விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில், காவல்துறையினர் கொடி அணிவகுப்பு .


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராம பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில், இந்து முன்னணி மற்றும்பல்வேறுசமூகஅமைப்புகளின் சார்பில்,ஆங்காங்கேவிநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடை பெற உள்ளது. இதனையொட்டி, சத்தியமங்கலம் உட்கோட்ட  காவல் துறை சார்பில், சத்தியமங்கலத்தில், சத்தியமங்கலம் டி.எஸ்.பி.எம்.எஸ். சரவணன் தலைமையில், காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும்,பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் வகையில், காவல் கொடி அணிவகுப்பு நடை பெற்றது. 


காவல் கொடிஅணிவகுப்பில், புஞ்சை புளியம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், பவானிசாகர் காவல் ஆய்வாளர் அன்னம், சத்திய மங்கலம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் குருசாமி, மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், காவல் அதிரடி படையினர் மற்றும் உட்கோட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர். 


 கொடி அணி வகுப்பு ஊர்வலம், 
சத்தியமங்கலம் காவல் நிலையம் துவங்கி, சத்தியமங்கலம்  நகர பகுதி யில்,கடைவீதி,கோட்டுவீராம்பாளயம், மணிக்கூண்டு, பள்ளி வாசல்,  சத்யா தியேட்டர், வடக்குப் பேட்டை, சுல்தான் சாலை வழியாக சென்று, அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி