இன்னும் ஆறு மாதத்தில் அதிமுக ஆளுங்கட்சி.. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் வருகின்ற 11, 12ம்  தேதிகளில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக பகுதிகளுக்கு வருகை தரவுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும்,முன்னாள் துணை சபாநாயகருமான  பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். 

திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர்  ஒன்றிய கழக செயலாளருமான கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். 

மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர்  கண்ணுச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  பிரேம்குமார் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது: 

அதிமுகவில் உழைத்தால் அனைவருக்கும் நிச்சயம் நல்ல பொறுப்புகள் வழங்கப்படும், அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும், தங்களால் இயன்ற தலைப்பை முழு அர்ப்பணிப்போடு கழகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், எடப்பாடியார் திருப்பூர் வருகை தருவது உங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றும், ஆறு மாதத்தில் நாம் ஆளும் கட்சியாகி விடுவோம், எனவே இது நாம் அனைவரும் உழைப்பதற்கான நேரம் என்றும், இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் அனைவரும் ஒரே விதமான ஆடைகளை அணிய வேண்டும், அதே போன்று ஐடி விங் நிர்வாகிகள் எடப்பாடியார் வருகை தொடர்பாக தினம்தோறும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும், முக்கியமாக மிக வேகமாக செயல்பட வேண்டும் என்றும், உழைத்தால் மட்டும் தான் உயர்வு வரும்.உங்கள் உழைப்பில் தான் கட்சியின் உயர்வு உள்ளது . நீங்கள் தான் கட்சி உங்களால் தான் எடப்பாடியார் முதல்வர் ஆகிறார். 2026 தேர்தலில் எடப்பாடியார் முதல்வர் ஆவது உறுதி. 50, 60 ஆண்டுகாலம் கட்சியில் இருப்பார்கள் அவர்களுக்குத்தான் பதவி வரும் என்று எண்ணாதீர்கள். சி பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு உழைத்ததால் மட்டுமே அவருக்கு துணை ஜனாதிபதி பதவி வந்துள்ளது என்றும் அதேபோன்று நீங்கள் உழைத்தால் அதிமுகவில் அமைச்சர், முதலமைச்சர் கூட  ஆகலாம் இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார். 

இந்நிகழ்வில், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளருமான  என்.எஸ்.என்.நடராஜ்,  தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும்,மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  அன்பகம் திருப்பதி,திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும்,மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்  பட்டுலிங்கம், மாவட்ட கழக இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் பூலுவபட்டி பாலு, லட்சுமி, மாவட்டக் கழக பொருளாளர்  கிஷோர்குமார்,கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன்,கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி.கே.எம்.முத்து,முருங்கப்பாளையம் பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன்,கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர்  ஹரிஹரசுதன்,நல்லூர் பகுதி கழக செயலாளர் வி.பி.என்.குமார், நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் நாச்சிமுத்து  வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் திலகர் நகர் கண்ணப்பன், புதிய பஸ் நிலையம் பகுதி கழக செயலாளர்  கனகராஜ்,சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர்  தங்கராஜ்,கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர்  சிவளா தினேஷ், சென்னிமலை மத்திய கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்  கோபாலகிருஷ்ணன்,சென்னிமலை மத்திய மேற்கு ஒன்றிய கழக செயலாளர்  தங்கவேல்,வெள்ளகோவில் ஒன்றிய கழக செயலாளர் விஸ்வேஸ்வரன், வெள்ளகோவில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட சுதர்சன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர்  அட்லஸ் லோகநாதன்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்  கண்ணபிரான்,மாவட்ட மகளிர் அணி செயலாளர்  சுந்தராம்பாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  முருகேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாள வேல்குமார் சாமிநாதன்,மாவட்ட மாணவரணி செயலாளர் சதிஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்  தம்பி மைதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல்,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர்  ரத்தினகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் யுவராஜ் சரவணன், மண்டல தகவல் தொழில்நுட்பபிரிவு இணை செயலாளர்  கார்த்தி ,மாவட்ட அண்ணா பாத்திர தொழிற்சங்க செயலாளர் குணசேகரன்  உள்பட பலர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி