படியில் தொங்கிய மாணவனை தட்டி கேட்ட ஓட்டுனருக்கு அடி உதை!

 தாம்பரம் அருகே பேருந்து படிகட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவனை தட்டி கேட்ட ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை தாம்பரத்தில் இருந்து அகரம்தென் நோக்கி தடம் எண் 31A மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது பேருந்தை ஓட்டுனர் பிரதீப் குமார் இயக்கி வந்தார்,

கேம்ப்ரோடு பேருந்து நிலையத்தில் ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர் படிக்கட்டில் தொங்கியவாறு சாலையில் கால்களை தேய்த்து கொண்டு வந்துள்ளார்,

இதனன ஓட்டுனர் இரண்டு முறை கண்டித்தும் அதே செயலில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் நடு வழியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு கல்லூரி மாணவிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஓட்டுனர் பிரதீப் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

தினமும் பேருந்தில் பயணிக்கும் மாணவன் என்பதால் திருவஞ்சேரி தனியார் கல்லூரிக்கு பேருந்துடன் சென்ற ஓட்டுனர் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்ப் வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்,

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி