நெல்லையில் பயங்கரம்.! -திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை.!

திருநெல்வேலி : பாளையங்கோட்டை 38வது வார்டு திமுக செயலாளர் பொன்னுதாஸ் ( எ) அபயமணி பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாநகர 38வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்கிற அபே மணி, அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் பாளையங்கோட்டையிலுள்ள அவரின் வீட்டின் அருகே சென்றபோது, ​​அங்கு வந்த மர்மநபர்கள் மணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடி உள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த பொன்னு தாஸின் தாயார் பேச்சியம்மாள் நடந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இரவு 11 மணி என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால் கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர், போலீசார் அபேமணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாஸ்மாக் மதுபான பார் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டு இருக்ககூடும் எனவும், உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் பதவிக்கு போட்டியிட முயற்சித்து வந்த நிலையில் அபே மணி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பொன்னுதாசுக்கு முருகம்மாள் என்ற மனைவியும் சுபேசன் மற்றும் சரண்யா என 2 குழந்தைகளும் உள்ளனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி