கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாதா கோவில் ரோடு படித்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத்தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், எல்.பி.எப். கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி