"பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும்" : தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!


 "பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும்" : தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து நேற்று மாலை பிரசாரம் செய்தார்.

இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு  அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்ததாக பேசுகிறீர்களே அதற்கான ஆதாரம் உள்ளதா?  திமுகவுடன்  பாரதிய ஜனதா கள்ளக்கூட்டணி வைத்தற்கான ஆதாரத்தை வாக்களப் பெருமக்களாகிய உங்களிடம் காட்டுகிறேன் என்று புகைப்படத்தை காட்டினார். 

பிரதமர் தமிழகம் வந்தபோது, முதல்வராக இருந்த நான் பல் இளித்தேன் என்கிறார் உதயநிதி. நீ என்ன பண்ணிட்டு இருக்க? நீயும் அதேதான பண்ணிட்டு இருக்க? நீ சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா? என்று கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கோ பேக் மோடி என்று தமிழகம் முழுவதும் விளம்பர போர்டுகளை வைத்து எதிர்ப்பை காற்றினீர்களே? ஆனால் இன்று வெல்கம் மோடி என்று கூறுகிறீர்களே. 

நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால் அதை செய்யவில்லை. நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி. பதவி ஆசை எங்களுக்கு எப்போதுமே கிடையாது. தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பின்போது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்து கொடுத்தது அதிமுக தான். ஏற்கனவே மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி