தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.231.21 கோடி மதிப்பிடில் திட்டப் பணிகள் - மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தொடங்கி வைத்தார்.!

தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ரூபாய் 231.21 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா துறைமுக அலுவலக வளாகத்தில் இன்று துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு வருகை புரிந்து ரூபாய் 100 கோடி திட்டமதீப்பிட்டில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு (Tuticorin SPEEDZ) அடிக்கல் நாட்டியும், ரூ.16 கோடி செலவில் நிலக்கரி சேமிப்பு சாலை மற்றும் வடிகாலினை மேம்படுத்துதற்கான பணியினை துவக்கி னைத்தும் மற்றும் ரூபாய் 65.53 கோடி செலவில் உள்துறைமுக வளர்ச்சி பணிகளான (துறைமுக நுழைவுவாயிலை அகலப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்தப்பட்ட பகுதியை ஆழப்படுத்துதல்) பணிக்கான அடிக்கலை நாட்டினார். மேலும் நவீன துறைமுக திட்டங்களான ரூ.2.29 கோடி செலவில் துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்திற்கான இந்திய மென்பொருள் வடிவமைப்பினை துவக்கி வைத்தார். இவ்வாறாக நம் நாட்டிலே தயாரிக்கப்பட்ட மென்பொருளை உபயோகிப்பது...