நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, இறுதிக்கட்ட பிரச்சாரம். சத்தியில், அதிமுகவினர், பேரணியாக சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.


 தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதற் கட்டமாக, நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நடை பெறுவதை யொட்டி, இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிற நிலையில், நீலகிரி  நாடாளு மன்ற தொகுதி, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க, சத்தியமங்கலம் எஸ் .ஆர். டி. கார்னர் பகுதியில் இருந்து ஏராளமான அதிமுகவினர்,பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அ . பண்ணாரி பி.ஏ. எம்.எல்.ஏ. தலைமையில், ஆயிரத் திற்கும்மேற்பட்டோர்,பேரணியாக,சத்திய மங்கலம் நகரின் முக்கிய வீதிகள் வழி யாக கோட்டுவீராம்பாளையம் வரை சென்று, இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியில், அதிமுக மாவட்ட, ஒன் றிய, ,நகர, கிளைக் கழக நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள், அதிமுக சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி யினர்,இளைஞர்,இளம்பெண்கள்பாசறை னர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி யினர் அதிமுக தொண்டர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி