தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு தாக்கல்.!


 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு தாக்கல்.!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி மாவட்ட ஆட்சியர் /அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். த.மா.கா. சார்பில் விஜயசீலன் போட்டியிடுகிறார்.

திமுக மாற்று வேட்பாளராக  ஆர்.வேலுச்சாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் .

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி