சென்னையில் இருந்து  உதய்ப்பூருக்கு செல்லும் இண்டிகோ விமானம்  நடுவானில் எந்திர கோளாறு

சென்னையில் இருந்து  உதய்ப்பூருக்கு செல்லும் இண்டிகோ விமானம்  நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து விமான பணிப்பெண்கள் உட்பட 183  பயணிகளுடன் இண்டிகோ விமானம்  உதய்ப்பூருக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை அறிந்து பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்பு பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் உதய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த சம்பவம் பற்றி டில்லியில் உள்ள டைரக்டா் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் (DGCA)விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி