Posts

Showing posts from June, 2019

சுக்ரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்: எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

Image
திருப்பூர் அருகில் உள்ள 2800 ஆண்டுகள் பழமை வாந்த சுக்ரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. அர்ச்சகர்கள் மார்பளவு தண்ணீரில் அமர்ந்து வேத மந்திரங்கள் முழங்கினர். திருப்பூர் அடுத்த சர்க்கார் பெரியபாளையத்தில் 2800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில், பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த யாகபூஜையில்,  கோவில் தலைமை அர்ச்சகர் கணேசமூர்த்தி, கரூர் ஆதீனம் குமார் சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில்  ஆறு சிவாச்சாரியார்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ல் அமர்ந்து மழை வேண்டி வேத மந்திரங்கள் முழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற யாகத்தில், 501 வகையான மூலிகைகள் இட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தொடந்து சுக்ரீஸ்வரர், ஆவுடைநாயகி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணேஷ், ராஜேந்திரன், சடையப்பன், ரத்தினமூர்த்தி,  செல்வராஜ், சுப்பிரமணிய குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

திருப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Image
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கு கோறியும், .பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும்  தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தெலுங்கானா மாநிலத்தில் ஒன்பது மாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு திருப்பூரில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க கோரியும், .பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும்  தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்,  பாலியல் வன்முறைக்கு நாடு முழுவதும் தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும், இதுவரை தேங்கிய பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும், பெண்களை ஆபாச பொருளாக காட்டும் திரைகாட்சிகளை தடை செய் தனி சட்டமியற்றி தண்டனை கொடுக்க வேண்டும், .ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும், விசாகா தீர்ப்பின்படி மனரீதியான பாலியல் வன்கொடுமையையும் குற்றசெ...

திருப்பூர் : இராணுவ வீரர் மனைவி தற்கொலை

Image
திருப்பூரில் ராணுவ வீரரின் மனைவி தூக்கில் தொங்கிய படி பிணமாக மீட்பு! போலீசார் தீவிர விசாரணை!! திருப்பூர் பாண்டியன் நகரை அடுத்துள்ளது சாய்குமரன்காலனி ஐந்தாவது தெரு. இத்தெருவில் வசித்து வருபவர் நர்மதா தேவி(33). இவரது கணவர் பிரகாஷ் சென்னை ஆவடியில் ராணுவ வீரராக பணியாற்றிவரும் நிலையில் தனது இரு குழந்தைகளுடன் வசித்துவந்தார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரகாஷ் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று காலை நர்மதா தேவியின் குழந்தைகள் படித்துவரும் தனியார் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் தினேஷ்குமாரின் செல்போனிற்கு வாட்சாப் மூலமாக நர்மதா தேவி வீட்டில் சேலையை கட்டி தூக்கில் தொங்குவது போல் படத்துடன் தனது குழந்தைகளை நன்றாக பார்த்துகொள்ளவும் என தகவல் அனுப்பி இருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் உடனடியாக நர்மதா தேவியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய படி உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நர்மதா தேவியின் உடலை இறக்கி பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்ததில் ஏற்கன...

திருப்பூர், பெரிச்சிபாளையத்தில்  குப்பையை உரமாக்கும் கிடங்கு அமைக்க எதிர்ப்பு

Image
திருப்பூர் மாநகராட்சி 51-வது வார்டு பெரிச்சிபாளையத்தில்  குப்பையை உரமாக்கும் கிடங்கு அமைக்க எதிர்ப்பு வாகனத்தை சிறை பிடித்து அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள்  வாக்குவாதம்      திருப்பூர் மாநகராட்சி, 4-வது மண்டலத்திற்குட்பட்ட 51-வது வார்டு, பெரிச்சிபாளையம்த்தில் திரு.வி.க. செல்லும் வழியில் உள்ள சுடுகாடு உள்ளது. அங்கு பெரிச்சிபாளையம், அண்ணமார் காலனி, திரு.வி.க. நகர், வெள்ளியங்காடு, கோபால் நகர், பட்டுக்கோட்டையார் நகர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் வசிப்பவர்கள் அந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குப்பை தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் கிடங்கு அமைக்கும் பணிக்காக 5 சென்ட் சுடுகாட்டு ஓடை நிலத்தில் ஒருபகுதியை அதிகாரிகள் தேர்வு செய்து கிடங்கு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போது ஊர் பொதுமக்கள் சார்பில் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்க வேண்டாம் என்றும் மாற்று இடம் தேர்வு செய்ய கோரியும், அதிகாரிகளிடம் கோரிக்கை மற்றும் மனுக்கள் மூலமாகவும் தெரிவித்து வந்தனர்.     இந்த நி...

திமுக தெருமுனை பிரச்சாரம்

Image
தி.மு.க.,வடக்கு மாவட்டம், கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 51-வது வார்டு செயலாளர் ஆதவன் முருகேஷ் தலைமையில் நேற்று இரவு தாராபுரம் ரோடு, புதூர்பிரிவு, பேருந்து நிறுத்தம் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அதில் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், கருவம்பாளையம் பகுதி கழக அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி, தலைமை கழக பேச்சாளர் போடி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மாவட்ட, மாநகர,  51-வது வார்டு நிர்வாகிகள், கலந்து கொண்டனர்

எஸ்.ஆர்., நகரில் குப்பைக்கிடங்கு அமைத்தால் போராட்டம் நடத்துவோம் - மாநகராட்சி அலுவலர்களுடனான அமைதிக்கூட்டதில் பொதுமக்கள் எச்சரிக்கை

Image
திருப்பூர் மாநகராட்சி 60 வது வார்டுக்குட்ப்பட்ட எஸ்.ஆர்., நகர் பகுதியில் குமரன் கல்லூரி பின்புறம் திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை உரக்கிடங்கு அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் துவக்கினர்.   ஆனால், அந்த பகுதி பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று (வெள்ளி) முருகம்பாளையத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன், தெற்கு காவல் உதவி ஆணையர் நவீன், மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி, உதவி பொறியாளர்  திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் ராஜேந்திரன், குடிநீர் ஆய்வாளர்கள் மூர்த்தி, மோகன்ராஜ் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம், 'குப்பைக்கிடங்கால் எந்த இடையூறும் வராது' என கூறி பேசினார்கள். ஆனால் மறுதரப்பில் பொதுமக்கள் அந்த பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்தினர். இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது, உதவி ஆணையர் கண்ணனுக்கும், பொதுமக...

தமிழ் மொழி சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம்

Image
   தமிழ்ப் பண்பாட்டு மையம் மற்றும் சுப்ரீம் மொபைல்ஸ் இணைந்து நடத்திய தமிழ் மொழி சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.    இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் திரு.சிவக்குமார் வரவேற்றார்.இப் பயிற்சி வகுப்பில் தமிழில் பிழையின்றி  எழுத, உச்சரிக்க 5-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை சென்னையை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு  பெற்ற தமிழாசிரியை பா.குமுதராஜாமணி. MA Blit, அவர்கள் " விரலசைவு விளையாட்டு" எனும்  எளிய முறையில் தமிழ்ப் பயிற்சி வழங்கினார். இவ் வகுப்பில் எழுத்துக்களின் வடிவம், சொல், நீட்டெழுத்துகள்,துணை  எழுத்துக்கள், கொம்பு எழுத்துக்கள், சுழி எழுத்துக்கள், ஒற்றெழுத்துக்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.. மேலும் ழகரம், றகரம்,  னகரம்  வரும் இடங்கள்,இலக்கணம்,பகுபத உறுப்புகள், சந்திப்பிழை, விகாரம், விகுதிகள், ஐகார குறுக்கம், தினை உறுப்புகள் , வினை, வினைச் சொல்...

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

   திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29.06.2019 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 3.00 மணி வரை உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.    இந்நிகழ்ச்சியில் கோவை, சென்னை, ஈரோடுமற்றும் திருப்பூர் போன்ற பெருநகரங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளனர் இம்முகாமில் பணிநியமனம் பெற்றவார்களுக்கு கால்நடைபராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை மு.ராதாகிருஷ்ணன் பணிநியமன ஆணை வழங்க உள்ளார்.மேலும், இளைஞர்கள் தங்களது வேலை பெறும் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவாக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக பல்வேறு திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் வருகை புரிந்து இலவசமாக திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினையும் அளிக்க உள்ளனா. அயல் நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும் தனித் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் அனைத்து மாவட்டத்தில் உள்ள வ...

அரசின் சிமெண்ட், இரும்பு கம்பிகள் வழங்கும்திட்டம்

திருப்பூர்  மாவட்டத்திற்குட்பட்ட 13 வட்டாரங்களின் கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையால் செயல்படுத்தப்படும் குடியிருப்புத் திட்டங்களான பிரதம மந்திரி  கிராம குடியிருப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் சூடிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் ஆகிய திட்டங்களின் பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட தேவைப்படும் சிமெண்ட் மூட்டைகள், இரும்புக் கம்பிகள் ஆகியன அலுவலக நேரத்தில் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பிரதி வாரம் வியாழன் மற்றும் வௌ;ளி ஆகிய இரு நாட்கள் நடைபெறும். எனவே, சம்மந்தப்பட்ட பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பிகளை பெற்று பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நான் ராஜினாமா செய்யவேல.. - வெள்ளகோவில் சாமிநாதன் சொல்கிறார்

Image
மாநில இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை உரிய நேரத்தில் தலைவர் சரியான முடிவெடுப்பார் என திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறி உள்ளார். தண்ணீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணத தமிழக அரசைக்கண்டித்து திருப்பூர் மாநகர மாவட்ட திமுக சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . காலிக்குடங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக்கண்டித்தும் , தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத தமிழக அரசு பதவி விலககோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர் . இதில் முன்னால் அமைச்சரும் மாநில இளைஞரணி செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், திமுக  . பின்மாவட்ட கலந்துகொண்டிருந்தார்செயலாளர் க.செல்வராஜ், டிகெடி. நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேட்டியளித்த வெள்ளகோவில் சாமிநாதன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ள நிலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் , கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததையும் தமிழக அரசு மறுத்துள்ளது கண்டனத்துக்குரியது எனவும் , இளைஞரணி ம...

பம்மல் ஸ்ரீசங்கரா பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி

Image
பம்மலில் உள்ள ஸ்ரீ சங்கரா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்களின் அறிவு திறன்,மன அமைதி ம ற்றும் ஒழுக்கம் போன்றவற்றை அதிகரிக்கும் வகையில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி நடத்தப்பட்டு சுற்றுப்புற சூழல் நலன் காக்கவும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக... காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையா தமிழ்நாடு காவல்துறை துணை ஆணையர் திரு.சிவகுமார் (எக்மோர்). பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு பொன்னையா விழாவில் மரக்கன்றுகளையும் நாட்டினர்..    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாணவ மாணவிகள் மத்தியில் உரையாடல்..   5வது உலக யோகா தினத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.. யோகா என்பது எல்லாம் திறன்களையும் அடங்கியதாகும்...   மனதை ஒருங்கினைத்து படிப்பில் கவனம் செலுத்துவதற்கு யோகா முக்கியமான ஒன்று..   மாணவ,மாணவிகள் அனைவரும் யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்..   பின்  மாவட்ட ஆட்சியர் பொன்னையா கையால் மரக்கன்றுகளை நாட்டினார்..LLL

திருப்பூர்: தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி யாகம் - விஜயகுமார் எம்.எல். ஏ., நடத்தி வைத்தார்

Image
திருப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருப்பூரில் உள்ள கோவில்களில் நடந்த யாகத்தில் அர்ச்சகர்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி யாகண்பூஜைகள் செய்தனர். திருப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில், திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பூளுவபட்டி கரியகாளியம்மன் கோவில், வேலம்பாலையம் ஜலகண்டேஸ்வரர் கோவில், கொங்கு நகர் அம்மன் கோவில் ஆகிய இடங்களில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு எம்.எல். ஏ கே.என்.விஜயகுமார் யாக பூஜைகளை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் மழை வேண்டி ஹோம பூஜைகள் நடந்து. தொடர்ந்து, அர்ச்சகர்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி வேத மந்திரங்கள் முழங்கினர். தொடர்ந்து யாக சாலை சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டது.

திருப்பூர் 55 வது வார்டில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்: எம்.எல். ஏ., சு. குணசேகரனிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு

Image
 திருப்பூர் 55 வது வார்டில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் எம்.எல். ஏ., சு. குணசேகரனிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு         திருப்பூர் மாநகராட்சி, புதிய 55 வது வார்டுக்குட்பட்ட  டி.எஸ்.கே.நகர் ரிசர்வ் சைட்டில் உடற்பயிற்சி செய்வோர் மற்றும் பொதுமக்கள் சார்பில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு. குணசேகரனிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது; திருப்பூர் மாநகராட்சி,  55 வது வார்டுக்குட்பட்ட (பழைய 51 வது வார்டு) டி.எஸ்.கே.நகர் பகுதியில் ரிசர்வ் சைட் இடம் உள்ளது. ( நகர அளவை எண்கள்: O/11/14/34, O/11/15/1,2pt). மேற்படி இடத்தில் திருப்பூர் டி.எஸ்.கே.நகர், பெரிச்சிபாளையம், வெள்ளியங்காடு, திரு.வி.க நகர், கோபால் நகர், கரட்டாங்காடு, செரங்காடு, சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதால் தேவையான உபகரணங்கள் சிலவற்றை நாங்கள் ஒருங்கிணைந்து வாங்கி பயிற்சி மேற்கொள்கிறோம். இந்த இடத்தில் தாங்கள்...

தமிழ் வாழ்க.. பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க.. நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழக எம்.பி.க்கள்

Image
தமிழ் வாழ்க.. பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க.. நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இன்று பாராளுமன்றத்தில் பதவி ஏற்று முடித்ததும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க. எம்.பி.க்களை போல தமிழ் வாழ்க என்று கூறினார்கள். கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பதவியேற்றதும் உலக தமிழர்களே ஒன்று கூடுங்கள் என்று முழக்கமிட்டனர். தமிழ் வாழ்க என்று தமிழக எம்.பி.க்கள் சொன்னபோதெல்லாம் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் பாரத் மாதாகீ ஜே என்று கோ‌ஷமிட்டனர். அ.தி.மு.க....

கேரள மார்க்சிஸ்ட் தலைவரின் மகன் மீது பாலியல் புகார்

Image
கேரள மார்க்சிஸ்ட் தலைவரின் மகன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த  33 வயது பார் டான்சர், பினோய் கொடியேறி மீது பாலியல் பலாத்கார புகாரை கொடுத்துள்ளார். துபாயில் பார் டான்சராக இருந்த போது பினோய் உடன் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி என்னை பார்க்க பாருக்கு வருவார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். மும்பைக்கு வந்து இருவரும் வாழ்ந்தோம். அவரால் எனக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஆண்டுதான் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது எனக்கு தெரியும் என கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக  பாலியல் பலாத்காரம் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில்  மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துபாயை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெஏஏஎஸ் சுற்றுலா நிறுவனம், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் பினோய் ரூ. 13 கோடியை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டியது. இவ்விவகாரத்தில் துபாய் ...

பாராளுமன்றத்தில் முழங்கிய தமிழ் முழக்கம்

பாராளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து சில மாநில எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அதன்பிறகு தமிழக எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். வழக்கமாக எம்.பி.க்கள் பதவி ஏற்கும்போது, 'உளமாற உறுதி கூறுகிறேன்...' என்று கூறி முடிப்பார்கள். அதன்பிறகு பாராளுமன்ற பதிவேட்டில் கையெழுத்திட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவார்கள். ஆனால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இன்று பாராளுமன்றத்தில் பதவி ஏற்று முடித்ததும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க. எம்.பி.க்களை போல தமிழ் வாழ்க என்று கூ...

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி; வறுமையை வென்ற ஐ.ஏ.எஸ்.நாயகன் சிவகுரு பிரபாகரன்

Image
குடும்ப சூழலும் வறுமையும் தமது இலட்சியத்தை அடைவதற்கு தடைகள் அல்ல என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.... இவர் பெயர் திரு சிவகுரு பிரபாகரன். தற்போது இவர் IAS பயிற்சியில் உள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு குக்கிராமத்தில் மிக வறுமை குடும்பத்தில் பிறந்தவர். தாய் மட்டுமே சாலை ஓரத்தில் இளநீர் விற்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவர் நன்றாக படித்ததன் காரணமாக அரசு கல்லூரியில் BE படிப்பில் சேருகிறார். ஆனால் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை. படிப்பை பாதியில் விட்டு விட்டு கிராமத்திற்கு வந்து தாய்க்கு துணையாக தானும் ஒரு மரக்கடையில்பணியிலெ சேருகிறார். அவ்வருமானத்தை கொண்டு தம்பி தங்கையை படிக்க வைக்கிறார். சில ஆண்டுகள் கழித்து தன் படிப்பை தொடர்ந்து முடிக்கிறார். சென்னையில் ME சேருகிறார் வறுமை தொடர்த்துகிறது. பல ஓட்டல்களில் வேலை பார்த்து க்கொண்டே படிக்கிறார். தனது இலட்சியத்தை அடையும் வகையில் பரங்கிமலை அருகே ஒரு சிறிய IAS பயிற்சி நிலையத்தில் சேருகிறார். இரவில் படுக்கை எல்லாம் பரங்கிமலை ரயில் நிலையம் தான். இறுதியில் அவரின் விடாமுயற்சியும் இலட்சியமே வென்றது.2018 ல் IAS அலுவலராக தேர்வு செ...

நாலரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் கைது

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தில் தனது வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த நான்கரை வயது சிறுமியிடம் அதே ஊரை சேர்ந்த, வெங்கலம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்த தகவலின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள அரும்பாவூர் போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிறுவனை கைது செய்து,இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மாவட்ட போலீசார் ஹெல்மெட் பேரணி

Image
திருப்பூர் , பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமையிலான போலீசார் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர் , இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கயல்விழி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார், முன்னதாக சாமளாபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப் பட்ட கண்காணிப்பு மைய பெட்டியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த கண்கானிப்பாளர் கண்காணிப்பு குறித்த சில விதிமுறைகளை விதித்தார், சாமளாபுரத்தில் துவங்கிய இரு சக்கர வாகன பேரணி காரணம்பேட்டை வழியாக திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே லக்ஷ்மி மில்ஸ், பல்லடம், பொங்கலூர் சென்று பிறகு பல்லடத்தில் நிறைவடையும் நிலையில் சுமார் 30 கிமீட்டர் விரைவில் இரண்டு வரிசையாக போக்குவரத்து விதிமுறைகளுடன் தலைகவசம் அணிந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர், ஆய்வாளர்கள் ரமேஷ் கண்ணன், நிர்மலா, சரவணன், அருள், மற்றும் வனிதாமணி உள்ளிட்ட போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என இப்பேரணியில் ச...

திருப்பூர் பள்ளிக்கு வந்த மாணவி சுருண்டு விழுந்து பலி

Image
திருப்பூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து பலியானார் திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் குடியிருந்து வரும் விக்னேஷ் புவனேஸ்வரி தம்பதியரின் மகள் வர்ஷா குமார் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் இன்று காலை வழக்கம் போல 7 மணிக்கு பள்ளிக்கு ஆட்டோ மூலம் சென்ற வர்ஷா வகுப்பறையில் காலை ஏழு முப்பது மணிக்கு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார் இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மாணவியை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார் பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என அவசர அவசரமாக வந்த சிறுமி வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துரிமையைப் பாதுகாக்க தனியாக இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்குகிறது -உ.வாசுகி

Image
”தமிழகத்தில் கருத்துரிமை பாதிக்கப்படுவதால், கருத்துரிமையைப் பாதுகாக்க தனியாக இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க உள்ளது.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கூறியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் உட்புகுத்துவது தொடர்ந்து வருகிறது. விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி பல்வேறு அடக்குமுறை செய்து சேலம் 8 வழி சாலை திட்டம், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைகிறது. இவற்றையெல்லாம் பார்க்கையில் அரசு எடுக்கும் கொள்கை முடிவுக்கு மாறாக யாரும் பேசக் கூடாது என்ற அதிகாரத்தில், ஆளும் அரசு போலீசார் மூலம் அடக்கு, ஒடுக்குமுறைகளை கையாள்கிறது. இதனால், தமிழகத்தில் போலீஸ் தன்  ராஜ்யத்தை நடத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அடக்குமுறையை,  ஒடுக்குமுறையை ஒருபோதும் சகித்து கொள்ளாது. மக்களில் கருத்துரிமைகளை பாதுகாப்பதற்காக ம...

பன்னிரெண்டாம் வகுப்பிற்கான புதிய தொழிற்கல்வி பாடபுத்தங்கள்; சிஇஓ சா.மார்ஸ் வழங்கினார்

Image
2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடபுத்தங்களை வேலூர் மாவட்ட மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் வழங்கினார்.  இதற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடபுத்தங்களை வேலூர் மாவட்ட மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் வழங்கினார்.  தணிக்கையியல், வேளாண் அறிவியல், அடிப்படை மின்பொறியியல், அடிப்படை இயந்திரவியல், நர்சிங், அலுவலக மேலாண்மை மற்றும் செயலரியல், அடிப்படை தானியங்கி ஊர்த்தி, தட்டச்சு மற்றும் கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம், உள்ளிட்ட 12வகையான தொழிற்கல்வி பாடங்களுக்கான கருத்தியல் மற்றும் செய்முறை பாடங்களுக்கான பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.  இதற்காக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் வேலூர் மாவட்ட தலைவர் எம்.வெள்ளியங்கிரி, மாவட்ட செயலாளர் க.ராஜா, மாவட்ட பொருளாளர் எம்.பாண்டுரெங்கன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சண்முகம், மாவட்ட இணை செய...

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 70 வயது முதியவர் காலில் இருந்து சுமார் 20 கிலோ கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை

Image
  திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி சா.ராமசுப்பு(70). இவரது வலது தொடையின் பின்புறத்தில் பெரிய கட்டி இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ராமசுப்புவை, அவரது உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ரா.சீனிவாசன், ராமசுப்புவின் வலது காலின் பின்புறத்தில் கொழுப்பு கட்டி உருவாகி உள்ளதை கண்டுபிடித்தார். இதையடுத்து நேற்று மருத்துவமனை கண்காணிப்பாளர் அ.கமலவாசன், உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவர் சீனிவாசன் தலைமையில் மருத்துவர்கள் இ.அருள்குமார், எஸ்.செல்வகுமார், மயக்கவியல் மருத்துவர் எஸ்.இளங்கோ மற்றும் குழுவினர், ராமசுப்புக்கு சுமார் ஒன்றை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, காலில் இருந்து கொழுப்பு கட்டி அகற்றினர். இதுகுறித்து, மருத்துவர் ரா.சீனிவாசன் கூறும்போது, முதியவர் ராமசுப்புவை பரிசோதித்தபோது, அவரது வலது காலில் இருந்த கட்டி, கால் இயக்கத்துக்கு உதவும்  செயாடின் நரம்பு, ரத்த நா...

கோவில்பட்டி அருகே மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி

Image
கோவில்பட்டி அருகேயுள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தினை சேர்ந்த மருதையா என்பவரது மகன் மாரியப்பன். கூலி தொழில் செய்து வந்த மாரியப்பனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவில்பட்டி புதுக்கிராமத்தினை சண்முகப்பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சண்முகப்பிரியா கர்பமாக உள்ளார். இன்று காலையில் வெகுநேரமாகியும் மாரியப்பனும் , அவரது மனைவியும் வீட்டை வீட்டு வெளிய வரவில்லை என்பதால், அருகில் வசிக்கும் மாரியப்பன் சகோதிரி காளியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். வீடு உட்புறமாக பூட்டி இருந்துள்ளது. இதனை தொடர்ந்து தனது தம்பியை பெயரை சொல்லி அழைத்துள்ளார். பதில் வரவில்லை, வெகுநேரமாக கூப்பிட்டு இருவரும் வெளியே வரவில்லை என்பதால், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்து இருக்கின்றனர். மாரியப்பன்,சண்முகப்பிரியா இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் முதல் அறையில் அரை மயக்கத்தில் காயங்களுடன் மாரியப்பன் கிடந்துள்ளார்....

தேர்தல் படுதோல்வியால் சி.பி.ஐ - சி.பி.எம் இணைகிறதா?

Image
இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணி என்பது கருத்து சுதந்திரத்தை பேசகூட உரிமை இல்லை குறிப்பாக ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை ,ஸ்டெர்லைட் போன்ற விசயங்கள் குறிப்பிட்ட தக்கது என்றார். 122 நாட்களுக்கு மேலாகியும் காணாமல் போன முகிலன் விசயத்தில் காவல்துறையினர் மெத்தனமாக இருந்து வருகின்றனர் தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார். இந்திய அரசியலில் வலது சாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றும் முனைப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரச்சாரம் செய்ய போகிறோம். கருத்துரிமை என்ற இயக்கத்தை தூத்துக்குடியில் துவங்க மார்க்சிஸ்ட் திட்டமிட்டுள்ளது என்றார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். கூட்டியக்கமாக ச...

அங்கோர்வாட் கோவில் கட்டிய இரண்டாம் சூர்யவர்மன்

Image
அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் [3] ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைபற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோயில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோயில் ஒரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழு...

மதுரையில் செல்போன் கடைக்காரர் ஓடவிட்டு வெட்டிக்கொலை

மதுரை புதூரில் செல்போன் கடைக்காரர் ஓட விட்டு வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞர் வயது 22 இவர் செல்போன் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவர் மீது செல்போன் திருட்டு , ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளது.இதனை தொடர்ந்து ஆறுமுகம் என்ற இளைஞர் புதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.கொ லைசம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களின் பாலமுருகன் என்ற நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் மதுரை முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. சம்பவ இடத்தில் படம் எடுத்த நிருபர்களை காவல்துறையினர் மிரட்டி அவர்களின் செல்போன்களை பறித்தனர். நிருபர்களுக்கு காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அரக்கோணத்தில் 4 மாடுகள் அடுத்தடுத்து சாவு

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அடுத்தடுத்து  4 மாடுகள் திடீர் என சுருண்டு விழுந்து இறந்துள்ளது, முன்று மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரக்கோணம் அடுத்த சின்ன மோசூரில் அடுத்தடுத்து நான்கு மாடுகள் இறந்துள்ளது, முன்று மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்கள். அரக்கோணம் அடுத்த சின்ன மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பச்சையப்பன். இவர் தனது வீட்டில் 14 மாடுகளை வளர்த்து வந்தார். தனது விவசாய நிலத்தில் பசுந்திவனம் வளர்த்து அந்த படுந்திவனம் மாடுகளுக்கு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று மாலை தனது நிலத்தில் விளைவித்த *சொர்கம்* வகை பசுந்திவனத்தை மாடுகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த திவனத்தை உண்ட பசுக்கள் மற்றும் காளைகள் நேற்று மாலை மெல்ல வாயில் நுரை தள்ளிய நிலையில் இரவு அடுத்தடுத்து இரண்டு பசுக்கள் இரண்டு காளை மாடுகள் தனது நிலத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளன. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் மேலும் ஆபத்தான நிலையில் உள்ள முன்று பசு மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்கள். இது குறித்து ...

பாச மழையில் மழலைகள்: மாணவர்கள் உள்ளம் கவர்ந்த சுபாஷிணி டீச்சர்!

Image
 வாத்தியார், டீச்சர் என்றாலே ஒருவித பயம் அவர்களையும் அறியாமல் பிள்ளைகளுக்கு வந்துபோகும்! அதுவும் தொடக்கப்பள்ளிகளில், மிரள மிரள பிள்ளைகள் உட்கார்ந்திருப்பார்கள். இதைதான் உடைத்தெறிந்து வருகிறார் சுபாஷினி புதுச்சேரி நோனாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது அரசு தொடக்கப் பள்ளி. இங்கு வேலை பார்த்து வருகிறார் சுபாஷினி. டீச்சர் வேலை என்றால் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அதிலும் கிளாஸ் ரூமில் பிள்ளைகள் சிரித்து கொண்டும், விளையாடி கொண்டும் இருக்கிறார்கள் என்றால் இவருக்கு கொள்ளை பிரியமாம். அதற்காக அங்கே பாட போதனையே நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. வாசித்தல் என்பதை வகுப்பறைக்குள் அடைத்துவைக்க சுபாஷினி விரும்பவில்லை. வகுப்பறை சூழலுக்குள் அந்த மாணவ பிஞ்சுகளை எப்படி பழக்கப்படுத்துவது என்பது குறித்துதான் யோசித்தார் சுபாஷினி. #ஊக்குவிப்பு க் - க் = கொக்கு, ங் - ங் = சங்கு என்று தொடங்கியது படிப்பு. மாணவர்கள் ஆர்வத்துடனும், ஆசையுடனும் லயித்து படிக்க ஆரம்பித்தார்கள். வெறும் படிப்பு மட்டுமல்லாமல், அவர்களது திறமைகளையும் ஊக்குவிக்கும் பொறுப்பையும் ஏற்றார் சுபாஷினி. பிள்ளைகள் வகுப்பில் ஓவியம் உட்பட அனைத்து ...

நிபா பீதி : மேலும் ஒருவர் ஜிப்மரில் அனுமதி

காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கேரளாவில் பணியாற்றி வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று காலை அவர் மீண்டும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது காய்ச்சல் என்னவென்று அறியமுடியாததால் அவருக்கு நிபா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படியில் அவர் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் அவர் நேற்று இரவு ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகள், சிறுநீர் சேகரிக்கப்பட்டு புனே மத்திய சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. சோதனை முடிவில் அவருக்கு நிபா வைரஸ் உள்ளதா என உறுதிப்படுத்தப்படவுள்ளது.

மின் கோபுரங்களின் மீதேறி விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்து மின் இணைப்பு இணைக்கு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் அரியலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூர் மாவட்டம் திருவலம் வரை விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்அழுத்த கோபுரம் அமைத்து மின் பாதை இணைக்கும் செல்லும் பணி கடந்த ஆண்டுகளாக நடைபெற்று வந்த விவசாயிகள் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தால் கடந்த ஒரு ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது பவர் கிரிட் நிறுவனம் தனது ஊழியர்களுடன் இன்று காலை உயர் மின் கோபுர பணிகளை தொடங்கியதால் இதற்கு எதிப்பு தெரிவித்து சில விவசாயிகள் உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள் போராட்டத்தால் போலீசார் குவிக்க்பட்டுள்ளனர்

கோல்கொண்டா கோட்டையின் ரகசியங்கள்!

Image
ஒரு காலத்தில் கோல்கொண்டாவின் புகழ் உலகம் பூராவும் பரவிக் கிடந்தது. இந்தியாவைப் பிடிக்க வந்தவர்கள் எல்லாரும் கோல்கொண்டாவின் மீது கை வைக்காமல் போனது இல்லை. அந்த அளவிற்கு கோல்கொண்டா பிரசித்தி பெற்றது. கோல்கொண்டா என்று சிலர் கேள்வி பட்டிருக்கலாம். ஆனால், அதன் உண்மையான ரகசியங்கள் பலருக்குத் தெரியவே தெரியாது. 1960 களில் ரேடியோ மலேசியா என்று அழைக்கப் பட்ட  இன்றைய மலேசிய வானொலி எனும் மின்னல் எப்.எம். வாரத்திற்கு ஒரு முறை நேயர் விருப்பம் போடுவார்கள். அதைக் கேட்க தோட்ட மக்களே திரண்டு நிற்பார்கள். நான் பிறந்து வளர்ந்த மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தைச் சொல்கிறேன். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அதில் கோல்கொண்டா தோட்டத்தின் பெயர் வாரம் தவறாமல் வரும். அந்தத் தோட்டம் இப்போது அத்திம் மேடாக மாறி இருக்கலாம். இதை ஏன் சொல்ல வருகிறேன். இந்தக் கோல்கொண்டா எனும் பெயர் உலகில் பல நாடுகளில் பல இடங்களின் பெயர்களாக மாறி இன்னும் உச்சத்தில் இருக்கிறது. அதே மாதிரிதான் இங்கே மலேசியாவில் இருந்தது அந்தக் கோல்கொண்டா.  கோல்கொண்டா அல்லது Golconda என்பது ஓர் ஆந்திரச் சொல். உருதுச் சொல் என...

தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ; ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் அறிவிப்பு

Image
தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) நடக்கிறதென உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளார். • பொறியியல் மாணாக்கர் சேர்க்கையின் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு மே 2-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. . அதைத் தொடர்ந்து 2வது கட்டமாக, 3.6.2019 அன்று சமவாய்ப்பு எண் (Random Number) ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 46 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் நடைபெற்று முடிந்தது. அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 25.6.2019 அன்று மாற்று திறனாளிகளுக்கான நேரடி கலந்தாய்வும், 26.6.2019 அன்று முன்னாள் இராணுவத்தினர் வாரிசுகளுக்கும், 27.6.2019 அன்று விளையாட்டு வீரர்களுக்கான நேரடி கலந்தாய்வு சென்னை, தரமணியில் உள்ள மையப் பாலிடெக்னிக் கல்லூரியில் (Central Polytechnic College, Taramani, Chennai 600 113) 2_6116 அரங்கில் (Auditorium) நடை...

ஜூன் 20-ல் பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் மாணாக்கர் சேர்க்கையின் முதல் கட்டமாக மே மாதம் 2-ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை சேர்க்கைக்கான பதிவு இணையதள வாயிலாக நடைபெற்றது. • அதனைத் தொடர்ந்து கடந்த 3.6.2019 அன்று சமவாய்ப்பு எண் எனப்படும் Random எண் வழங்கப்பட்டது. • சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மையங்களிலும் 7.6.2019 முதல் 13.6.2019 வரை நடைபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏற்கெனவே, அட்டவணைப்படி ஆரம்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ் சரிபார்ப்பு 6 ஆம் தேதிக்கு பதிலாக 7 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதனாலும், இறுதியாக கூடுதல் ஒரு நாள் 13 - ஆம் தேதிக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நீட்டிக்கப்பட்டதாலும், மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள 46 TFC - சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் இருந்து அனைத்து சரிபார்ப்பு சான்று விவரங்களும் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு வந்து உயர்மட்ட கண்காணிப்பு சரிபார்ப்பு பணி செய்ய வேண்டியுள்ளதாலும், உத்தேசமாக 17.6.2019 அன்று நடைபெறுவதாக இருந்த Rank List பட்டியல் வெளியீடு 20.6.2019 அன்று நடைபெறும் என்றும், Rank List பட்டியல் அனைத்தும் மாணாக்கர்கள் பார்வைக்கு 4 நாட்கள் ...

பிளாஸ்டிக் தடுப்பில் அரசு தீவிரம்

Image
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி  தலைமையில் தலைமைச் செயலகத்தில், “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட, தமிழ்நாடு அரசால் ஜனவரி-1, 2019 முதல் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் அறிவிப்பின் மீதான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆய்வு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவது பற்றியும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய ஏற்கனவே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அரசின் ஆணையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பய...

உலக இசை தினம் -இசைப் போட்டிகள்

உலக இசை தினம் ஜீன்-21 ஆம் தேதி கொண்டாடப்படுவதால், தமிழகத்தில் இத்தினத்தினை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், சென்னை மாவட்ட அளவிலான உலக இசை தினவிழா இசைப் போட்டிகள் 19.06.2019 அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. உலக இசை தினவிழா போட்டிகள் 15 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களிடையே 1. தமிழிசை போட்டி, 2. கிராமிய பாடல் போட்டி, 3. முதன்மை கருவியிசைப் போட்டி ( நாதஸ்வரம், வீணை, வயலின், புல்லாங்குழல், மாண்டலின், கோட்டுவாத்தியம், சாக்ஸபோன், கிளாரிநெட் போன்றவை) 4. தாள கருவியிசை போட்டி (மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்றவை) என நான்கு வகை பிரிவுகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தமிழில் அமைந்த பாடல்கள் மட்டுமே பாடவோ / இசைக்கவோ வேண்டும். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான இசைக் கருவிகளை அவரவர் கொண்டு வருதல் வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/-, இரண்டாம் பரிசாக ரூ.2,000/-, மூன்றாம் பரிசு ரூ.1000/- என நான்கு வகையிலான போட்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். மேலும் பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும...

அடுத்24 மணி நேரத்தில் வெயில் கொளுத்தும் !

Image
சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,  வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியசும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என வதந்தியை பரப்புகிறார்கள் : அமைச்சர் வேலுமணி சொல்கிறார்

Image
தெரிவித்தார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குனர் ஹரிஹரன் மற்றும் அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். சென்னை உட்பட தமிழகத்தின் எந்த பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் மாதம் வரை தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாகக் கூறினார். பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்து வருவதாகக் கூறிய அமைச்சர் வேலுமணி, தற்போது நாள் ஒன்றுக்கு 9,100 முறையாக உள்ள குடிநீர் விநியோகம் பத்தாயிரம் முறையாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

திருப்பூர் பல்லடம் ரோட்டில் புதிய கன்னிமாரா பேமிலி ரெஸ்டாரண்ட் ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

Image
திருப்பூர் பல்லடம் ரோட்டில் புதிய கன்னிமாரா பேமிலி ரெஸ்டாரண்டை  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ராக்கியபாளையம் பிரிவில் கடந்த 17 ஆண்டுங்களாக வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்றவகையில் நாவிற்கு இனிய சிறந்த முறையில் செயல்பட்டு வரும் கன்னிமாரா பேமலி ரெஸ்டாரெண்டின் மேலும் ஒரு புதிய கன்னிமாரா சைனீஸ் தந்தூரி பேமலி ரெஸ்டாரெண்ட் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பல்லடம் ரோட்டில்,உள்ள ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபம் எதிரில் நடந்தது. விழாவிற்கு வந்திருந்தவர்களை ரெஸ்ட்டாரெண்ட் உரிமையாளர் வி.சேகர் மற்றும் குடும்பத்தினர்கள் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சித்துத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் தலைமை தாங்கி புதிய ரெஸ் டாரெண்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  இந்த ரெஸ்டாரெண்டில் இந்தியன் சைனீஸ் தந்தூரி சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன், இறால், மீன் வகைகள், நண்டு, மட்டன், சிக்கன், நாட்ட...

பெரம்பலூர் மாவட்டம்   வேப்பந்தட்டை பகுதியில் தொடரும் மான் வேட்டை; 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.

Image
               வேப்பந்தட்டை தாலுகா கொட்டாரக்குன்னு பகுதியில் அரும்பாவூர் இன்ஸ்பெக்ர் கலா, சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சாக்கு மூட்டையை வைத்துக் கொண்டு சென்றனர். சந்தேகமடைந்த போலீசார் பைக்கை நிறுத்திய போது அவர்கள் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அவர்களை துரத்தி சென்று 2 பேரையும் மடக்கிபிடித்து விசாரித்த போது அவர்கள் கொட்டாரக்குன்னு வை சேர்ந்த அருள் பாண்டி (31)பூமிதானத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (42) என்பது தெரிய வந்தது.                          விசாரணையில் அரும்பாவூர் பெரிய ஏரிப் பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த கிளைமானை நாட்டுதுப்பாக்கியால் சுட்டு பிடித்தது தெரிய வந்தது. பிடி பட்.ட நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கி, பைக், வேட்டையாடிய கிளை மான், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.                 இது குறித்து வேப்பந்தட்டை வன அலுவலர் குமாருக்கு தக...

கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் கார்த்திக் எம்.எல்.ஏ., அறிவிப்பு

வருகின்ற 19.6.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சீரான முறையில் குடிநீர் வழங்ககோரியும், குடிநீர் பஞ்சத்திற்கு காரணமான உள்ளாட்சிதுறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி பதவி விலககோரியும், வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மாநகர் மாவட்ட பொறுப்பாளர்  நா.கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவிப்பு.கடந்த 8 ஆண்டு காலமாக குடிநீர் திட்டம் தொடர்பாக உள்கட்டமைப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சரியாக செய்யாத காரணத்தால் கோவை மாநகரத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 15 நாட்கள் , சில இடங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்தும், கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி , பில்லூர் , ஆழியாறு போன்ற அணைக்கட்டுகள், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்...

டெய்ரி டே அறிமுகம் செய்யும் சில்லி குவாவா!

Image
  கொய்யா பழக்கலவை மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவையின் சுவைமிக்க கலவை  கோயம்புத்தூர், 2019, ஜுன் 17 : உங்களது தோழர்களோடும், தோழிகளோடும், அப்போது தான் பறித்த கொய்யாப்பழத்தில் சிறிது மிளகாய்ப்பொடியையும், உப்பையும் தூவி பகிர்ந்து உண்ட உங்கள் இளமைக்கால பருவத்தின் மகிழ்ச்சியான நினைவுகளை இப்போது மீண்டும் நனவாக்குங்கள். கொய்யா பழக்கூழ், மிளகாய்த்தூள் மற்றும் உப்பின் அற்புத சுவைமிக்க கலவையாக தயாரிக்கப்பட்டிருக்கும் சில்லி குவாவா ஐஸ்கிரீம் ஸ்டிக் அறிமுகத்தின் மூலம், இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் பிராண்டான டெய்ரி டே, உங்களை பின்னோக்கி அந்த இனிமையான குழந்தைப்பருவ காலத்திற்கே அழைத்துச்செல்லும் வாக்குறுதியை வழங்குகிறது. புத்தம் புதிய கொய்யாப்பழத்தை நிஜமாக கடித்து உண்பதைப்போலவே ஒரு இனிமையான சர்பத்தில் கொய்யாவின் உண்மையான சுவையை சில்லி குவாவா உங்களுக்கு வழங்குகிறது. 60 மி.லி. ஸ்டிக் ரூ. 20 என்ற விலையில் கோயம்புத்தூர்ரெங்கும் உள்ள அவுட்லெட்டுகளில் இப்புதிய ஐஸ்கிரீம் கிடைக்கிறது.  டெய்ரி டே நிறுவனத்தின் இயக்குநரான திரு. M N ஜெகநாத் பேசுகிறபோது, 'உணவுத்துறையில் அதிக புத்தாக்கமான துணைப்பி...

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு உபகரணங்கள் எம்எல்ஏ வழங்கினார் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டு

Image
சுரண்டை சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியின் கனிவேலவன் கலையரங்கத்தில் மாணவ மாணவிகள் உபயோகத்திற்காக மின் விசிறிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து அவரது சொந்த நிதியிலிருந்து உபகரணங்கள் வழங்கினர். கல்லூரி முதல்வர் (பொ) வரவேற்று ஜெயா கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக கல்லூரிக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சார்பில் ரூ 2.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், அனுமதி பெற்று தந்துள்ள காம்பவுண்ட் சுவர் பணிகள், 15 க்கும் மேற்ப்பட்ட நிரந்தர பேராசிரியர்கள் பணியிடங்கள், தேவைக்கேற்ப கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள், தனியார் பங்களிப்புடன் கலையரங்கம் கட்ட இயக்குனரின் அனுமதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றி தந்தமைக்கு மாணவர்கள் பேராசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் இன்னும் கல்லூரிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர்கள் கரையாளனூர் சண்முகவேல், நகர செயலாளர் சக்த...

வெள்ளகோவில் சாமிநாதன் ராஜினாமா

Image
தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சில நாள்களுக்கு முன்பு சாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைவரிடம் கொடுத்திருக்கிறார். ஜூன் 1-ம் தேதியிலிருந்து மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவி தர இருப்பதாகப் பரவலாகப் பேச்சு எழுந்தது. அவருக்கு வழிவிட்டு, சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதையடுத்து, சொந்த ஊரிலிருந்து சென்னை கிளம்பி வந்த சாமிநாதன், கட்சித் தலைமையிடம் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். இதை இன்னும் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், உதயநிதி புதிய பதவியில் ஒரு மாதத்துக்குப் பிறகு அமர வேண்டும் என்று ஆன்மிகப் பிரமுகர்கள் யோசனை சொன்னதாக தி.மு.க பிரமுகர்கள் சொல்கிறார்கள்.

திருப்பூர் டாக்டர்கள் ஸ்டிரைக்

Image
இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தா மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் பிரதிபா முகர்ஜி மீது நோயாளிகளின் உறவினர்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதுபோன்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் இந்தியா மருத்துவர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மருத்துவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார் செயலாளர் ராஜ்குமார் பொருளாளர் ரமேஷ் பொம்மை சாமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 450 மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த 14-ம்தேதி மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே நாங்குநேரி எம்எல்ஏ எச்.வசந்தகுமார், பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், 234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. எம்எல்ஏ ராதாமணி மறைவையடுத்து தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 100 ஆக குறைந்துள்ளது.

15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் - ஐ,பெரியசாமி

Image
15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என ஐ,பெரியசாமி தொரிவித்துள்ளார் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் திமுக அமைச்சர் ஐ பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் ஆகியோர் மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர், மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின்னர் ஐ,பெரியசாமி செய்தியாளர் களை சந்தித்து பேசியபோது.... குடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இன்று பொதுமக்கள் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது , அவசர காலமாக கருதி உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக ஆத...

நடிகர் விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் மதுரையில் ஓட்டு வேட்டை

Image
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவாக மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் நடிகர் உதயா,நடிகர் விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோரும் ஆதரவு கேட்டு வருகிறார்கள். நடிகர் உதயா செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். அப்போது அவர்கள் கூறியது: சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக போட்டியிடும் தலைவர் பாக்யராஜ் யாருக்கு ஆதரவாக இன்று மதுரை நாடக சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம், மதுரை உள்ள கலைஞர்களின் திறமையை கண்டு நான் வியந்து இருக்கிறேன், எந்த வித கலை நிகழ்ச்சியின் செய்யாமல் 8 மாதத்துக்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தலைவர் தெரிவித்திருக்கிறார், மதுரையில் முதியோர் திட்டம் செயல்படுத்த இருக்கிறோம், அதேபோல் அரசின் திட்டம் 5 கிலோ அரிசியை வழங்க இருக்கிறோம், நடிகர் மத்தியில் நலிந்த என்ற வார்த்தையை இருக்கக் கூடாது, கருணாஸ் நிறைய சொல்லுவாங்க அது எதுவுமே உண்மை இல்லை, 1.5கோடி கொடுத்தது வட்டியில்லா கடன் அதை எப்படி வட்டிக்கு கொடுத்ததாக கூற முடியும், இது ஒரு கலைஞர்களின் குடும்பம். தேர்தல் என்பது போட்டிதான். அணியை சேர்ந்தவர்க...

முகிலனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு.

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி சந்தித்து மனு அளிப்பதற்காக முகிலன் மீட்பு குழுவினை சேர்ந்தோர் கூட்டாக வந்தனர். தொடர்ந்து அவர்கள் முகிலனை கண்டுப்பிடித்து தரக்கோரி முழக்கங்களை எழுப்பி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுப்புகளை சாலையில் மறித்து வைத்து தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர் காணாமல் போகுமாறு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் மக்கள் முன்பு நிறுத்தப்படவில்லை. தமிழக அரசும் காவல்துறையும் முகிலன் குறித்த உண்மையை திட்டமிட்டு மறைத்து வருகிறது. எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் குறித்து 3 வாரத்திற்குள் மக்கள்...

விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு.

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளிப்பதற்காக குலையன்கரிசல் கிராம விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகி ஆஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தில் விவசாயிகளின் நிலம் வழியே ஸ்பிக் உரத்தொழிற்சாலைக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்லும் பணிக்காக தனியார் நிறுவனத்தினர் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு விவசாயிகள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் தனியார் நிறுவனத்தினர் கண்டுகொள்ளவில்லை. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் மூலமாக விவசாயம் அழிந்து போகும் நிலை ஏற்படும். ஆகவே விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினை தடுத்து நிறுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் எரிவாயு குழாய் பதித்து திட்டத்தினை செயல்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் ஆகிய நாங்கள் ஆதரவு தர தயாராக இருக்கிறோம். மாறாக விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் ப...

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : இன்று முதல் அமல்

  தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் முதல் முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் விஷால் பேட்டி

  திண்டுக்கல்லுக்கு இன்று வருகை தந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தலைவர் நடிகர் நாசர் கூட்டாக செய்த இடம் பேசுகையில் தேர்தல் நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம்.கட்டிடப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு இந்த தேர்தலை சந்திக்கிறோம். கடந்த மூன்று வருடங்களாக சொன்னதைச் செய்துள்ளோம். சொன்னதைவிட செய்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் நாடக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். இந்த அணி ஏன் மறுபடியும் தேர்தலை சந்திக்கிறது என்றால் நாங்கள் சொன்னதை முழுமையாக செய்துள்ளோம்.ஒரு பணி மட்டும் தான் நிலுவையில் உள்ளது. இன்னும் ஐந்து மாதங்களில் சங்க கட்டிட பணிகளை முடித்து விடுவோம். தேர்தல் என்றாலே அரசியல் உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் உண்டு முப்பது வருடமாக ஒருவர் கையில் இருந்த சங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு 3 வருடங்கள் ஆகிவிட்டது தேர்தல் முடிந்தவுடன் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது எங்களது கடமை என தெரிவித்தனர்