Posts

"புதிய அரசுக்கு வாழ்த்துகள், திமுக அரசின் வளர்ச்சி திட்டங்களை தவெக தொடர வேண்டும்" - புதிய ஆட்சியமைவுள்ள நிலையில், மு.க. ஸ்டாலின் வாழ்த்து.!

Image
 தமிழகத்தில் தவெக ஆட்சியமைவுள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தா...

முதலமைச்சர் ஆகிறார் விஜய்!!- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐஎம் ஆதரவு - விசிக நாளை ஆதரவு என தகவல் "அரசியல் சட்டப்படி - "புதிய ஆட்சி அமைய ஆளுனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.!

Image
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் நிலவி வந்த இழுபறிக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை அறிவித்துள்ளன. கவர்னர் ஆட்சி என்ற பெயரில் பாஜக கொல்லைப் புற வழியாக ஆட்சியமைப்பதை தடுப்பதற்க்காக வெளியில் இருந்து ஆதரவு அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என சிபிஐ, சிபிஎம் அறிவிப்பு சட்டமன்றத் தேர்தலில் தலா 2 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று வழங்கியது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விரைவில் கடிதத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது. இருப்பினும், 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 118 இடங்கள் இருந்தால்தான் பெரும்பான்மை நிரூபிக்க முடியும் என்ற சூழலில், ஆளுநர் ஆர்.என். ர...

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது - தூத்துக்குடியில் மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: ஆட்சியர் தகவல்.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டு, அரசுப் பணிகள் மீண்டும் வழக்கம்போல் தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 15-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. கடந்த மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளைத் திரும்பப் பெற்றுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் இன்று (மே 7) காலை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன. மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் மற்றும் இதர மக்கள் நலத் திட்ட முகாம்கள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் 'மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்', வரும் திங்கள் (மே 11) முதல் வழக்கம்போல் நடைபெறும். தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொதும...

தூத்துக்குடி: பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு.!

Image
தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல சரித்திர பதிவேடு ரவுடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோம்னிக் மகன் மரிய ஆக்னல் (36) துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டான் திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஆக்னலை கைது செய்ய முயன்றபோது நாட்டு துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை சுட்டுள்ளார். இதனால் தற்காப்புக்காக ரவுடி ஆக்னலை, எஸ்.ஐ. ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டு பிடித்தார் காயமடைந்த எல்.ஐ. ராஜபிரபு மற்றும் ரவுடி ஆக்னல் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக து/த்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி

"வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்" தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை.!

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆகியோருக்கு நன்றி இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது  தூத்துக்குடி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் மற்றும் திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், உதயசூரியனுக்கு வாக்களித்த 62,805 வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், அரசியல் பொதுவாழ்வில் கொள்கை காக்கும் பயணத்தில் நமது கொள்கை என்றும் தோல்வியடையாது. வெற்றி - தோல்வி எதுவானாலும் சமமாகக் கருதி நமது ...

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மீண்டும் மக்கள் பணி தொடரும்" மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

Image
  தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்றத் தேர்தல் தேதி 15.3.2026 அன்று அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 23ம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டு, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுவடைந்து 234 தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.  தமிழகம் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் அலுவலகங்கள் மற்றும் அரசு சாா்ந்த செயல்பாடுகளில் தலையீடு இல்லாமல் சுதந்திரமான தோ்தல் நடைபெற வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தால் நடைமுறையிலிருந்த நடைமுறை நேற்று 6ம் தேதி மாலை 6 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டது. இன்று 7 ம் தேதி முதல் வழக்கமான பணிகளை தமிழகத்தில் மேயா்கள் நகா்மன்ற தலைவர்கள் ேபரூராட்சி மன்ற தலைவர்கள் தங்களது மக்கள் பணிகளை தொடங்கவுள்ளனா்.   இந்நிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி கூறுகையில் கடந்த 50 மாதங்களாக மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுபகுதிகளிலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பாரபட்சமின்றி பணிகளை மேற்கொண்டு வந்தோம். தோ்தல் நடைமுறைக்கு பின்னா் அப்பணி ெதாடராமல் இருந்த நிலையில் தோ்தல...

'1 ஓட்டு முதல் 976 ஓட்டுகள்' வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த 15 பேர் யார்? தவெகவினர் எத்தனை பேர்?

Image
  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் வென்றுள்ளன. எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 98110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக உள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி பெற்ற வெற்றி, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது. ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளில் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் யார்? எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி? கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜெகநாத் மிஸ்ரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை 751 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். கள்ளக்குறிச்சி தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷ் அதிமுக வேட்பாளர் ராஜிவ்காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கன்னியாகுமரி தொகுதியில் அதிமு...