சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியான சம்பவம்.!


 சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை வனப்பகுதியை ஒட்டி கூலைமுத்தான் என்ற விவசாயி தனக்கு சொந்தமான விளைநிலத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு புளியங்கோம்பை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அவர் வளர்த்து வந்த கன்றுக்குட்டியை தாக்கியுள்ளது. 


இறந்து கிடந்த கன்றுக்குட்டியை அதிகாலை கண்ட விவசாயி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு இருந்த கால் தடங்களை வைத்து கன்றுக்குட்டியை தாக்கியது சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். 

கடந்த சில நாட்களாகவே வனப்பகுதி விட்டு வெளியேறும் சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி