கோவை சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

கோவை சூலூர் 
மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்  அறங்காவலர்  பாபுவாறு தலைமையில் 26.07.2023 முதல் 28.07.2023 வரை நடைபெற்றது.  தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது இதனைத் தொடர்ந்து கல்லூரியின் அறங்காவலர்  பாபுவாறு தேசிய கொடியையும் கல்லூரி முதல்வர் முனைவர் செ.ஷாலினி பாக்கியம்கமலா கல்லூரி கொடியையும் கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.ஆர். தனலட்சுமி விளையாட்டுக் கொடியையும் ஏற்றி வைத்தார்கள். கல்லூரி முதல்வர் சிறப்புரை வழங்கினார்.
விளையாட்டுப் போட்டியை அறங்காவலர் மகிழ்வுடன் தொடங்கி வைத்தார். சூலூர் சுற்றுவட்டாரப் பள்ளி மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவுற்றது இதில் சிறப்பு விருந்தினராக  முத்தையா தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார்.  சிறப்பு விருந்தினர் பேசுகையில் விளையாட்டுகளின் முக்கியத்தை எடுத்துரைத்து மாணவியர்களை ஊக்குவித்தார் .அதன்  பிறகு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்.  உடற்கல்வி இயக்குனர் செல்வி தாரணிப் பிரியா கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார் கால்பந்து  பயிற்சியாளர் சக்திவேல் அவர்கள் மாணவியர்களை வழிநடத்தினார் இறுதியில் நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி