புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் 7/7/2024 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. கழகத்தின் தலைவர்  பேராசிரியர் மு. ராமதாஸ் அவர்கள் தலைமையில் சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொது செயலாளர் எ. மு. ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக கழகம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் , எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணி குறித்து செயல்பட வேண்டிய எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசித்து தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் நித்தியானந்தம் ,  ஆனந்தன், மாநில செயலாளர் ரவிகுமார், மாநில இணை செயலாளர்கள்  பூ. பெருமாள் , முருகன், இளங்கோவன், துணை செயலாளர்கள் கலியபெருமாள் , கஜேந்திர பாஸ்கர் , வேதராமன் , சித்தானந்தம் , ரகுபதி, சோமசுந்தரம் , இதய வேந்தன், கலிவரதன் , உதவி செயலாளர் ஆண்டாள், மகளிர் அணி தலைவி விமலா பெரியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி