தூத்துக்குடியில் 1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸை திருடியவர் கைது.!

தூத்துக்குடியில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த புலமாடன் மகன் சின்னதுரை (40) என்பவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நெக்லஸ் கடந்த 17.01.2023 அன்று காணாமல் போயுள்ளது. இதுகுறித்து சின்னத்துரை இன்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதில் சின்னத்துரையின் உறவினரான கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகன் சின்னதுரை (21) என்பவர் தங்க நெக்லஸை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சின்னத்துரையை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் நெக்லஸையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி