ஊழியரும் குப்பைத் தொட்ட...

ஈரோட்டில் திருப்பூர் அதிமுகவினர் தீவிர பிரசாரம்... பொள்ளாச்சி ஜெயராமன், சு.குணசேகரன் முன்னிலையில் ஓட்டு வேட்டை

Image
 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுக்கேட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி கழகம், வார்டு எண் 36, பூத் எண் 158 உட்பட்ட ஜின்னா வீதி, கடை வீதி பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம்  திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன்  தலைமையில்  திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான  சு.குணசேகரன்  முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும்,  மாமன்ற உறுப்பினருமான  கண்ணப்பன்,தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அன்பகம் திருப்பதி,  முருங்கபாளையம் பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன்,  வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் கேசவன்,கருவம்பாளையம் பகுதி கழக செயல...