அருணாசல பிரதேசத்தில் 15 இடங்களுக்கு அதிகாரபூர்வ சீன பெயர்கள்.! - இந்தியாவை வம்பிழுக்கும் சீனா!!


இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 

அருணாசல பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இதை தொடர்ந்து எதிர்த்து வரும் மத்திய அரசு, அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு தரப்படுத்தப்பட்ட சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.  

சீனாவின் அமைச்சரவை மற்றும் மாநில கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் மீதான விதிமுறைகளுக்கு இணங்க இந்த பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதாக சீன சிவில் விவகரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.  ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த 6 பகுதிகளுக்கு இவ்வாறு சீனா பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி