கோபி நகராட்சி 12வது வார்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட , கோபி நகராட்சி 12வது வார்டில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை படி கோபி நகராட்சி 12வது வார்டில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் ,நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது, பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வாரிசுசான்றிதழ். சாக்கடை வசதி ,தெருவிளக்கு வசதி போன்ற மனுக்கள் பெறப்பட்டது.முகாமிற்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், 12வது வார்டு செயலாளர் கே.செல்வராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கவிதா செல்வராஜ், முன்னிலையில் நடைபெற்றது. நகராட்சி உதவி பொறியாளர் எஸ். கோமதி, உதவியாளர் டி.உதயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி