Posts

திருப்பூரில் நான் முதல்வன் திட்ட வழிகாட்டுதல் முகாம்... கலெக்டர் மணீஷ் நாரனவரே தொடங்கி வைத்தார்.

Image
 திருப்பூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்.மனீஷ் நாரனவரே துவக்கி வைத்தார். திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியினை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.மனீஷ் நாரனவரே  கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் , தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் போட்டி தேர்வுகளை எளிதாக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 2022 ஆம் ஆண்டு முதல் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.என்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேரும் வகையில் கல்லூரி கனவு,உயர்கல்வி ஆலோசனை முகாம் , கல்விக்கடன் முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.என்றும் மேலும் மாணவ மாணவியர்களுக்கு புதுமைப்பெண் , தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் ...

திருமுருகன்பூண்டி நகராட்சியில் கவுன்சிலர்கள் தர்ணா

Image
 பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்வதாக கூறி திருமுருகன்பூண்டி அனைத்து கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டியில் திமுக வார்டுகளை தவிர பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்வதைக், கண்டித்து கூட்டத்தில் அனைத்து கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு நகர்மன்றத் தலைவர் ந.குமார் தலைமை வகித்தார்.  இதில் பங்கேற்ற, நகர் மன்ற உறுப்பினர், குடிநீர் வசதி, சாக்கடைக் கால்வாய், சாலை வசதி, பொதுக்கழிப்பிடம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதில், திருமுருகன்பூண்டி நகராட்சிக்குள்பட்ட 27 வார்டுகளில் திமுகவை சேர்ந்த 8 வார்டுகளுக்கு மட்டும் ஒரு ஒரு கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் பொது நிதியிலிருந்து பணிகள் செய்ததற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. இதற்கு, அதிமுக வை சேர்ந்த 8 பேர் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிய...

17 வயது திருப்பூர் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்... சென்னை நோயாளிக்கு கொண்டு செல்லப்பட்டது இதயம்!

Image
 திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம். சென்னையில் உள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்த இதயம் பலத்த போலீசார் பாதுகாப்புடன் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத். இவரது கணவர் வேலுச்சாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மூத்த மகன் இளங்கோவன் (17) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலிபாளையம் பகுதியில் தங்கி வருகிறார். கடந்த 21ஆம் தேதி இரவு இளங்கோவன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வட்ட காட்டுப்புதூர் பகுதியில் நேருக்கு நேர் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளங்கோவன் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இளங்காவனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை இளங்கோவனின் இருதயம்  , 2 சிறுநீரகம...

சாலையைக் கடக்க முயன்ற சிறுமி லாரியில் சிக்கி உயிரிழப்பு

Image
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சூரத் என்பவரது 6 வயது மகள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.  சிறுமி திடீரென சாலையை கடக்க முயன்ற போது சாலையில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி சிறுமி மீது மோதி ஏறி இறங்கியது இதில் சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் லாரி என் கண்ணாடிகளை உடைத்து மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து பொதுமக்களை கலைத்தனர். இதனைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தங்கராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை மற்றொருவருக்கு ஒதுக்கியதாக முதியவர்கள் கண்ணீர் புகார்

Image
திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே புக்குளம் கிராமத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுஅடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வேறு ஒரு நபர் குடியிருப்பதால் தங்களுக்கான வீட்டிற்கு செல்ல முடியாமல் வீடு இன்றி கண்ணீர் விட்டு கதறி அழுது முதியவர்கள் வேதனை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு ஒன்றரை வருட காலமாக தவணைத் தொகையை வங்கிக்கு செலுத்தி வரும் நிலையில் வேறு வீடு ஒதுக்கீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்து யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் பயப்பட மாட்டேன் என மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட முதியவர்கள் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம், புக்குளம் கிராமத்திற்கு உட்பட்ட ஜெ ஜெ நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு என்கிற திட்டத்தில் சந்திரா மாரிமுத்து தம்பதியினருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு  வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இவர்களது குடியிருப்பு வீட்டின் எண் 225 என ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதிகாரிகள் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வழங்க...

‘’சாதாரண பஸ்ஸில் வந்த அமைச்சர் ரகுபதிக்கு எத்தனை கல்லூரிகள், எவ்வளவு சொத்து?’’ ... துறையூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Image
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் மணச்சநல்லூரில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் அடுத்ததாக துறையூர் தொகுதி,  திருச்சி சாலையில் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடையே பேசினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:  “திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிவருகிறார் ஸ்டாலின். இங்கு துறையூரை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் ஸ்டாலின். எங்கள் கட்சிக்கு மக்கள் பலம் இருக்கிறது. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நிர்ணயிக்கக் கூடிய பொதுமக்கள் எங்களிடம் உள்ளனர். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக நிறைய திட்டங்களைச் செய்திருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அவர் ஒன்றே ஒன்றுதான் செய்தார். தினமும் போட்டோ ஷூட் நடத்தினார். அவ்வளவுதான்.  இதே அதிமுக ஆட்சியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்க...

தீரன் சின்னமலை கல்லூரியில் இலவச மகளிர் நல மருத்துவ முகாம்

Image
 தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் திருப்பூர் வஞ்சிபாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் மேற்கு ரோட்டரி மக்கள் மருத்துவமனை சார்பில் இலவச மகளிர் நல மருத்துவ முகாம் வஞ்சி பாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.  மருத்துவ முகாமிற்கு கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி  முனைவர் ரேச்சல் நான்சி ஃபிலிப் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் மோகன சவுந்தரி   வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் துணைத் தலைவர் பி வி எஸ்  பி. முருகசாமி மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் 800 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு பொது மருத்துவம், கண், பல், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலம் மற்றும்  சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும்  மருத்துவர்கள் ஆலோசனைப்படி   மருந்துகளும் வழங்கப்பட்டது.  முகாமில் ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் லோகநாதன், மண்ட...