கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பெஞ்ச் டெஸ்க்குகள் வழங்கும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 12 அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், மாணவ,மாணவியர்களுக்கு பள்ளியில் அமர்வதற்க்காக பெஞ்ச்,டெஸ்க்குகளை(Bench ,Desk), பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.22,92,000 மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., அவர்கள் கலந்து கொண்டு தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். உடன் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்,மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பெஞ்ச்,டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி