நண்பனின் இரு குழந்தைகளை கொலை செய்த வாலிபர்... நரபலியா? போலீஸ் விசாரணை!

 குடியாத்தம் அருகே நண்பணின் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொலை செய்த பட்டதாரி பில்டிங் காண்ட்ராக்டர் கைது- இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை - 2 சிறுவர்களை கொலை செய்து நரபலி கொடுத்தார்களா என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிபட்டி  கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டரான வசந்த்குமார் என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யோகராஜ் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் கட்டிட கான்ட்ராக்டர் வசந்த்குமார் என்பவருக்கு கடந்த அண்டு திருமணமான நிலையில்  மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை வசந்தகுமார் மாதனூர் பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளியான நண்பர் யோகராஜ் வீட்டிற்கு சென்று யோகராஜ் மனைவியிடம் பேசிவிட்டு கடைக்கு சிறுவர்களை அழைத்து செல்வதாக கூறி அவர்களின் இரண்டு  பிள்ளைகள் யோகித் (5 வயது) தர்ஷன் (4 வயது) இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பல மணி நேரம் ஆகியும் வசந்தகுமார் வராத காரணத்தினால் அவர் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் ஆன நிலையில் யோகராஜ் தனது உறவினர்களுடன் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அனைத்து காவல்துறையினருக்கும்  வாக்கி டாக்கி மூலம் இரண்டு சிறுவர்களை இருசக்கர வாகனத்தில் நண்பனே கடத்தி சென்றுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து காவல்துறையினரும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தன. 

மேலும்  வசந்தகுமாரின் செல்போன் என்னை ஆய்வு செய்ததில் சிங்கில்பாடி ஏரிப்பட்டி கிராமத்தில் செல்போன் டவர் மூலம் வசந்த் குமார் அங்கு இருப்பதாக போலீசார் கண்டுபிடித்தனர். சிறிது நேரம் கழித்து சிங்கல்பாடி எரிபட்டி கிராமத்தில் உள்ள கோவில் பின்புறத்தில் இரண்டு ஆண் சிறுவர்கள் சடலம் அருகே வசந்தகுமார் அமர்ந்து இருந்ததும் பொதுமக்களை பார்த்தவுடன் வசந்தகுமார் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே குடியாத்தம் மற்றும் ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  சிறுவர்களின் சடலத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் அந்தப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டதில் விவசாய நிலத்தில் இருசக்கர வாகனம் ஒன்று இருப்பதாக கிராம மக்கள் கூறிய நிலையில் போலீசார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அங்குள்ள விவசாய நிலம் மற்றும் வீடுகளில்  பொதுமக்கள் உதவியுடன் கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்

மேலும தேடுதலின் போது   வசந்தகுமார் தனது பாட்டி வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த வசந்தகுமாரை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து ஆம்பூர்  கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷிரியாகுப்தா தலைமையிலான குடியாத்தம் டிஎஸ்பி மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பனின் இரண்டு ஆண் சிறுபிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொலை செய்த பட்டதாரி காண்ட்ராக்டரால் இரவிலும் அந்த கிராம மக்கள் அச்சமடைந்து சோகத்தில் மூழ்கினர். மேலும் கிராம மக்கள் கூறுகையில் கொலையாளி வசந்தகுமார் மனைவியை பிரிந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்

மேலும் கொலை சம்பவம் குறித்து போலீஸ் சார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர் . சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!