சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு, மேஜை, டெஸ்க் வழங்க எம்.எல்.ஏ. பண்ணாரியிடம் கோரிக்கை மனு.
- Get link
- X
- Other Apps
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கொமாரபாளையம் ஊராட்சி பகுதியில் செயல் பட்டு வரும் ,அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயி ன்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய டெஸ்க் பெஞ்ச் இல்லாத நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ் தலைமையில், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம் சரவணன் பி.காம் முன்னிலையில்,,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சதீஷ், சுரேஷ் , வெற்றிவேல், ஜெயக்குமார், சாவித்திரி, பேபி, நதியா, முருகன், ஸ்ரீராம் உள்ளிட்டோர் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் பள்ளி நேரங்களில் முறையாக போக்குவரத்து வருவதில்லை என புகார் தெரிவித்தனர்.மனுவை பெற் றுக்கொண்ட, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண் ணாரி எம் ,.எல். ஏ. இந்த நிதியாண்டில் பள்ளிக்கு தேவையான டெஸ்க், பெஞ்ச் வாங்கி தருவதாக வும்,போக்குவரத்து மேலாளரை தொடர்பு கொண்டு பள்ளி நேரத்தில், முறை யாக பேருந்து விட, நடவடிக் கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினரின் உடனடி நடவடிக்கைக்கு பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில்,எம்.எல்.ஏ. பண்ணாரி க்கு நன்றி தெரிவித்தனர்.
- Get link
- X
- Other Apps