பெண் ஊழியரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட டாக்டர் கைது - புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்


கோவில்பட்டி அருகே அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருடன் டாக்டர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில் டாக்டரை போலீசார் கைது செய்தனர் இதனிடையே புகார் கொடுத்த பெண்ணுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த குருசாமி (51) கடந்த 6 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறார் அங்கு வேலை பார்க்கும் 23 வயது பெண் ஊழியரிடம் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்தாராம்.

இந்த விபரம் அதே மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை பார்க்கும் கோவில்பட்டி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த செய்யது அலி மனைவி நீலவேணி (36) என்பவருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கையும் களவுமாக பிடிக்க அவர் திட்டமிட்டார் அதன்படி அந்த டாக்டர் இளம்பெண்ணுடன் சரியாக இருப்பதை அவருக்குத் தெரியாமலேயே தனது செல்போனில் வீடியோ எடுத்து அதில் இளம்பெண்ணை டாக்டர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

இதற்கிடையில் இந்த விவரம் டாக்டருக்கே தெரியவரவே அவர் என்னிடம் செல்போனில் உள்ள வீடியோக்களை அழித்துவிடு இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது 

இந்நிலையில் நீலவேணி செல்போன் திடீரென்று காணாமல் போனது அதன்பிறகு அவருக்கு பணியில் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்ததாக தெரிகிறது இதனால் மன உளைச்சலுடன் இருந்த நீலவேணி தொடர்ந்து டாக்டரின் தொந்தரவு அதிகரிக்கவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார்.

அதில் டாக்டர் குமாரசாமியும் அதே மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் இருபத்தி மூன்று வயது இளம்பெண்ணும் அறையில் அடிக்கடி தனியாக இருந்தாலும் நாளுக்கு நாள்  தொந்தரவு அதிகரித்ததால் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்காக வீடியோ எடுத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். 

இதனை தெரிந்துகொண்ட டாக்டர் குருசாமி தனது செல்போனை வைத்துக்கொண்டு வீடியோ ஆதாரங்கள் குறித்து வெளியில் சொன்னால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியது போலவே தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார் நேற்று மாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் பின்னர் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் பேரை சிறையில் அடைத்தனர். 

இதனிடையே டாக்டர் இளம் பெண் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் தற்போது வாட்ஸ் அப்பில் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!