Posts

“விசாரணை பெயரில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்?”- சென்னையில் எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!

Image
சென்னை கொடுங்கையூரில் இளம்பெண்ணிடம் விசாரணை என்ற பெயரில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. நகை மாயமான விவகாரத்தில் விசாரணைக்கு சென்றதாக கூறப்படும் குற்றப்பிரிவு எஸ்.ஐ தனசேகரன், வீட்டில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு இளம்பெண்ணிடம் தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும், முத்தம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். பயந்து கூச்சலிட்ட இளம்பெண்ணை தொடர்ந்து, அங்கிருந்து எஸ்.ஐ தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக்கில் இடிப்பது போல் வந்த விவகாரத்தில் தூத்துக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது : ஒருவருக்கு வலைவீச்சு

Image
தூத்துக்குடியில் பைக் இடிப்பது போல் வந்த விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் மோதலில், வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகத் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி தாளமுத்து நகர், வண்ணாரப்பேட்டை ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாரிசெல்வம் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தாளமுத்து நகர் நேரு நகரில் உள்ள ஒரு கெபி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே தாளமுத்து நகர் சோட்டையன்தோப்பைச் சேர்ந்த சண்முக கணேசன் மகன் சந்தனராஜ் (21) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது சந்தனராஜ், மாரிசெல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது இடிப்பது போல் வண்டியை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த மாரிசெல்வம், சந்தனராஜைக் கையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்கள் - அமைச்சரிடமே அர்ச்சகர்கள் பணம் வசூலித்ததால் அதிர்ச்சி..!

Image
  அமைச்சர் ரமேஷிடம் விரைவு தரிசனத்துக்கு அழைத்து செல்ல ரூ.4,000 வாங்கிய அர்ச்சகர்கள்.ரூ.4,000 பணத்தை ஜி-பே மூலம் அனுப்பிய அமைச்சர் ரமேஷ். கையும் களவுமாக பிடிபட்ட அர்ச்சகர் இடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.  இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம்  4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர்.  (கடந்த முறை திருச்செந்தூர் சென்று கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினர்  பாதி வழியில் விட்டு விட்டு ஒரு அர்ச்சகர் பெயரை சொல்லச் சொல்லி சென்றார் அந்த அர்ச்சகரியிடம் அந்த தம்பதியினர் பெயரை குறிப்பிட்டு சொல்லிய போதும் உள்ளே வரவிடவில்லை. கைக்குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தையாக மட்டுமே இருக்கக்கூடும் அவ்வளவு நெரிசலில் பணத்தையும் கொடுத்துவிட்டு பாதியில் அந்த அர்ச்சகரை தேடிச் சென்றது மிகுந்த வேதனையை தந்தது). தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்...

பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் நிறுத்தப்பட்டால்...?? தமிழ்நாடு ₹50,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புகளை இழக்க நேரிடும் என பொது மக்கள் அச்சம்.!

Image
  முதல்வர் விஜய்யின் உத்தரவுப்படி ஒருவேளை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால், தமிழ்நாடு ₹50,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புகளை இழக்க நேரிடும் - இதில் விமான நிலையம், ₹15,906 கோடி மதிப்பிலான மெட்ரோ இணைப்பு, விரைவுச்சாலை இணைப்பு, ஏரோசிட்டி, லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் மற்றும் மேற்கு சென்னையை இந்தியாவின் அடுத்த மாபெரும் பொருளாதார மண்டலமாக மாற்றக்கூடிய அசுர வேலைவாய்ப்பு உருவாக்கம் என அனைத்தும் முடங்கிப்போகும் அ*பாயம் உள்ளதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத்துக்காக திட்டமிடப்பட்ட மொத்த முதலீடு ₹20,000 முதல் ₹32,700 கோடி. 2 ரன்வேக்கள், பிரம்மாண்டமான கார்ஹோ ஹப், ஏரோசிட்டி-னு வருஷத்துக்கு 10 கோடி பயணிகளைக் கையாளுற அளவுக்குப் பெரிய பிளான் இது. இதோட சேர்ந்து, பூந்தமல்லியில இருந்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியா பரந்தூர் வரைக்கும் ₹15,906 கோடியில் 53 கிலோமீட்டர் நீளத்துக்கு 20 ஸ்டேஷன்களோட சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கும் திட்டம் ரெடியாகி, ஆரம்பக்கட்ட நிலம் கையகப்படுத்துற வேலைகளுக்கு ₹2,126 கோடியும் ஒதுக்கப்பட...

தூத்துக்குடியில் ஆய்வுக்கு உட்படாத 27 விசைப்படகுகளின் உரிமப் பதிவை நிரந்தரமாக ரத்து செய்ய மீன்வளத்துறை நடவடிக்கை.!?

Image
தூத்துக்குடியில் ஆய்வுக்கு உட்படாத 27 விசைப்படகுகளின் உரிமப் பதிவை நிரந்தரமாக ரத்து செய்ய மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளின்படி, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து மீன்பிடி கலன்களும் ஆண்டுதோறும் தங்களது படகுகளின் தகுதி குறித்து அதிகாரிகளிடம் நேரடி ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்பிடி விசைப்படகுகளையும் ஆய்வு செய்யும் பணிகள் கடந்த இரு நாட்களாகத் தீவிரமாக நடைபெற்றன. இப்பணிக்காக மீன்வளத்துறை சார்பில் மொத்தம் 14 சிறப்புக் தணிக்கை ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், தருவைகுளம் மற்றும் வேம்பார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை மற்றும் மீனவப் கிராமப் பகுதிகளில் நங்கூரமிட்டிருந்த விசைப்படகுகளில் இறங்கி முழுமையாக நேரடி ஆய்வு நடத்தினர். இந்தத் தணிக்கையின் போது, விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தகுதியான உடலமைப்பைக் கொண்டுள்ளனவா, படகு இயந்திரத்தின் ...

அமைச்சா் மதன்ராஜா தூத்துக்குடி வருகை: புறக்கனித்த தூத்துக்குடி தவெகவினா்.!

Image
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதன்ராஜா தமிழக முதலமைச்சா் விஜய் அமைச்சரவையில் கடந்த 21ம் தேதி குறுசிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கொண்டபின் முதன்முறையாக இன்று தூத்துக்குடிக்கு வந்தார். ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னா் தூத்துக்குடி 3ம்மைலில் உள்ள முத்துராமலிங்க தேவா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வரும் வழியில் அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குரூஸ்பா்னாந்து மணிமண்டபத்தை கடந்து வந்து அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சா் சுமாா் 10 நிமிடம் பூட்டப்பட்டிருந்த கேட்டின் வௌியே நின்றிருந்தாா். பின்னா் திறக்கப்பட்ட நிலையில் அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னா் யாரோ நினைவுறுத்தியதையடுத்து வந்த பாதைக்கு திரும்ப சென்று குரூஸ்பா்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது மாலை இல்லாத நிலையில் பின் தொடர்ந்து வந்த காாிலிருந்த மாலையை எடுத்து குரூஸ்பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியத...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர். அமைதியாக சாதித்து காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்றபோது தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வகைகளில் மாநகரம் பாதிக்கப்பட்டிருந்தது குடிநீர் பிரச்சனை என்பது தூத்துக்குடி மாநகரில் தீர்க்க முடியாத பிரச்சனையாகவே இருந்து வந்தது. மாநகராட்சி அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர் பிரச்சனை நூறு சதவீதம் தீர்க்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட வார்டுகளில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது சில பகுதிகளில் மட்டும் தான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதுதான். மாநகராட்சியின் குறிக்கோள் அதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து வந்தனா்.  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு வல்லநாடு. அகரம். கலியாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வரம் 2 3 வது உரக்கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் முற்றிலும் சேதம் அடைந்தது. அதனை கட...