உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சி நண்பர்கள் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையவேண்டும் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் அழைப்பு

உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சி நண்பர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையவேண்டும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் அழைப்பு

புதுச்சேரி தற்போது மக்களுக்காக பணியாற்றும் நல்ல தலைவர்களை இழந்து வெற்றிடமாக, , தலையில்லாமல் உயிரற்ற உடலாக காட்சியளிக்கிறது. நல்ல தலைவருக்காக புதுச்சேரி மக்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் . மக்கள் ஏக்கத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஒரே தகுதி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மட்டும் தான் உள்ளது. புதுவையில் தற்போதய மோசமான அரசியல் நிலை நீடித்தால் புதுச்சேரி மக்களையும் , வருங்கால சந்ததியினரையும் யார் காப்பாற்றுவது. 
அதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம். இது மற்ற கட்சிகளை போல் தலைமையிடத்தில் அனுமதி பெற காத்து கிடக்கவோ , தவறான கூட்டணியை ஏற்படுத்தி மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடும் கட்சி அல்ல. மக்கள் நலனுக்காக , வருங்கால சந்ததியினரை காப்பாற்றுவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கீழூர் கிராமத்தில் உருவாக்கப்பட்டது தான் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகம்
என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசியலில் மக்கள் நலனில் அக்கரை கொண்ட மக்கள் தலைவர் வ. சுப்பையா அவர்களுக்கு பிறகு பா. கண்ணன் அவர்களையும் , அதற்கு அடுத்து என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மீதும் மக்கள் நம்பிக்கையும் , அன்பும் கொண்டனர். 
அவரும் ஆரம்பத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல் பட்டதை மறுக்க முடியாது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் , இரட்டை என்ஜின் ஆட்சி இருந்தால் தான் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற முடியும் என்று கூறி வாக்குறுதி கொடுத்து விட்டு , ஆட்சி பீடம் ஏறியதும் தனது சுயநலத்திற்காக மக்கள் நலன் மறந்து, மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் செயல்பட்டதால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டினர். இதனால் மக்களின் செல்வாக்கை ரங்கசாமி இழந்தார். இந்த தேர்தலுக்கு பிறகு பிஜேபி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் அடுத்த கட்ட தலைவர்கள் , தொண்டர்களிடையே, ஏமாற்றமும் மாற்று கருத்தும் உருவாகியுள்ளது. அதே போன்று எதிர்க்கட்சிகளிடமும் , மணமாற்றமும் வெளியில் சொல்லமுடியாத மணக்குமுறலும் , ஏமாற்றமும் உள்ளது. தற்போது புதுச்சேரி அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது . அதை நிரப்ப நாங்கள் தயாராக உள்ளோம். பூனைக்கு யார்.மணி கட்டுவது என்று மக்கள் நினைத்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் , மக்களுக்காக பணியாற்ற பூனைக்கு மணி கட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. ராமதாஸ் அவர்களின் தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்றும், புதுவையில் ஜனநாயகம் தழைத்தோங்க, அதற்கு உறுதுணையாக உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் , நண்பர்கள் அடுத்தகட்ட தலைவர்கள் தொண்டர்கள் மக்கள் நலன் கருதி புதுச்சேரி மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கழகத்தின் சேர்மன் என்ற முறையில் அன்புடன் அழைத்து, மகிழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!