ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!!


 ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36கோடியே 13 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமாரேசன்(46) என்பவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி பாலகுமாரேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்  ஆய்வாளர் அந்தோணியம்மாள் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைத்தார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி