Posts

Showing posts from November, 2022

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு ரத்த தான சேவைக்கான பாராட்டு சான்று.!

Image
  தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு ரத்த தான சேவைக்கான பாராட்டு சான்று வழங்கப்பட்டது. தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சமூக அமைப்புகளின் பங்களிப்புடன் ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நோயாளிகள் நலன் பாதுகாத்திடும் பொருட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான நாட்களில் அதிகப்படியான ரத்ததான முகாம்களை நடத்தி உயிர்காக்கும் பணிக்கு அதிகளவில்  ரத்தம் பெற்றுக்கொடுத்து உதவியதற்காக தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர்.ராகேஷ், ரத்த வங்கி மேலாளர் டாக்டர்.சாந்தி ஆகியோரிடம் இருந்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் நவாஸ், மருத்துவரணி செயலாளர் தமீம் ஆகியோர் பாராட...

"தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள குறைகள் முழுவதுமாக தீர்க்கப்படும்" - மேயர் உறுதி!

Image
"தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள குறைகள் முழுவதுமாக தீர்க்கப்படும்" என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சாலை, கால்வாய், குடிநீர், ஆக்கிரமிப்பு, பூங்கா பாராமரித்தல், மழைநீர் அகற்றுதல் போன்ற குறைகள் குறித்து தெரிவித்தனர். திமுக கவுன்சிலர்கள் பலர் தங்களது பகுதிகளில் உள்ள புதிய பணிகளை மேற்கொண்டு செய்து கொடுத்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.  கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் "தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள குறைகள் முழுவதுமாக தீர்க்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப பணிகள் நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்களின் நலன் கருதியே மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு வந்த ...

ராமநாதபுரம், - கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது ரூ.300 கோடி மதிப்புள்ள போதை பொருள் என்பது தவறான தகவல்.! கடலோர பாதுகாப்புக் குழுமம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Image
இது குறித்து கடலோர பாதுகாப்புக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்... கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57 AA 0077 என்ற பதிவு எண் கொண்ட பஜீரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அவ்வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத்தெருவை சேர்ந்த (1) சர்பராஸ் நவாஸ் (42/2022) த/பெ. சம்சுதீன் மற்றும் (2) ஜெய்னுதீன் (45/2022) த/பெ. சம்சுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்படி நபர்கள் விவசாய மிகஅதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தச்செயல் ச...

தமிழ்நாடு முழுவதும் 1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு!

Image
  தமிழ்நாடு முழுவதும் 1,000 புதிய பேருந்துகள் வாங்க 420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு; ஒரு பேருந்தின் விலை 42 லட்சம் என மதிப்பீடு! விழுப்புரம் -180, சேலம் - 100, கோவை -120, கும்பகோணம் -250 மதுரை -220, நெல்லை -130 எண்ணிக்கையில் கோட்டங்களுக்கு ஒதுக்கீடு

தூத்துக்குடி : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 728 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Image
தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தையல் மிஷின் 15 சைக்கிள் 1 உதவித்தொகை 12 பேருக்கு ஹாட் பாக்ஸ் 700 பேருக்கு என மொத்தம் 728 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும்; நவம்பர் 27ம் தேதி கழகத்தலைவரின் புதல்வன் பிறந்தநாளை யொட்டி தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா கொண்டாடப்படுகிறது. அதே போல் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் கேக் வெட்டுதல் முதியோர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடுமையான நிதிநெருக்கடி மறுபுறம் ஒன்றிய அரசின் நெருக்கடி இவற்றை யெல்லா...

சென்னை - கலைஞர் நினைவிடம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற, 21 மருத்துவர்கள் கைது

Image
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவல்லிகேணி அரசு மருத்துவமனையில் இருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற, 21 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி 3ஆம் புத்தக திருவிழா ரூ.1.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.!

Image
தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மஹாலில் தூத்துக்குடி 3ஆம் புத்தகத் திருவிழா நிறைவு விழா மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நேற்று (29.11.2022 நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 3வது புத்தக திருவிழா தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மஹாலில் 22.11.2022 முதல் 29.11.2022 வரை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் (பபாசி) இணைந்து நடத்தப்பட்டது. இப்புத்தகக் திருவிழாவில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக 45 புத்தக அரங்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் சார்பாக அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 07 அரங்குகளும், உள்ளூர் பதிப்பகத்தார் சார்பாக புத்தக அரங்குகளும் மற்றும் 09 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது. இப்புத்தகக் கண்காட்சியை பார்வையிடவும் புத்தகங்கள் வாங்குவதற்கும் அனைத்து தரப்பு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், புத்தகப் பிரியர்கள் ஆகிய அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையி...

ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு

 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் முக்கிய ரயில் பாதை பிரிவுகளில் பயணிகள் ரயில்களை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ரயில்களின் வேகத்தை ரயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கிமீ மற்றும் 130 கிமீ என அதிகரிக்க முடியும். சென்னை - ரேணிகுண்டா பிரிவு 134.78 கிமீ தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில் ரயில்களின் வேகம் ஏற்கனவே மணிக்கு 110 கிமீ லிருந்து 130 கிமீ என அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரயில்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உரிய அனுமதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள இந்த ரயில் பாதையில் ரயில்களை அதிவேகத்தில் இயக்குவதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மற்ற 'பி' பிரிவு ரயில் ...

வணிகர் சங்கங்களின்பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சம்பந்தமாக கோரிக்கை மனு.!

Image
  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ எம் விக்ரமராஜா அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தூத்துக்குடி வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சம்பந்தமாக கோரிக்கை மனு திரளான வணிகர்களுடன் சென்று வழங்கப்பட்டது.   இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், மாவட்ட பொருளாளர் ஆனந்த பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் வணிகவரித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில்: வணிகவரித் துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லரைக் கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானபோதே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக, தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது.  மீண்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமான வணிகவரித் துறையின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் வணிகவரித் துறை அதிகாரிகள் சில்லரை வணிகம் செய்யும் வ...

தமிழ்நாடு - அரசுப்பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு, விடுமுறை அறிவிப்பு.!

Image
  தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6, 8,10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி காஷ்மீர் பைல்ஸ் பிரச்சாரத்தன்மை கொண்ட இழிவான சினிமா - சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு ஜூரி நாடவ் லேபிட்

Image
  தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம் கௌரவம் வாய்ந்த இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது; இந்தப் படத்தைப் பார்த்தது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகிறது என தேர்வுக்குழு ஜூரி நாடவ் லேபிட் பேச்சு என கோவா திரைப்பட விழா நடுவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் 1990களில் பண்டிட்டுகளை தீவிரவாதிகள் வெளியேற்றியதை பின்னணி யாகக் கொண்டு தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி படம் உருவானது. இதில் அனுபம் கெர் நடித்தார். விவேக் அக்னிஹோத்ரி இயக்கினார். இந்த படத்தை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் கோவா திரைப்பட விழா கடந்த 20ம் தேதி தொடங்கி, 28ம் தேதி முடிவடைந்தது. இதில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்பட்டன. இந்தியா சார்பில் ஜெய் பீம், தி காஷ்மீர் ஃபைல்ஸ் உள்பட 20 படங்கள் திரையிடப்பட்டன. விழா நிறைவு நாள் நிகழ்ச் சியில் நடுவரும் இஸ்ரேல் திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட் பேசும்போது, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்...

தண்ணீர் கேன்களில் நிரப்பிய ரூ.300 கோடி போதை மருந்து : இலங்கைக்கு கடத்த முயற்சி - கீழக்கரையில் இருவர் கைது.!

Image
  தண்ணீர் கேன்களில் உயர்ரக போதை பவுடரை நிரப்பி இலங்கைக்கு கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பிடிபட்ட இந்த போதை பவுடர் ரூ.300 கோடி மதிப்புடையது என போலீசார் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் இரு தினங்களுக்கு முன் இரவு கடலோர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்கள்  இருந்தன. அதில் அனைத்து கேன்களிலும் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கேன்களை திறந்து அதில் இருந்த பவுடரை எடுத்து சோதித்தனர். அது போதை பவுடர் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கடத்தப்பட்ட போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து, காரில் இருந்த சகோதரர்களான, கீழக்கரை நகராட்சி தி.மு.க.,கீழக்கரை நகராட்சி தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன், 45, தற்போதைய, 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், 42, ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்ப...

அதிமுக ஆட்சியில் முறைகேடாக கொள்முதல் நிலையத்துக்கு அடங்கல் வழங்கிய புகாரில் வி.ஏ.ஓ குமரவேல் கைது - சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை!

Image
  குமரவேல், 2020-ல் அரக்கோணம் அடுத்த பெருமூச்சு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்‍கு மட்டும் இன்று விடுமுறை.!

Image
  மழை காரணமாக தூத்துக்குடி  மாவட்டத்தில் பள்ளிகளுக்‍கு மட்டும் இன்று விடுமுறை.! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - முதல் பரிசை வென்ற தண்டர் 11's அணியினர்!

Image
  தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த வாரம் 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தூத்துக்குடி சங்கரபேரியில் உள்ள SKC மைதானத்தில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 24 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் போட்டித் தொடரை நடத்திய தூடி தண்டர் 11's அணியினர் முதல் பரிசையும், SKC அணியினர் 2வது பரிசையும், MSM அணியினர் 3வது பரிசையும் பெற்றனர். PL.செல்வம் நினைவுக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் சுரேஷ் (பில்லா பிளேடு அணி கேப்டன்), சிறந்த பவுலர் கணேஷ் (MSM அணி) மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் அனீஷ் (தூடி தண்டர் 11's அணி துணை கேப்டன்) தேர்வு செய்யப்பட்டனர். இந்த கிரிக்கெட் போட்டிகளை ஸ்ரீ நம்பையா குரூப்ஸ் தவசு இராமன் முன்னின்று நடத்தினார். பரிசுகளை  T. முத்துராமன் (ஹோட்ட்ல் கிருஷ்ணா, தூடி பைபாஸ்), LR. பாண்டியன் MJF (குருத்து டிரேடர்ஸ்) திரு. சிவாகர்,  திரு. அருண்குமார் ( ஸ்ரீ மகா லெட்சுமி குரூப்ஸ் தூத்துக்குடி) திரு. வடிவேல்ராஜா (கேப்டன் கிங் ஸடார் அணி, தூத்துக்குடி) ஆகியோர் வழங்கினர்.

ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடை சட்டம் : ஒப்புதல் தராத ஆளுனர் - மக்களின் உயிர், பொருள் மீது துளி கூட அக்கறையில்லாமல் இருப்பதுதான் ஆளுநரின் பணியா? - காங்கிரஸ் MLA செல்வப் பெருந்தகை கேள்வி ?

Image
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் நேற்றோடு (27.11.2022) காலாவதி ஆகிவிட்ட நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாட்டில் தடையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, அதை நிரந்தர சட்டமாக்கும் மசோதாவை அக்டோபர் 28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நவம்பர் 24 அன்று. ஆன்லைன் சூதாட்டத்தடை குறித்த ஆளுநரின் விளக்கத்திற்கும் தமிழக அரசு உடனே பதில் அளித்துவிட்டது. தமிழகத்தில் பல நபர்களின் உயிரையும், பொருளையும் பறித்த ஆன்லைன் சூதாட்டம் அவசரத் தடை சட்டம் காலாவதியாகும் தேதிக்கு 3 நாள் முன்புதான் ஆளுநர் விளக்கம் கேட்கிறார். இந்த உயிர் குடிக்கும் விளையாட்டை தடை செய்வதில் தமிழக அரசு உறுதியாக இருந்த நிலையில் அதை நீர்த்துப் போகச் செய்வது போல் இருக்கிறது ஆளுநரின் செயல்பாடு உயிர்குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநரின் செயல் வேதனையளிக்கிறது. தமிழக மக...

தூத்துக்குடி : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - அமைச்சர் கீதாஜீவன் அணிவித்தார்.

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக ஏற்பாட்டின்படி மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் 45வது பிறந்தநாளையொட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்  சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம்,  மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், பிரதீப், பார்வதி, நலம்ராஜேந்திரன்,  சீனிவாசன், அந்தோணிகண்ணன், மாநகர அண...

தூத்துக்குடி :மாப்பிள்ளையூரணி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் - தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.!

Image
  தூத்துக்குடி தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும்  மாப்பிள்ளையூரண ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் தலைமையில் மாப்பிள்ளையூரணியில் 130 தூய்மை காவலர்களுக்கு சேலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணகுமார் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆம்ஸ்ட்ராங், சதீஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் பிரபாகர், இளைஞர் அணி ரமேஷ், குணா, பாலானந்த், குமார், சக்திபாலன், கௌதம், தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்!

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அறிவுரையின் படி மாநில இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி,  தலைமையில் கேக் வெட்டி பொதுமக்கள் பேருந்துநிலையத்தில் உள்ள பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவில் மாநகர துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கவுன்சிலர் தெய்வேந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், செல்வகுமார், ராஜாமணி, மற்றும் ஜோஸ்பர், அருணகிரி, கணேஷ், புதிய பேருந்துநிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்டம் மாநகர 12வது வார்டு சார்பாக ஸ்டேட் பாங்க் காலனி உள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு சேர், கரும்பலகை, குக்கர், பாய் மற்றும் சில பொருட்களை 12 ...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஆட்டோக்களில் வாழ்த்து விளம்பர ஸ்டிக்கர் - அசத்திய வக்கீல் ஜோயல்.!

Image
  திமுக 1949 செப்டம்பர் 15ல் சென்னை ராபின்சன் பூங்காவில் உதயமான நாட்களுக்கு பிறகு கட்சியின் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டுக்கும் மிகப்பெரிய பங்காக இளைஞரணி திகழ்ந்து வருகிறது. 1960ம் ஆண்டுகளின் இறுதியில் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்த அமைப்பின் பேரில் பல கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அது கட்சியின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை. இந்நிலையில் 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்கா திமுக இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது.  1980ம் ஆண்டின் மத்தியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த இளைஞரணி அமைப்பின் துவக்கம் திமுக கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த துவக்க விழாவின் போது முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.எஸ்.தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், துரைமுருகன், தா.கிருஷ்ணன், காவேரி மணியம், தங்கப்பாண்டியன், வைகோ, பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் உள்ள பல அணிகள...

அடுத்த 3 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Image
  கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் - மின்சார வாரியம் தகவல்.!

Image
  மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் அளிப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மின்சாரத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மின்நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க காலதாமதம் ஏற்படுவதாலும், கட்டணம் செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டும், மின்நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு, நவ. 24 முதல் நவ.30ம் தேதி வரை இறுதிநாள் உள்ள மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும். குறிப்பாக, ஒரு நுகர்வோருக்கு நவ....

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு பிறப்புறுப்பை நசுக்கி பாலியல் தொல்லை - 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெறிச்செயல் - தந்தை காவல் நிலையத்தில் புகார்.!

Image
  சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் பாலியல் கொடுமை செய்து, பிறப்புறுப்பை நசுக்கி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 21ம் தேதி எம்ஜிஆர் நகரை சேர்ந்த பவுன் ராஜ் என்பவர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார் அதில், எனது மகன் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மாதம் உடன் படிக்கும் மாணவனுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் சக மாணவர்கள் எனது மகனை அடித்துள்ளனர். இதுகுறித்து நான் பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகம் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் புகார் அளித்தேன். சம்பந்தப்பட்ட மாணவர்களை அவர்கள் நேரில் அழைத்து எச்சரித்தனர். அதன் பிறகு எனது மகனை, கடந்த 21ம் தேதி பள்ளிக்கு செல்ல அனுமதித்தேன். பிறகு பள்ளி முடிந்தவுடன் எனது மகனை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து ‘எங்களை பற்றி ஆசிரியரிடம் புகார் அளிக்கிறாயா’ என்று கூறி, எனது மகனின் பிறப்புறுப்பை கைகளால் கசக்கியும் வ...

வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

Image
 வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த உமாமகேஷ்வரி (45) தனியார் டைப்பிங் இன்ஸ்டிட்யூட் பயிற்சியாளராக உள்ளார்,இவரது மகள் கிருத்திகா(20) தொலை தூர கல்வியில் லயோலோ கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இரவு கோவிலுக்கு செல்வதற்காக மகள் கிருத்திகா இருசக்கர வாகனத்தை ஓட்டியும், உமாமகேஸ்வரி பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.  அப்போது தாம்பரம் மார்க்கமாக வண்டலூர் மேம்பால இறக்கத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத இனோவா கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது  இதில் தூக்கி வீசப்பட்ட தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கோவாவில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது.!

Image
  திருநின்றவூர்: தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கோவாவில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத் கைது! 12-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருப்பூரில் பள்ளி மாணவிக்கு டெங்கு காய்ச்சல்

Image
திருப்பூர் நெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அழகு மீனாட்சி (வயது 9) டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூரில் அண்மையில் பெய்த பருவமழை காரணமாக தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வைரல் காய்ச்சல் மற்றும் புளூ காய்ச்சல் பாதிப்பு பெருமளவு பதிவாகி உள்ளது. அதேசமயம் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர். எனினும் இதுவரை மாநகராட்சி நிர்வாகமோ, சுகாதாரத் துறையோ டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை. திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் நெசவாளர் காலனி பகுதியில் செகண்ட்ஸ் குடோனில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அழகு மீனாட்சி, திருப்பூர் பி.என்.சாலை நெசவாளர் காலனி மாநகராட்சிப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் விடவில்லை. இதையடுத்து  த...

ஆபாச ஆடியோ விவகாரம்... சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாகதிருச்சி சூர்யா சிவா, டெய்சி பேட்டி

Image
 சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பரஸ்பரம் சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாகவும் , எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் திருப்பூரில் கூட்டாக பேட்டி அளித்தனர். பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவரான திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது . இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சூர்யா சிவா குறிப்பிட்ட நாட்கள் கட்சி நிகழ்வில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாகவும் , மேலும் மாநில துணைத்தலைவரான கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் திருப்பூரில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என தெரிவித்திருந்தார் . அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கன...

காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் - ஒழுங்கு நடவடிக்கை குழு.!

Image
  ரூபி மனோகரன் முறையாக பதில் அளிக்கும் வரை அவரை தற்காலிகமாக நீக்கி வைக்க குழு முடிவு - ராமசாமி

இப்படியுமா கொடூரமா பூனை பிடிப்பாங்க... வைரல் வீடியோக்களுடன் மருத்துவமனை மீது புகார்

Image
 தாம்பரம் தனியார் மருத்துவமனையில் பூனைகளை பிடித்து கொன்று விட்டதாக விலங்கின ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்து உள்ளனர். சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் (இந்து மிஷன்) ஏராளமான பூனைகள் சுற்றி வந்துள்ளன. இதில் சிகிச்சை நோயாளிகளை சில பூனைகள் கடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பூனைகளை ஊழியர்கள் மூலம் பிடித்துள்ளனர்.  அப்போது பூனைகளை கொடுமையான முறையில் பிடித்த வீடியோ மற்றும் இறந்தநிலையில் மருத்துவமனை முன்பு கிடந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வரைலானது.   இந்த நிலையில் மருத்துவமனையில் பூனைகள் பிடித்து கொல்லப்பட்டதாகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் விலங்கின ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பூனைகளை பிடிப்பதற்கு என்ன காரணமாக இருந்தாலும் இது போன்ற செயல்பாடுகளை அனுமதிக்கமுடியாது. பூனைகளை கொடுமைபடுத்தி கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்...

டிடிவி.தினகரன் பிறந்தநாளில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்... முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு, முன்னாள் மேயர் அ.விசாலாட்சி பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பிறந்தநாள் விழா குறித்தான ஆலோசனைக் கூட்டம் காங்கயம் ரோட்டில் உள்ள கே.கே.அம்மன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கழக துணை பொதுச்செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு,  கழக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். டிடிவி.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.  இந்த கூட்டத்தில், கழக துணை பொதுச்செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு பேசியதாவது: கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் பிறந்தநாள் விழாவினை கொண்டாடி இருக்கிறோம்; புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளையும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி இருக்கிறோம். நம்முடைய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்திருக்கிறது. பொதுச்செயலாளர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண...

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் பிரதமராக நியமனம்.!

Image
  மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் வியாழன் அன்று பிரதமராக நியமிக்கப்பட்டார் என்றும், மலேசிய நேரப்படி மாலை 5 மணிக்கு பதவியேற்பார் என்றும் சுல்தானின் அரண்மனை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட தொங்கு பாராளுமன்ற விவகாரத்தில் முடிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் சேவையாற்ற திருப்பூர் தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Image
  திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம்பாலிப்பு திருப்பணிக்குழு செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது: டிசம்வர் 6 ஆம் தேதி திருவண்ணாமலை, அருள்மிகு ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குகிறது.  எமது "திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்பு திருப்பணிக்குழு" சார்பில் 40-வது ஆண்டாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும், அங்குள்ள 18 திருமண மண்டபங்களில், கடந்த 39 ஆண்டுகளாக எமது திருப்பணிக்குழு சார்பில், சுமார் 90 இலட்சம் மதிப்பீட்டில் இச்சேவை செயல்பட்டு வருகிறது. நமது திருப்பூர் மாவட்ட பக்தர்களின் பங்களிப்பாக ஆண்டுதோறும் சுமார் 5 டன் காய்கறிகள், 30 இலட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் நன்கொடையாகப் பெறப்பட்டு இச்சேவா காரியத்திற்காக தொடர்ந்து அனுப்பப்படுகிறது. மேலும் சுமார் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் திருப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு தி...