திருப்பூரில் நான் முதல்வன் திட்ட வழிகாட்டுதல் முகாம்... கலெக்டர் மணீஷ் நாரனவரே தொடங்கி வைத்தார்.

திருப்பூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்.மனீஷ் நாரனவரே துவக்கி வைத்தார். திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியினை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.மனீஷ் நாரனவரே கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் , தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் போட்டி தேர்வுகளை எளிதாக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 2022 ஆம் ஆண்டு முதல் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.என்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேரும் வகையில் கல்லூரி கனவு,உயர்கல்வி ஆலோசனை முகாம் , கல்விக்கடன் முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.என்றும் மேலும் மாணவ மாணவியர்களுக்கு புதுமைப்பெண் , தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் ...