தமிழ்நாடு - அரசுப்பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு, விடுமுறை அறிவிப்பு.!

 

தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6, 8,10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!