வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : இன்று (ஏப்.20) இயக்கப்படுகிறது!


 வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக  சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : இன்று (ஏப்.20) இயக்கப்படுகிறது!

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக  தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே சாதாரண பொதுப் பெட்டிகளுடன் இன்று (ஏப்.20) சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது. 

தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் இந்தச் சிறப்பு ரயிலை அதிக அளவில் பயன்படுத்த வேண்டுகிறோம் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி