Posts

Showing posts from October, 2019

மாநில அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற காவலர்

Image
தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற காவலர்.     தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கான மாநில அளவில் தடகள விளையாட்டுப் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 14 -10 -2019 அன்று தொடங்கி  16 -10- 2019  மூன்று நாட்கள்  நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மண்டல காவல்துறை சார்பாக திருப்பாப்புலியூர் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சக்திவேல் (51) என்பவர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு போட்டிகளிலும் முதலாவதாக வந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். இப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் அவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டினார். உடன் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி சாந்தி இருந்தார்.

மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பிற்கான செயல்   ஒருங்கிணைப்பு பயிற்சி

Image
டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பிற்கான செயல்   ஒருங்கிணைப்பு பயிற்சி     ஊரக வளர்ச்சி மற்றும்  உள்ளாட்சித் துறை சார்பில் டி.என்.பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழு, கூட்டமைப்பிற்கான செயல் ஒருங்கிணைப்பு பயிற்சி 2 நாட்கள் நடந்தது. முகாமில் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரக்கன்கோட்டை , கொங்கர் பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரை கொடிவேரி. உள்ளிட்ட 10 ஊராட்சிகளிலிருந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கம், 2 பேர், மகளிர் குழு-2 பேர், ஊரக வாழ்வாதார இயக்கம் 2 பேர், என 1ஊராட்சிக்கு 6 பேர் வீதம் 10 ஊராட்சியிலிருந்து 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் கிராம ஊராட்சியின் கடமைகள், ஊராட்சி தலைவரின் பொறுப்புகள், கிராமசபையின் நோக்கம், சமூக வரைபடம் , வள ஆதாரவரைபடம், தயாரித்தல், மத்திய மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் , மகளிர் மேம்பாடு, விழிப்புணர்வு கூட்டங்களின் நோக்கங்கள், ஆகியவை குறித்து மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள் மெஹராஜ், விஜயலட்சுமி, ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றி...

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை, மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதாரதுறை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்

Image
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அறிவொளி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது     திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அறிவொளி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை, மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதாரதுறை இணைந்து நடத்தியிருந்தார். காலை 8 .30 மணியளவில் துவங்கி மதியம் 1.00 மணிவரை நடைபெற்றது. அப்பகுதியில் சுமார் 200 க்கும் மேட்பட்ட பொதுமக்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப் பட்டது. அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் ஜெயந்தி அறிவுறுத்தலின் பேரில்  மருத்துவ அலுவலர் Dr.அபுதாகீர்பாஷா பல்லடம் சுகாதார அலுவலர் சண்முகநாதன், ஆய்வாளர்கள் முத்துபையன், லோகநாதன்,  தமிழ்செல்வி, மாவட்ட செயற்குழு தலைவர் உமாநாத் மாவட்ட  செயற்குழு செயலாளர் ஜார்...

திருப்பூரில் இனிப்பு காரம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு ஓர் அறிவிப்பு

Image
திருப்பூரில் இனிப்பு காரம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு ஓர் அறிவிப்பு மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களில் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்திட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது. தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் குறிப்பாக தீபாவளி மற்றும கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கிற காலங்களில் வித விதமான இனிப்புகள், பலகாரங்கள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்கள் மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக இருந்து வருகிறது.  இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு வழிமுறைகள் 1. உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள் (Gloves) மற்றும் தலைக் கவசம் (Head Cover) மேலங்கிகள் (Aprons) ஆகியவற்றை அணிய வேண்டும். 2. இனிப்பு கார வகைகள் தயாரிக்குமிடம் மற்றும்  விற்கும் இடங்களை சுத்தமாகவும் ஈக்கள் மொய்க்கா வண்ணம் தூய்மையாக வைத்தி...

கடலூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

Image
கடலூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.      தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்தது. இதில் மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார் .மாவட்ட செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். நரசிம்மன் ,நகராஜன், பாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைபணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரராஜா  கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில செயல் தலைவர் சரவணன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் விவேகானந்தன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மேலும் இந்த  வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ்,  கந்தன்,  பண்ருட்டி வட்டம் வேலாயுதம், முரளி ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார், ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலைக் கடைகளை தனித்துறையாக செயல்படுத்த வேண்டும்  ,தமிழ்நாடு அரசு ...

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி

Image
பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு பற்றியும் சாலை பாதுகாப்பு சட்டங்கள் மதித்தல் அவற்றை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை மாணவிகளுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜன் பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Image
பழனி அரசு மருத்துவமனையில் தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி அரசு மருத்துவமனையில் தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோயாளிகள் உடம்பில் காயங்கள் ஏற்படும் பொழுது எவ்வாறு முதலுதவி செய்வது. காயங்களுக்கு எப்படி மருந்துகள் போடுவது. காயம் ஆறும் வரை நோயாளிகளை எப்படி பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை உறுதிமொழியாக எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பு செவிலியர்கள் அலுவலக ஊழியர்கள் பாதுகாப்பு செக்யூரிட்டிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..

திருப்பூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று டெங்கு ஒழிப்பு தினம்

Image
வாரந்தோறும் வியாழக்கிழமையன்று டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.     தமிழ்நாடு அரசு உத்தரவின்படி திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக வாரந்தோறும் வியாழக்கிழமையன்று டெங்கு ஒழிப்பு தினமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி  மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், குடிநீரில் கொசுப்புழுக்கள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், டெங்கு கொசு உற்பத்திக்கு  உறுதுணையாக  இருக்கும் கட்டிடங்களுக்கு  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கப்படும். டெங்கு கொசு  உருவாகும்  இடங்களான கழிவுநீர், குடிநீர் தொட்டிகள், பயன்பாடற்ற பானைகள், உரல்கள், பழைய டயர், தேங்காய் மட்டைகள் ஆகியவற்றை கண்டறிந்து நீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களான பாறைக்குழிகள் போன்ற இடங்களில் மணல் போட்டு சமன் செய்யவும் அல்லது அவ்வாறு செய்ய இயலாத இடங்களில் ஆயில்பால் ஊற்றி கொசுப...

அ.இ.அ.தி.மு.க.வின் 48 ஆம் ஆண்டு  துவக்க விழா- திருப்பூர் நிர்வாகிகள் கொண்டாட்டம்

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதொகுதிக்கு உட்பட்ட இடைதேர்தல் பணிகுழு சார்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 48 ஆம் ஆண்டின்  துவக்க விழா கொண்டாடப்பட்டது.     விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, கெடார் ஊராட்சி 80 மற்றும் 81 வாக்குச்சாவடி குட்பட்ட பகுதியான தெப்பக்குள தெரு பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் வாரியத் தலைவருமான மாண்புமிகு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் தலைமையில் கொண்டாடப்பட்டது.பல்லடம் சட்டமன்ற உறுப்பிநர் கரைப்புதூர் ஏ.நடராஜன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கே.என்.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர், உடன் பல்லடம் ஒன்றிய கழக செயலாளர்  பரமசிவம்,  பொங்கலூர்  ஒன்றிய கழகச் செயலாளர் சிவாசலம், தண்ணீர்பந்தல் நடராஜன், திருப்பூர் பகுதி கழக செயலாளர். பண்ணையார் பழனிச்சாமி, சித்துராஜ், ராமமூர்த்தி, வைஸ் பழனிச்சாமி, மற்றும்...

சீர்காழியில் ஆக்கிரமிப்பு ஆவின் பூத்களை அகற்றாமல் விட்டால் போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சீர்காழி வட்ட தலைவர் அறிக்கை

சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் ஆவின் பூத்களை அகற்றாமல் விட்டால் போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின்  சீர்காழி வட்ட தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி நகரத்தில் பொது மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வர்த்தகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். நெடுஞ்சாலைதுறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீர்காழி நகர வர்த்தகர் சங்கம் வரும் தீபாவளி பண்டிகை வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று கால அவகசாம் கேட்டுள்ளது. தீபாவளிக்கு பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சீர்காழி வட்ட தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நம் சீர்காழி பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதாக கடந்த இருபத்து ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நில ஆர்ஜிதங்கள் மூலம் சாலைகள் அகலப்படுத்தப்பட்டது. போக்குவரத்து இடையூறுகள் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் சீ...

கடலூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில்  டெங்கு விழிப்புணர்வு முகாம்

Image
கடலூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில்  டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .     கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர பொறுப்பாளர் தியாக ரத்தினராஜன் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டெங்கு விழிப்புணர்வு முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் அக்ரி முருகேசன் கலந்துகொண்டு விருத்தாசலம் பாலக்கரையில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் துண்டு பிரச்சாரம்  வழங்கினார்.      இதில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும், நகர கழக பொறுப்பாளருமான தியாக.ரத்தினராஜன், அவைத் தலைவர் பாரதி, செல்வகுமார், சந்தானம், முருகன், வசந்த், சரத், வடிவேல், சங்கர், ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், மதியரசன், இளங்கோவன், சக்கரபாணி, இளவரசன், மகளிரணி விஜயா குணசேகரன், வளர்மதி, கொளஞ்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.      

சின்ன காரைக்காடு மற்றும் மாவடி பாளையத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்

Image
சின்ன காரைக்காடு மற்றும் மாவடி பாளையத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்.     கடலூர் மாவட்டத்தில் 17 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 14. 10.19 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச் சியாக இன்று கடலூர் மாவட்டத்தில் 8000 கால்நடைகளுக்கு தடுப்பூசி மேற்கொள்ளப்பட்டது.     மண்டல இணை இயக்குநர் மரு.கே.குபேந்திரன் மற்றும் உதவி இயக்குநர் மரு.இராஜேஸ்குமார் ஆகியோர் சின்ன காரைக்காடு மற்றும் மாவடிபாளையம் ஆகிய கிராமங்களில் தடுப்பூசி பணி யினை ஆய்வு செய்தனர். மரு.சூசை மரி நிக்சன், மரு.ஸ்டாலின் வேதமாணிக்கம் கால்நடை ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முகாமில் பணிபுரிந்தனர்.

கடலூரில் பரோடா விவசாயிகள் கடன் வழங்கும் விழா

Image
கடலூரில் பரோடா விவசாயிகள் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.     கடலூரில் பரோடா வங்கியில் விவசாயம் தினத்தை முன்னிட்டு மாபெரும் கடன் வழங்கும் விழா கடலூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கடன் வழங்கும் விழாவிற்கு வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் பிரேந்நிரகுமார், மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், பிராந்திய மேலாளர் ராமாயனுஜ் ஷர்மா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கி அரிகரபுத்திரன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ராஜாமணி ,கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடாஜலபதி, வேளாண்மை உதவி இயக்குனர் எஸ். பூவராகவன், இந்தியன் வங்கி எல்டிஎம் ஜோதிமணி,கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் குபேந்திரன், மற்றும் குணசேகரன், ரமேஷ், பழனிவேல், ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த கடன் வழங்கும் விழாவில் 142 பயனாளிகளுக்கு 16 புள்ளி 42 கோடி கடன் வழங்கப்பட்டது. மேலும் பரோடா வங்கியில் கடன் பெற்று குறிப்பிட்ட காலத்தில் செலுத்திய 15 பயனாளிகளுக்கு பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்...

கடலூரில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா

Image
கடலூரில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ் அவர்கள் திறந்து வைத்தார்.     கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிடல் போக்குவரத்து சிக்னலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஐபிஎஸ் அவர்கள் திறந்து வைத்தார். டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட சிக்னலில் நில் கவனி செல் போன்ற குறியீடுகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இது வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து வரும் பயணிகள்  எளிதில் படித்து தெரிந்து கொள்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சிக்னல்களிலும் உள்ள குறியீடுகள் இதில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் ஞானவேல் பொறியாளர் கௌதமன் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சதீஷ் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்      

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தினமும் கொட்டித்தீர்க்கும் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

Image
சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தினமும் கொட்டித்தீர்க்கும் கனமழை கோவிலை மூடி செல்லும் தண்ணீர் பெரும்பள்ளம் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் பெரும்பள்ளம் அணை நிரம்பி வருகிறது இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அடிவாரத்தில் கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பெரும்பள்ளம் அணை 36 அடி உயரம் கொண்ட பெரும்பள்ளம் அணை யில் 1.15 டிஎம்சி நீர் இருப்பு வைக்க முடியும், ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மழை இல்லாததால் பெரும்பள்ளம் அணை நிரம்பவில்லை இந்நிலையில் கடம்பூர் அத்தியூர் கம்பத்து ராயன் மலை இருட்டி பாளையம் உள்ளிட்ட மலைப் பகுதியில் பெய்த மழைநீர் கடந்த இரண்டு நாட்களாக கடம்பூர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது அம்மன் கோவிலின் மேல் பகுதி உள்ள அருவியில் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் வந்து விழுவதால் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது சாலையில் ஏராளமான தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த மழை தட் பெரும்பள்ளம் அனைக்கு வந்து சேர...

மல்லசமுத்திரத்தில் விஜய் மன்ற மாநில பொறுப்பாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் இணைந்து நலதிட்ட உதவிகள் வழங்கினர் 

Image
மல்லசமுத்திரத்தில் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் இணைந்து நலதிட்ட உதவிகள் வழங்கினர்.     பிகில் திரைப்படத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் மன்ற மாநில பொறுப்பாளர்  மல்லசமுத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைமை சார்பாக தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் S.பிரவீன்குமார்  தலைமையில்70,000 மதிப்புள்ள மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த காவல்துறை துணை. கண்காணிப்பாளர் M.சண்முகம் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.     பின்பு பெயர் பலகை திறந்து வைத்து விலையில்லா தலைக்கவசம் வழங்கினார். இவ்விழாவிற்கு திருச்செங்கோடு நகர இளைஞரணி தலைவர் A.முபாரக் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினார். மேலும் நாமக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெ.ஜெ. செந்தில்நாதன்  தளபதி மக்கள் இயக்க கொடி ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.  நலத்திட்ட உதவிகளான தலைக்கவசம் 50 நபருக்கும், அன்னதானம் 300 நபருக்கும், 5 கிலோ அரிசி பொதுமக்கள் 30 நபருக்கும், பிர...

சீர்காழி ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் மருத்துவ முகாம்

Image
சீர்காழி ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது.  நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் ரோட்டரி சங்கம் மற்றும சீர்காழி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவும் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு மற்றும் இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும மருத்துவ முகாம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வகங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சீர்காழி ரோட்டரி சங்க தலைவர் மு.பழனியப்பன், செயலாளர் சு.ரமேஷ், பொருளாளர் சி.சேகர், சீர்காழி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் ஷாகுல் ஹமீது, சித்த மருத்துவ மருந்தாளுனர் தாமரைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.     

பருவ மழை நெருங்குவதால் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை துவங்க வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

Image
பருவ மழை நெருங்குவதால் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை துவங்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம். பருவ மழை நெருங்குவதால் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை துவங்க வேண்டும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் கொள்ளிடம் கிழக்கு வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. கிழக்கு வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சிவராமன்இ மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர்இ மாவட்ட விவசாய சங்க செயலாளர் மணிதேவர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசுகையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் வெற்றிக்கு தொண்டர்கள் பெரிதும் பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் வெற்றிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் அதிக ஈடுப்பாட்டுடன் கிராமங்கள் தோறும் செயல்பட வேண்டும் கொள்ளிடம் கடைமடைப் பகுதிக்கு தடையின்றி பாசனத்திற்கு தண்ணீ...

சேலம் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா

Image
சேலத்தில் இயங்கி வரும் தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.  சேலத்தில் இயங்கி வரும் 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. சேலத்தில் வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் சிறப்புடன் இயங்கிவரும் 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்ற சின்னத்திரை நடிகை சந்தியா கேக் வெட்டி திறந்துவைத்தார். சிறப்பு விற்பனையும் துவக்கிவைத்தார். இதில் மேலாளர் சங்கர் வாழ்த்திப் பேசினார். ஏராளமான வாடிக்கையாரர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.    

மா.புடையூர் வேளாண்மை கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

Image
மா.புடையூர் வேளாண்மை கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.      கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மா.புடையூரில் அமைந்துள்ள  வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது முகாமிற்கு வேளாண்மை கல்லூரி இயக்குனர்  நடராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் தானுநாதன் தலைமை தாங்கினார் முகாமில்  ஜெஎஸ்எ சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன  பேராசிரியர்கள் கலந்துகொண்டு சுற்றுப்புற சுகாதாரம் பற்றியும் டெங்கு கொசு புழு உற்பத்தி ஆகாமல் தடுக்கும் முறைகள் குறித்தும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது முகாமினை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதவி பேராசிரியர் ராவ்கெலுஸ்கர் மற்றும் உதவி பேராசிரியர் அனிதா ஒருங்கிணைத்தனர்

வேப்பூர் தீயணைப்புத் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
வேப்பூர் தீயணைப்புத் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.      வேப்பூரில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்துறை இணைந்து மழை வெள்ள காலங்களில் தற்காத்து கொள்ளவும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாச்சியர் கமலா தலைமை தாங்கினார். துணை வட்டாச்சியர் பூர்ணிமாவினிதா, வருவாய் ஆய்வாளர் பழனி முன்னிலை வகித்தனர். வேப்பூர்  கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி வரவேற்றார். வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மணி, சதாசிவம், தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், இயற்கை பேரிடரின் போது செய்ய வேண்டியவை, விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது

வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு  நிலவேம்பு கஷாயம்

Image
வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கபட்டது     பருவ மழை பெய்து வருவதால் பொதுமக்களை  பலவிதமான நோய்கள் தாக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க கடலூர் எஸ்,பி, அபிநவ் உத்திரவிட்டிருந்தார். அதன்படி திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன், வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோரின் ஆலோசனையின்படி வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்யராஜ் பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்

கடலூரில்  உலக கை கழுவும் தினவிழா

Image
கடலூரில்  உலக கை கழுவும் தினவிழா கொண்டாடப்பட்டது.      கடலூர் பாதிரிக்குப்பம் குளோரி தொடக்கப்பள்ளியில் உலக கை கழுவும் தின விழா கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நேற்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் தலைவர்எஸ். ராமலிங்கம் தலைமை தாங்கினார்.  செயலாளர் தட்சணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக  ரோட்டரி துணை ஆளுநர் பி அப்பர் சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.    உலக கை கழுவும் தின விழாவில் மாணவ மாணவிகளுக்கு கூத்தப்பாக்கம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் வி .எஸ். வசந்தகுமார் செய்முறை விளக்கப் பயிற்சி அளித்தார்.  இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் ராதாகிருஷ்ணன் தாயுமானவன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியில் கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க நிர்வாகி  எஸ். பாஸ்கரன் நன்றி கூறினார்.      

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு

Image
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சை பிரிவினை பார்வையிட்டு நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்:- டெங்கு காய்ச்சல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை சுகாதாரத்துறை மூலம் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் சிறப்பு வார்டு, குழந்தைகள் காய்ச்சல் வார்டு உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யப்பட்டது. காய்ச்சல் மற்றும் பல்வேறு காரணங்களால் 47 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 நபர்களுக்கு டெங்கு அறிகுறி கண்டறி...

கைவிட்ட மகன் - தெருவில் கிடந்த மூதாட்டி – உதவிக்கரம்நீட்டிய செய்தியாளர்கள் - மீட்ட வருவாய்த்துறையினர் - கோவில்பட்டியில் நடைபெற்றநெகிழ்ச்சியான சம்பவம்

Image
கைவிட்ட மகன் - தெருவில் கிடந்த மூதாட்டி – உதவிக்கரம் நீட்டிய செய்தியாளர்கள் - மீட்ட வருவாய்த்துறையினர் - கோவில்பட்டியில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது.  கோவில்பட்டி பங்களா தெரு 4-வது தெருவை சேர்ந்தவர் சண்முகத்தாய்(75). இவர் தனது மகன் சீனியுடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக நோய் வாய்ப்பட்ட சண்முகத்தாயை, அவரது மகன் வீட்டுக்கு வெளியே கொண்டு விட்டுள்ளார். கடந்த 7 நாட்களாக இரவு, பகலாக மழையில் நனைந்தபடியும் உயிருக்கு போராடிய இருந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கோவில்பட்டி செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற செய்தியாளர்கள் பார்வையிட்டு, ஆடையின்றி காணப்பட்ட அவருக்கும் ஆடை கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, சண்முகத்தாய் மகன் சீனி அவரை வெளியில் அனுப்பி விட்டதாகவும், மழையில் நனைந்த மூதாட்டியை மீட்டு வீட்டிற்குள் வைத்தால் அவரது மகன் தங்களுடன் சண்டைக்கு வருவதாகவும், மூதாட்டி வெயில், மழை என தெருவில் கிடந்து தவித்து வருவதாக தெரிவித்தனர்.  இதையெடுத்து செய்த...

மக்கள்குறைதீர்க்கும் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு சூழல்களில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளை மீட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடும் வகையில், சைல்டு - லைன் 1098 குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி சேவை மையத்திற்கு, கார்ப்ரேட் நிறுவனங்களின் சமூக வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.6.80 இலட்சம் மதிப்பிலான நான்கு சக்கர வாகனத்தை, சைல்டு - லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன...

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் :தூத்துக்குடி மாவட்டம் வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி,துவக்கிவைத்தார்

Image
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் கால்நடைத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு கோமாரி நோய் தடுப்பூசி மருந்தினை கால்நடை மருத்துவரிடம் வழங்கி தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கால் நோய் வாய் நோயானது கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தியில் மிகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைதல், கறவை மாடுகளில் சினை பிடிக்காமை, இளம் கன்றுகள் இறப்பு, எருதுகளில் வேலை திறன் குறைதல் உண்டாகிறது. ஆகவே இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கும் பொருளாதார இழப்பை தடுப்பதற்கும் துரிதமாக தடுப்பு நடவடிக்கைகள் தேசிய அளவில் தடுப்பூசி மூலமாகவும் தீவித உயிர் பாதுகாப்பு முறையிலும் கால் நோய் வாய் நோய் தடுப்புத்திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது 10வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் (2003-2004)-லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17...

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தயாரா- தூத்துக்குடியில்சீமான் சவால்

Image
"இந்தியா முழுவதும் புகார் கொடுத்து என்னை புகழ் பெற வைக்கிறார்கள், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தயாரா" - தூத்துக்குடியில் சீமான் சவால் நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்த அவருடைய சர்ச்சை பேச்சுக்கு பதிலளித்த அவர், இந்தியா முழுவதும் புகார் கொடுத்து என்னை புகழ் பெற வைக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை இல்லை. எதையாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள். காங்கிரஸ்- பாஜக கட்சி இங்கே எதற்கு?. மொழியை மதிக்குமா? உணர்வை மதிக்குமா? ஸ்டெர்லைட் பிரச்சனை தீர்க்குமா?, அணு உலையை மூடுமா?, காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனையில் இந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன என சொல்லமுடியுமா?. காமராஜர் எனும் தலைவர் என்றைக்கு இறந்தாரோ அன்றைக்கே காங்கிரசும் இறந்து போய்விட்டது. கேரளாவிலேயே வெல்ல முடியாத காங்கிரஸ், இங்கு கூட்டணியோடு போட்டியிட்டதால்தான் 7 இடங்களில் வெற்றி பெற்றது. இங்கு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடி...

சீமானை கைது செய்து ,நாம் தமிழர் கட்சியை தடை செய்யவலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

Image
சீமானை கைது செய்து ,நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சீமான் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முகம் முழுவதும் கருப்பு துணியை அணிந்து, உடலில் ராஜீவ் காந்தி திருவுருவ படத்தினை தாங்கியவாறு கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு பாய் விரித்து படுத்து உறங்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் சண்முகராஜ், கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத்துரை, ம...

1 கோடிக்கு புத்தக விற்பனை  -தூத்துக்குடி புத்தகத் திருவிழா நிறைவுநாள் விழாவில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

Image
"ரூபாய் 1 கோடிக்கு புத்தக விற்பனை " - தூத்துக்குடி புத்தகத் திருவிழா நிறைவுநாள் விழாவில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில், அக்டோபர் 05 முதல் 13 வரை புத்தகத்திருவிழா கண்காட்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் புதுடில்லி இணைந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழா கண்காட்சியின் நிறைவுநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மேற்கு வங்க கூடுதல் முதன்மை செயலாளர் பாலசந்திரன், கலந்துகொண்டு மனிதநேயம், தன்னம்பிக்கை, தமிழரின் பண்பாடுகள் மற்றும் கலாசாரம் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்; பேசியதாவது: தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில் அக்டோபர் 05 முதல் 13 வரை நடைபெறும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்; அவர்கள் திறந்து வைத்தார். இந்த புத்தகத் திருவிழாவில், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பயன்பெறுகின்...

தூத்துக்குடி - பெங்களூர் இண்டிகோ விமான சேவை : 27ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி - பெங்களூர் இண்டிகோ விமான சேவை : 27ம் தேதி தொடங்கப்பட உள்ளது. தூத்துக்குடி - பெங்களூர் இடையே இன்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை வருகிற 27ம் தேதி தொடங்குகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால், தூத்துக்குடி - பெங்களூர் இடையே ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை 6 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது, தற்போது இன்டிகோ நிறுவனம் அந்த வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கியுள்ளது, இது குறித்து இன்டிகோ நிறுவன தரப்பில் கூறுகையில் :- "பெங்களூரில் இருந்து 5.25 மணிக்கு புறப்படும் விமானம் 7.10 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். பின்னர் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்றடையும். ATR 72 ரக விமானமான இதில் பயண கட்டணமாக ரூபாய்.3686 (All Inclusive) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பயணிகள் Hand Luggage 7kg மற்றும் check in baggage 15kg வரையும் அனுமதிக்கப்படும் " என தெரிவித்துள்ளது, மேலும் மேற்படி கட்டணம், மற்றும் பயணச் சுமை (luggage) அளவுகள் வித...

வேப்பூர் அருகே கொளவாய் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது

Image
வேப்பூர் அருகே கொளவாய் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.     கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா கொளவாய் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மருத்துவர் ஆனந்தி அவர்களின் மருத்துவ குழுவினர் கிராம பொது மக்களுக்கு காய்ச்சல்கள்  கண்டறிந்து பின் சிகிச்சை அளித்தனர்.     மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.   அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அக்கிராமத்தில் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள்  தேவகிருஷ்ணன், சிவலிங்கம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக பேரிடர் மேலாண்மை விழிப்பு பேரணி

Image
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக பேரிடர் மேலாண்மை விழிப்பு பேரணியை விருதாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.     கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு செல்வக்குமார் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளரா க சார் ஆட்சியர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு ஜே ஆர் சி சேகர் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தாளாளர்கள் கலந்துகொண்டனர்.     இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, ஒழிப்போம் ஒழிப்போம் ஏடிஸ் கொசுவை ஒழிப்போம் என்றும், தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்துவோம், மழைக் காலங்களில் மின்சார சாதனங்களை பாதுகாப்பாய் கையாளுவோம் என்றும், புயல் எச்சரிக்கை கடற்கரை பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் புயல் பாதுகாப்பு மையங்களை பயன்படுத்துவோம் மிதிக்க வேண்டாம் மருந்து கிடைக்க உயிரை மிதிக...

சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்க வேண்டி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

Image
சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்க வேண்டி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்க வேண்டி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். அக்செப்ட் அமைப்பு மாநில தலைவர் ஜெக.சண்முகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர் ராஜேந்திரன், தரங்கம்பாடி ஓய்வூதியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட தலைவர் ராமானுஜம், ஆசிரியர் கோ.வைத்தியநாதன், சட்டநாதன், ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வெங்கடேசன், சீர்காழி பொறியாளர் சங்க தலைவர் வேல்முருகன், மூத்த பத்திரிகையாளர் டி.சௌந்தரபாண்டியன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அஞ்சல தொழிற்சங்கம் தாஸ் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டார்கள். ஆசிரியர் காசி.இளங்கோவன் நன்றி உரையாற்றினார். சீர்காழிக்கு வருவாய் கோட்டம் கொண்டு வரப்பட வேண்டும். கொள்ளிடத்தை தனி தாலுக்காவாக அமைக்க வேண்டும். சீர்காழி மற்றும் மயிலாடு...

கடலூரில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினவிழா

Image
கடலூரில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினவிழா கொண்டாடப் பட்டது.       கடலூரில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் தின விழா கடலூர் நகர அரங்கத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு  கடலூர் தலைவர் சந்திரசேகர், முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் முருகன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ்  கலந்துகொண்டு குழந்தைகள் வான் பார்க்க கோளரங்கை தொடங்கிவைத்துசிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை  கடலூர் நெல்சன் ஒருங்கிணைத்தார். பிற்பகலில் கலாம்பிறந்த நாள் தின விழா சிறப்பு நிகழ்ச்சியாக விஞ்ஞானி உடன் சந்திப்பு என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது .     விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஜ எஸ் ஆர் ஓ டாக்டர்  ராஜசேகர் நிகழ்ச்சியை நடத்தினார்.நெல்லிக்குப்பம் எடிபை பள்ளியின் தாளாளர். எஸ். சீனிவாசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஜோஸ் மகேஷ் ஒருங்கிணைத்தார். இந்த அமர்வில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் அறிவியல் கண்காட்சியும் நடைபெற்றது. பின் மாலையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்...