தூத்துக்குடியில் காவலர் குழந்தைகள் நல காப்பகம் - மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்கள் தங்களது குழந்தைகளை பகல் நேரங்களில் பார்த்து கொள்வதற்காக குழந்தைகள் நல காப்பகம் அமைத்து தர மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.


காவலர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஆயுதப்படை காவலர்கள் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தனிப்பட்ட முயற்சியில் 3வது மைல் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர் குழந்தைகள் நல காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழந்தைகள் நல காப்பகத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


இந்நிகழ்வின்போது மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் கணேச மணிகண்டன், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஆயுதப்படை காவல் துறையினர் மற்றும் காவலர்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி