கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை-ஆட்சியர்

டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்ற எல்.பி.ஜி. டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி வாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

டேங்கரில் இருந்து வாயு கசிவதால் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

டேங்கர் லாரியில் இருந்து 4 மணி நேரமாக எரிவாயு கசிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, டேங்கர் லாரியை கிரேன் மூலம் தூக்க முயற்சித்து வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!